Friday, August 22, 2014

பண்ணித் தமிழ்


ஏய், இதைக் கொஞ்சம் ஓபன் பண்ணிக் கொடேன் ப்ளீஸ்? [தமிங்கலம்]

தோழியே, கொஞ்சம் தயை கூர்ந்து இதைத் திறந்து தருகிறயா? [தூய தமிழ்]

இதைக் கொஞ்சம் திறந்து தரியா? [என்னுடைய எதிர்பார்ப்பு..]

இனிய உளவாக இன்னாத கூறல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று... என்று வள்ளுவர் ஒரே குறளில் சொல்லி விட்டார்.



எங்கிருந்து வந்தது இந்த "பண்ணி"
பண் என்றால் பாடல் என்று பொருள்., சாமானியர்களின் வட்டாரச் சொல்லாக வழங்கி வந்த இந்த பண்ணி, இன்று தமிழ் பேசும் அத்தனை வாய்களிலும் விளையாடுகிறதே அது எப்படி?

முழு முதற் காரணம்: "ஷோ ஆங்கர்" என்று அழைக்கப் படும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்.

யூஸ் பண்ணி, ஓபன் பண்ணி, அதைப் பண்ணி, இதைப் பண்ணி...
இவங்க யாருமே தமிழ்நாட்ல  பிறக்கலையா? தமிழே கற்காதவர்களா?

கால் பண்ணுங்க... கால் பண்ணதுக்கு ரொம்ப நன்றி.. எதற்கெடுத்தாலும் ஒரு பண்ணி யை சேர்த்து தமிழ் வழக்கத்தில் "பண்ணி" எனும் பன்றியை சேர்த்த இவர்களை என்ன செய்யலாம்?

இரண்டாவது காரணம் "ரேடியோ ஜாக்கி" என்று அழைக்கப் படும் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்.

தமிழை எவ்வாறெல்லாம் கற்பழிக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து பேசுவதில் கில்லாடிகள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சில நூறு வார்த்தைகள், அவற்றில் இலக்கணம் இல்லாத தமிழ் ஏராளம், மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்கள் ஏராளம், இவை மட்டும் இல்லாது, வழமையான பண்ணி -ச் சொற்களும் ஏராளம்.

மூன்றாவது காரணம் நான் [நாம்]
உனக்கு எங்க போச்சு புத்தி, எவனோ ஒருத்தன் கூவறான், அதைக் கேட்டுட்டு நீயும் எதுக்கு கூவுற? [என்னை நானே கேட்டுக் கொள்கிறேன், உங்களுக்கும் உரைத்தால் மன்னிக்கவும்.]

பேச்சுரிமை உங்கள் பிறப்புரிமை., தாய்த் தமிழ் மொழியை நீங்கள் புறக்கணியுங்கள்., படிக்காதீர்கள், பேசாதீர்கள் கற்காதீர்கள்.. உங்கள் மொழி உங்கள் உரிமை.  அதைச் சாட நான் யார்?

ஆனால், மொழியைக் கலக்காதீர்கள் கெடுக்காதீர்கள் கற்பழிக்காதீர்கள். மொழிக்கலப்பு மொழிகளின் தன்மையை, வீச்சைக் கெடுத்து விடும், உங்கள் புலமையும் கெட்டு விடும்.

ஒன்று தமிழில் பேசுங்கள், அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் 

பி.கு: இந்த பண்ணி வழக்காடு என்னையும் ஆட்கொண்டு விட்டது, அதிலிருந்து வெளிப்பட நானும் முயற்சிக்கிறேன்.

No comments: