Wednesday, March 25, 2015

MLM & so called Its not MLM - Business Opportunity

சமீப காலமாகவே வெறி பிடித்துத் திரியும் நம்மில் பலரைப் பற்றிய சிறு பதிவு.

சாப்புடலாம்-ன்னு தனியா கடைக்கு போனேன்.
ரொம்ப நல்லவன் மாதிரி ஒருத்தன் வந்து பேச்சு கொடுத்தான்.,

ஹாய் நான் இந்த ஏரியாலதான் இருக்கேன்., நீங்க எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க?
ஓ அந்த கம்பெனியா, அங்கேதான் என்னோட நண்பன் வேலைல இருக்கான்.. அது இது-ன்னு நல்லா நேரம் போற மாதிரி பேசுனான்.

கடைசில கிளம்புபும் போது நட்பு நிமித்தமா நம்பர வாங்குனான்.

ஒரு ரெண்டு நாள் கழிச்சு போன் வந்தது..

நான் உங்களுக்கு ஒரு பிஸினஸ் வாய்ப்பு கொடுக்கலாம்-ன்னு இருக்கேன். வேலை நேரம் போக மீதி ஓய்வு நேரத்துல நீங்க இதுல கொஞ்ச நேரம் வேலை செஞ்சா பொதும், மாசம் 25ஆயிரம் வரை சம்பாரிக்கலாம்-ன்னு பில்டப் எல்லாம் கொடுத்தான்.
நாம யாரு, ஏற்கனவே MLM அது இது-ன்னு பார்த்துருக்கோம்-ல்ல

இல்லப்பா எனக்கு சைடு பிஸினஸ் ல எல்லாம் விருப்பம் இல்ல-ன்னு சொல்லி போன வைக்கப் போனேன்.,
அவன் விடுறதா தெரியல...

நீங்க எனக்கு ஒரு 10 நிமிஷம் கொடுங்க, நான் இந்த ப்ராடக்ட்ட பத்தி உங்ககிட்டே சொல்றேன்., அதுக்கு அப்புறம் செய்யுறதும், செய்யாததும் உங்க விருப்பம்..-ன்னு கால்ல விழாத குறையா கெஞ்சுனான்...

சரி போய் தொலை நாயே-ன்னு அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, நல்ல புத்தி சொல்லி திருத்தி அனுப்பலாம்-ன்னு நினைச்சு அவன வரச் சொன்னேன்.

என்னமோ எழவு வென்ச்சர் கம்பெனியாம்.,
30000 ரூபா ட்ராவல் பேக்கேஜ்
நீங்க ரெண்டு பேர சேத்தி விட்டா, உங்களுக்கு 5000 கமிஷன்
நீங்க சேத்தி விட்ட ரெண்டு பேரு 4 பேர சேத்து விட்டா, உங்களுக்கு 10000 கமிஷன்

அப்படி இப்படி-ன்னு அளந்தான்.


என்ன ஒரு வார்த்த கூட பேச விடல.,
ஒரு கட்டத்துல, நிறுத்துடா..ன்னு கத்தி

எனக்கு கீழ 10 லெவல் இருக்கு, அதுல பத்தாவதா வாங்குற ஒருத்தன் கொடுக்கறதே 30000 ரூபா இதுல பத்து லெவலுக்கும் கமிஷன் மட்டுமே 45000 ரூபா போவுது.,  இது எந்த விதத்துல சாத்தியம்?
அப்படியே அந்த கமிஷன் கிடைச்சாலும் எனக்கு அப்படி கிடைக்கற வருமானம் வேண்டாம் மூடிட்டு போ-ன்னு திட்டி அனுப்பினேன்.

உனக்கு ஸ்கில் இல்ல, ஆளுமை இல்ல, அது இல்ல இது இல்ல, நீ பயப்படுற.. அதா இதா-ன்னு சொன்னான்.

அதப் பத்தி கவலை பட வேண்டியது நீ இல்ல -ன்னு ஒருசில கெட்ட வார்த்தைகள்ல அவனுக்கு புரிய வச்சு விரட்டி அடிச்சேன்.

என்னோட நேரம் வீணானதுதான் மிச்சம்.
எவ்ளோ டென்ஷன் இவனுங்களால...

பார்க்-ல நிம்மதியா ஒரு அஞ்சு நிமிஷம் உக்கார முடியல.

பஸ்ல சக பயனியா உட்காந்தும் இம்சை கொடுக்கறானுங்க.

பொது இடங்கள்ள தனியா போறதுக்கே யோசிக்க வேண்டியதா இருக்கு.,

இது Tree Business -ன்னு சொன்னா, இல்லவே இல்லைன்னு சாதிக்குரானுங்க.

பணம் சம்பாதிக்கணும்-ன்ற பேராசை இவனுங்களோட அறிவுக் கண்ணை எவ்ளோ தூரம் மறைசிருக்கு பாருங்க?

இவுனுங்க வெறும் அம்புதான், இவுனுங்கள எய்த ஒரு சதுரங்க வேட்டை காந்தி பாபு, அடையாளமே இல்லாம திரியறான். அவன் மட்டும் என் கைல கிடைச்சான், வகுந்துருவேன்...

நீ வாழு, சாவு., என்ன வேணும்னாலும் செய்., ஆனா என்னை மாதிரி சும்மா இருக்கற சாதாரண மனிதர்கள பிசினஸ் வாய்ப்பு-ன்ற பேர்ல இம்சை பண்ணாதே....


Don't approach me for showing your expertise in Convincing Skills.
I know you are well trained., but my answer for all your business opportunity is.... 

Piss off.


No comments: