Wednesday, November 18, 2015

செர்லாக் கோம்சும் (Sherlock Holmes) தனி ஒருவனும்

யாரிந்த ஷெர்லாக் ஹோம்ஸ்?
ஏதோ எல்லாமே தெரிஞ்ச மாதிரியே பேசிக்கறானுங்களே...

சிங்கத்தின் பார்வையில் ஷெர்லாக் ஹோம்ஸ் இதோ...

18ம் நூற்றாண்டின் பின் பாதிகளில், சர் ஆதர கொனன் டயல் எனும் பிரேத பரிசோதனை மருத்துவர்,  அவருக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்த படைப்பாளிய ஒரு நாள் தட்டி எழுப்பினார்.

Sherlock Holmes (/ˈʃɜrlɒk ˈhmz/) is a fictional character created by British author and physician Sir Arthur Conan Doyle. A London-based "consulting detective" whose abilities border on the fantastic, Holmes is known for his astute logical reasoning, his ability to adopt almost any disguise, and his use of forensic science to solve difficult cases.

பிரேதங்களைப் பற்றிய அனைத்தும் அவருக்கு அத்துப்படி ஆனதால, மிக மிக சிறிய ஆதாரங்களை வைத்து பெரிய கடின குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாம் என்பது டாயல் கருத்து.


அதன்படியே, அவரும் ராஜேஷ் குமார் மாதிரி க்ரைம் நாவல எழுத ஆரம்பிச்சாரு. அவர் எழுதின கதைகள்ல வரும் நாயகனின் பாத்திரமே இந்த ஷெர்லாக் ஹோம்ஸ். மற்றும் சந்தானம் மாதிரி ஒரு ஜான் வாட்சன். சும்மா சில்றத் தனமா வெறும் கொலை கொள்ளைகள கண்டுபிடிச்சா நம்ம ஹீரோவுக்கு என்ன வித்தியாசம்? அதனால உலகப் போரை உருவாக்கும் வல்லமை படைத்த ஒரு வில்லன் மொரியார்ட்டி. அவனோட புத்திசாலித் தனமான போர்த் தந்திரங்களை, ஷெர்லாக் தனது தடயவியல் நுணுக்க அறிவைக் கொண்டு எப்படி முறியடிக்கறார் போன்ற கதை.  

இமைகள் வலிக்கறது கூட தெரியாம படிக்க வைக்கும் அளவு சுவாரஸ்யம் மிக்க கதைகளா எழுதி தள்ளிட்டு,டாயல்  செத்து போயிட்டாரு.



ஆனா, அவரோட கதைகள, பாகவதர் காலத்திலும் படமா எடுத்தாங்க.
ரஜினி கமல் காலத்திலும் எடுத்தாங்க.
விஜய் அஜித் காலத்திலும் எடுத்தாங்க.
இன்னும் எடுத்திட்டு இருக்காங்க.

இது மட்டும் இல்லாம, மெட்டி ஒலி  நாதஸ்வரம் காலத்திலும் சீரியல்களா பிபிஸி எடுத்து தள்ளி இருக்கு.


ஆனா, நம்ம ரீமேக் ராஸா, எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய்,

ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தையே தமிழ்ல தன்னோட பாணில சொந்தமா தனி ஒருவன்-ன்னு ஒரு படமா எடுத்து கொடுத்திருக்காரு.


மித்ரனாக வலம் வரும் ஸ்பைடர் வெப் அனாலசிஸ், அல்டிமேட் ஐ பி எஸ் ரீமேக் ரவி, தமிழில் ஷெர்லாக்-ன் பாத்திரத்தை கன கச்சிதமாக செய்து இருக்கிறார்.


சித்தார்த் அபிமன்யுவே, நமது உலகத்தரம் வாய்ந்த கிருமினல் மொரியார்டி.

ஐரின் அட்லாராக நயன்.

டின் டிங்ட டின்.. எனும் தீம் அப்படியே சிறிது பட்டி டிங்கரிங் பார்த்து செருகப் பட்டிருக்கிறது.

மீதமுள்ள இனம் புரியாத பொருத்தங்களை நீங்களே பாத்து கண்டறிய விடுகிறேன்.

எப்படி த்ருஷ்யம் பாத்ததால எனக்கு பாபநாசம் பிடிக்கலையோ, அதே மாதிரி, ஷெர்லாக் படம் ஒன்னு விடாம பாத்ததால, தனி ஒருவன் படத்த என்னால பாராட்டாம இருக்க முடில. தமிழில் ஒரு நல்ல முயற்ச்சியே என்று கூறுவேன்.

படம் நல்ல படம்தான்.
பார்க்கலாம்.

ஆனால் இது சுட்ட பழம்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், தனி ஒருவன் நல்ல பிரிண்ட் இணையத்தில் வராமல் பார்த்துக் கொண்ட [ஒரு மாத அளவில்] ராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள்.





  

No comments: