Friday, December 26, 2014

டிவிட்டரும் நானும்

சரி, எல்லாரும் சமூக வலைத்தளம் facebook, twitter -ன்னு பேசிக்குறாங்க,
அப்படின்னா என்ன?
அதுல அப்டி என்னதா இருக்கு?

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த மக்களை, ஒன்று சேர்க்கும் இடம்-ன்னு சொல்லலாம்.
நீங்க மொதல்ல
https://www.facebook.com/
http://www.twitter.com/
... etc போன்ற ஏதாவது ஒரு சமூக வலைத்தளத்துல
உங்களுக்குன்னு ஒரு கணக்க [Account] உருவாக்கணும், பிறகு, நீங்க விருப்பப் பட்டால், உங்களைப் பத்தின விபரமெல்லாம், வெளி உலகத்துக்கு சொல்லலாம்.

அண்ணன் நல்லவர்,
வல்லவர்,
படித்தவர்,
கலியாணம் ஆனவர்,
புள்ள குட்டிகாரர்,
குடும்பஸ்தர்,
ஞாயமானவர்,
புளியம்பட்டில இருக்காரு,
புண்ணாக்கு யாவாரம் பின்னுவார்,

அப்படி இப்படி-ன்னு நீங்க உங்க அருமை பெருமைகள எல்லாம் உங்க கணக்கு மூலமா,  உலகத்துக்கு சொல்லலாம்...

என் பையன் என் மேல ஒன்னுக்கு விட்டான்-ன்னு உங்க மொபைல் கேமரால இருந்து, நனைஞ்ச சட்டையோட போட்டோ புடிச்சி போடலாம், அத ஊரே சேந்து பாத்து சிரிச்சி, 200 லைக் போட்டு காறித்துப்பும்.

இதனால என்ன கிடைக்குது?
ஒன்னும் இல்ல.

"தகவல் பகிர்தல்"
உங்க வாழ்க்கைல நடக்குற விஷயங்கள் எல்லாத்தையும், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் முன்னால் காதலிகள் உட்பட அனைவருக்கும் ஒரே ஒரு பதிவு மூலமா தெரிவிக்கலாம்.

நான் மறுபடியும் சொல்றேன், நீங்க விருப்பப்பட்டால் மட்டுமே தெரிவிக்கலாம்..

நானும் இந்த மூஞ்சி புத்தகத்துல [facebook] ரொம்ப நாளா இருக்கேன்., இது என்ன அவ்வளவா பாதிச்சது இல்ல.,
அப்பப்போ ஏதோ போட்டோ போடுவேன், ஏதாவது காமெடி கீமெடி வந்தா அத பகிர்ந்துக்குவேன்..

இப்படி நல்லா போயிட்டு இருந்த என்னோட வாழ்கைல ஒரு நாள் அவ வந்தா,

ஏய் கட்டம் போட்ட சட்ட, பாலாப் போன டிவிட்டரே உன்னாத்தாண்டி சொல்றேன்., எங்கே ஓடுற?

நண்பன் மொபைல்-ல இருந்து சில ட்விட்டர் பதிவுகள (கீச்சு) காமிச்சான்...
ஊரே சேந்து ஒருத்தன ரவுண்டு கட்டி அடிச்சிட்டு இருந்தாங்க, (வேற யாரு நம்ம விஜய்னாவைத்தான்.)
ரொம்ப ரசனையா, நகைச்சுவையா  இருந்தது, சிரிக்கவும் வச்சது.,

ஆனா, ட்விட்டர் வந்தப்புறம் தான் தெரிஞ்சது, இவுனுங்க வச்சி செய்யறானுங்கன்னு.

சமீப மாதங்களில்தான் நான் டிவிட்டரில் பிரவேசிக்க ஆரம்பித்தேன்.,

பெரும்பான்மை மனிதர்களின் "மனசாட்சி" அவர்களின் ஏதோ ஒரு முகமூடியுடன் உலவும் இடம் இந்த ட்விட்டர்.

ஒரு சின்ன உதாரணம் விலைமகள் எனும் ஐடி, அதன் பதிவுகள் என் மனநிலையை பாதித்தது.

நீங்க யாருன்னு காட்டிக்காமையே, என்ன வேணாலும் எழுதலாம் என்பதே ட்விட்டரின் சுதந்திரம். 

முகநூலில் உங்களுடைய  குறைந்த பட்ச அடையாளமாவது தெரியும், [முகநூலிலும் போலிக்  கணக்குகள் உண்டு ஆனால் அவை ட்விட்டர்  அளவில் பிரபலம் ஆவதில்லை] உங்களுக்கு தெரிந்தவர்களே பெரும்பாலும் நட்பு வட்டத்தில் இருப்பார்கள்.

ஆதலால், கூட்டத்துல நாம கட்டுசோற பிரிப்பதில்லை. நானும் ரொம்ப டீசண்டு என்ற போர்வையில், சொல்ல நினைச்சத சொல்லாம போய்டுவோம்.

ஆனால், ட்விட்டரில் மிகமிகக் குறைவான நபர்களே, தங்களின் சொந்த முகத்தில், சொந்தப் பெயர்களில் கீச்சுகிறார்கள். [@Singamulla என்பது என்னுடைய அன்அபிசியல் ஐடி. என்னுடைய பெருன்பான்மை மைண்ட் வாய்ஸ் counter கொடுக்க சந்தானம் முகம் தேவைப் பட்டது.]

ட்விட்டர் உங்ககிட்டே ஆதார் அட்டை கேக்காது, நீங்க என்ன கொடுத்தாலும் வாங்கிக்கும்.,

ராமசாமி மவன் முனியன் பேருல ஒரு ஐநூறு ரூவா எழுதிக்க-ன்னு சொன்னா கூட ட்விட்டர் அத வாங்கிக்கும்.

போலிக் கணக்குகளே ட்விட்டரில் பிரபலங்கள்.

உங்களுடைய சொந்த அடையாளம் வெளியே தெரியாது-ன்னு உங்களுக்கு ஒரு தைரியம் வந்துடும்., மனசுக்கு பட்டத அப்படியே பதிவுகளா, விமர்சனங்களா, கவிதைகளா, கிசுகிசுக்களா, கெட்ட வார்த்தைகளா, கொச்சை வரிகளா.,
உங்கள் மனசாட்சி பிரதிபலிக்கத் தொடங்கும்.

உடனுக்குடன் செய்தி,
பொறணி பேசுறது,
கலை, கவிதை, விமர்சனம், கலாய்ப்பு -ன்னு பொண்ணுங்கள எத்தன வகையா பிரிக்க முடியுமோ அதைவிட அதிகமான வகையறாக்கள் ட்விட்டரில் உண்டு.

எனக்குத் தெரிந்த வரை, நடிகர் விஜயின் முக்கிய எதிரிகள் இங்கேதான் இருக்காங்க.

பெரும்பான்மை பெண் ஐடிக்கள் போலி.
மொச புடிக்கற நாய மூஞ்சப் பாத்தா தெரியாது?

கவுண்டமணி, வடிவேலு போன்ற காமெடி நடிகர்களின் முகமூடிகளையும் மாட்டிகிட்டு கண்டபடி எழுதிக் கிழி கிழின்னு கிழிக்குறாங்க.

டிவிட்டர்ல ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னான்னா, 140 எழுத்துக்களுக்கு மிகாமல் உங்களுக்கு என்ன தோணுதோ நீங்க ஒரு பதிவுல எழுதலாம். அதனால அலுப்பு தட்டாது.

நானே ஒரு சில ஹைக்கூ கவிதைகள டிவிட்டர்ல கீச்சி இருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

சரி என்ன பிரச்சன, ஏன் இப்ப அழற?

நான்தான் சொன்னேன் இல்ல, மனசாட்சி எப்பவும் உண்மையே பேசும். ஒருத்தன் சொல்றது உங்களுக்கு புடிக்காது, உடனே நீங்க அவன காறித் துப்புவீங்க,

அவன் உடனே கூட்டமா சேந்து உங்கள காறித் துப்புவான்... இப்படி தினசரி சண்டைகள் ஏராளம்.

நாள்பட, அடிமையாகி விடுவீர்கள். டிவிட்டரே கதி என்று எந்நேரம் பார்த்தாலும் மொபைலையே நோண்டிக்கொண்டே இருப்பீர்கள்.

ட்விட்டரில் எதிரிகள் அதிகம்.

ஏன் என்னை பின்தொடர்வதை நிறுத்துனீர்கள்-ன்னு அழுவார்கள்.

உனக்குப் பிடிச்சா follow செய், இல்லான்னா போ-ன்னு நீங்க சொல்றது கேக்குது.

ஆனா, இங்கே நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு சுலபமா தெரியாது.,
ஒரே பதிவுல ஒருத்தன வெறுத்திட முடியாது, அவன் மனசாட்சி என்ன எழுத சொல்லுதோ, அத அவன் அப்படியே எழுதுறான்.

நிறைய பாலோவர்ஸ் வேண்டும் என நானும் ஆசைப்பட்ட சில நாட்கள்  உண்டு.

இப்படி நானும் இந்த டிவிட்டருக்கு அடிமையாகிட்டேனோ-ன்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு.

சரி சோதிப்போம்-ன்னு ஒரு வாரம் ட்விட்டர் பக்கமே போகாம இருந்தேன்.

மனசு முன்னைவிட ஓரளவு அமைதியாவே இருப்பத உணர முடிஞ்சது.

சோ, இந்த வலைப்பூவின் மூலமா நான் சொல்ல வர்றது என்ன-ன்னா..

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
#சஸ்பெண்ஸ்சோடவே சாவு..