Thursday, October 1, 2015

நாடுமாறி

தென் மாவட்டங்களில் புழக்கத்தில் இருக்கும் கெட்ட வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

அவசாரி
வேசி
சவத்த மூதி... போன்ற பொன்மொழிகளைக் கேட்டாலே அர்த்தம் புரியும். ஆனால் இது சற்றே வித்யாசம்.

ஆண்களின் நாடுதலை மாறி மாறி விரும்புபவள் என்று பொருள். Source: @kryes

சரி நாம மேட்டருக்கு வருவோம்.

தாக்க தாக்க -ன்னு சமீபத்துல ஒரு படம் வந்துச்சி.,
அத நான் நேத்து ராத்திரி பாத்து தொலைச்சிட்டேன்.

கெரகம் புடிச்ச எழவு மாதிரி இந்த படம் என்னைய தூங்கவே விடல.

பெத்த அப்பனே  15 வயசு பொண்ண விலைக்கு விக்குறான்.
அந்த பொண்ண கொடுமைப் படுத்தி, பாலியல் தொழில்ல ஈடு படுத்தி சம்பாதிக்கரானுங்க.
அவளுக்கு ஒரு பையன் பொறக்குறான்.
அவன் செத்து பொழைக்குறான்.
பின்னாளில் பழி வாங்குறான்.உலக சினிமா வரலாற்றிலேயே, இதுவரைக்கும் எடுத்திடாத படமோ, தளமோ, கதையோ கிடையாது...

இருந்தாலும், வசதிக்கு இல்லன்னாலும், அசதிக்கு இருக்கட்டுமேன்னு கள்ளக் காதல் புரியும் பிராணிகள் உலாவும் இவ்வுலகத்தில்,

வாழ வேண்டிய சில அப்பாவிப் பெண்கள் இப்படி விலை போகிறார்களே என்ற ஆதங்கம் என் மனதை உறுத்த ஆரம்பித்தது.

தனி மனிதனா, விலை போகும் பெண்களையும், ஆடு, மாடு உட்பட இதர பல பாலூட்டிகளையும் பார்த்து என்னால் வருத்தம் மட்டுமே பட முடிகிறது.

முடிஞ்சா, உங்க கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த கீழ்க்கண்ட நம்பர்களுக்கு தெரியப் படுத்துங்க.

உங்க நண்பர்கள் கிட்டேயும் பகிர்ந்துக்கோங்க.

ஹாட் லைன்ஸ் 9470001390
CHILDLINE (call toll free 1098) 
Call on 24x7 Helpline No. 011 - 24368638 for reporting "Illegal Human Trafficking especially Trafficking of Children & Women" 


முக்கியமான கட்டம்.
யாரையும் நாடுமாறி, தேவ​​__ பையன், போன்ற கெட்ட வார்த்தைகளால் திட்டாதீர்கள்.

அம்மா பாவம். அம்மா பாவம்.

பெண்மை எவ்ளோ பெரிய சக்தி என்பது காதலில் தோற்ற ஆண்களுக்கே தெளிவாய் தெரியும்.

ஒரு பெண் நினைத்தால், 
அழகான குடும்பத்தை உருவாக்கவும் முடியும். 
உருக்குலைக்கவும் முடியும்.

பெண்களாலே குடிக்க வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

காதலில் ஜெயித்தாலும் குடிக்கிறான், தோத்தாலும் குடிக்கிறான்,
கலியாணம் ஆனாலும் குடிக்கிறான், ஆகலண்னாலும் குடிக்கிறான்.
எதுக்கு எடுத்தாலும் குடிக்குறான்.


சரி அவ்ளோ நல்ல மனுஷன் எதுக்குப்பா பெண்களை கடத்தி விபச்சாரத்துல ஈடுபடுத்துறான்?

இது ஒரு நல்ல கேள்வி.

ஆண்களே குழந்தைகளை, பெண்களைக் கடத்துகிறார்கள். அந்த மொன்ன நாயிங்கள நான் ஆண்கள் என்று அழைக்க விரும்பல..
சரி, அவுனுங்க ஏன் கடத்துறாங்க?
டிமாண்ட் சப்ளை செயின்தான்.

பெண்களுக்கான தேவை அதிகமா இருக்கு.
ஏன்?

இதுக்கு நாம சுஜாதா மாதிரி மனச விசாலப் படுத்தி ஆராயணும்.


1. எதனால விபச்சாரத் தொழில் இன்னும் உயிரோட இருக்கு?
2. தோராயமா எத்தன பெண்கள் இதுல ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க?
3. எந்தெந்த பிரிவினர்கள் (வயது, தொழில், நாடு.. etc) யார் யாரெல்லாம் அவர்களோட வாடிக்கையாளர்கள்?
4. ஏன் மேற்சொன்ன நபர்கள் விலை மகள்களை நாடுகிறார்கள்?
5. இந்த தொழிலுக்கு வந்த சில வருடங்களுக்குப் பிறகு, பெண்களின் நிலை என்ன?
6. அரசு தடை விதிக்கப் பட்டாலும், ஏன் இன்னும் ஒழிக்க முடியல?

இன்னும் பல கேள்விகள் நீண்டுகிட்டே போகும்.
நமக்குத் தெரிஞ்ச விடைகளை தேடலாம்.

நிஜ வாழ்க்கையின் சில யதார்த்த உண்மைகள்.


  1. Approximately 75-80% of human trafficking is for sex.There are more human slaves in the world today than ever before in history.
  2. There are an estimated 27 million adults and 13 million children around the world who are victims of human trafficking.
  3. Human trafficking not only involves sex and labor, but people are also trafficked for organ harvesting.

விபச்சாரம் இல்லையெனில் குற்றங்கள் அதிகரிக்கும் போன்ற கருத்துக்களை ஆர். பார்த்திபன் போன்ற மாற்றுக் கருத்து இயக்குனர்கள் தங்கள் படைப்புகளில் காலம் காலமாக சொல்லி வருகின்றனர்.


ஆடு, மாடு, பசு எருமைய கொல்லுறது பாவம்தான், ஆனா கறியும் தோலும் வேணுமே. என்ன செய்யுறது?

அடல்ட் ட்ராபிக்கிங் பாவம்தான், ஆனா நாட்டுல குற்றங்கள் குறையனுமே என்ன செய்யுறது?

- என்பது போன்ற கருத்துக்களும், கண்ட மேனிக்கு பரவி வரும் நாத்திக உலகத்தில், நான் மட்டும் புதுசா என்னத்த சொல்லிடப் போறேன்.

ஒழுக்கமா வளந்த பையன், அப்பா அம்மா பாக்குற பொண்ண கட்டிக்கறான், இல்லன்னா காதலிச்சி கலியாணம் செஞ்சிக்கறான். அவனுக்கு விலை மகளைத் தேடும் தேவை எதுவும் இல்லை.

தறிகெட்டுத் திரியுற பணக்கார திமிர் பிடிச்ச பசங்களே  விலைமகள்களின் முதன்மை வாடிக்கையாளர்கள். பின்னாளில் அவர்களே பொழுது போக்கிற்காகவும் விலைமகள்களை தேடுகின்றனர்.
புதுசு புதுசா தினுசு திணுசா தேடி அலையறதும் இவனுங்கதான்.
இவனுங்க கிட்டே இருக்குற காசுக்குதான், குழந்தைகளையும், குமரிப் பெண்களையும் கடத்துறாங்க, விக்குறாங்க.

சபலப் பட்டவன் எவனா இருந்தாலும், சுயக் கட்டுப்பாடு இல்லைன்னா தேடுவான்.

கேட்பதற்கு யாரும் இல்லாதவர்கள் (உதாரணம்..வேலைக்காக வெளியூர்ல இருக்கறவங்க) தேடலாம்.

சமகாலத்துல [2015] கல்லூரி மாணவ வாடிக்கையாளர்கள் அதிகரிச்சு வர்றதா உலக சுகாதார மையம் தெரிவிக்குது.

இவ்ளோ இருந்தும் திரும்புன பக்கம் எல்லாம் கற்பழிப்பு ஏன் நடக்குது?

[அது வேற டிபார்ட்மெண்ட்]

சரி, எங்கெங்க எல்லாம் விலை மாதர்கள் அதிகமா இருக்காங்க?

அப்வியஸ்லி  சிட்டில தான் அதிகமா இருப்பாங்க.

சிட்டிலதான், கேக்கறதுக்கு யாரும் இல்ல, குடும்பப் பெண்களே அதிகமா கவர்ச்சி காட்டுறாங்க!

கிராமங்களில் சபலப் படுபவர்களை விட, நகரங்களில் சபலப் படுபவர்களே அதிகம்.

காமம் எங்க நெஞ்சுல இல்ல உங்கக் ....


.
.
.
கண்ணுலதான் இருக்கு-ன்னு பெண்ணியம் பேசிட்டு வந்துடாதீங்க. :-)

கண்ணாடி உடைந்தால், கல் எறிஞ்சது யாருன்னு பாப்பீங்களா?  கல்லு கிட்டே போய் கேள்வி கேப்பீங்களா?

ஒருத்தன் ஏன் ஒரு பெண்ணை கற்பழிக்கிறான்? ஏன் ஒரு விலை மகளை நாடுகிறான்?

அவனுக்குள்ள அந்த சபலத்த உருவாக்கினது யாரு?

அவனோட காமத்தீ கொழுந்து விட்டு எரியுது ஒத்துக்கறேன். அது தப்புதான். ஆனா தீப்பொறி எங்கிருந்து பறந்து வந்தது?

இந்த பிரச்சனன்னு இல்ல, எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனோட வேர் எங்க இருக்கு? மூல காரணம் என்ன என்று ஆராயணும். அப்படி ரூட் காஸ் அனலிசிஸ் செஞ்சாதான், அதுக்கான முழுமையான தீர்வு கிடைக்கும் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.

ஆனா இது பெண்ணியம் பேசும் ஆப் பாயில்களுக்கு எங்க புரியப் போவுது?நீங்க பெண்ணியம் பேசி, அடுத்தவன சூடேத்தி, அவன் கேரக்டர் சரியில்ல-ன்னு குறை கூறிட்டே சாவுங்க.

தெரிந்தோ தெரியாமலோ, அப்பாவிப் பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் மூல காரணம் ஏதோ ஒரு வகையில் பெண்களே என்று கூறி, இந்த வழக்கிற்கான தீர்ப்பை வரும் பிப்ரவரி மாதம் 30ம் தேதி தள்ளி வைக்கிறேன்.