குவாண்டம் டெலி-போர்ட்டேசன்


இந்திய ராணுவ எல்லையிற்கு உட்பட்ட குஜராத் மாநிலத்தில் ஒரு குக்கிராமம். குறைந்த பட்சம் 200 ஏக்கருக்கு வளைத்துப் போட்டு, இயற்கை உரம் மற்றும் சாண எரிவாயு உற்பத்தி மையம் என்னும் பெயரில், இந்திய அரசாங்கம் ஒரு மிகப் பெரிய தொழிற்சாலையை உருவாக்கியது. அனால், அதன் மையத்தில், இந்த உலகம் மற்றும் ஊடகத்தின் கண்ணுக்குத் தெரியாமல் இயங்கி வருவது "அப்துல் கலாம் குவாண்டம் பிஸிக்ஸ் ரிசர்ச் செண்டர்"

யா ஹூ.... எஸ்.. எஸ்...
ஐ மேட் இட்.. 
ஐ மேட் இட்.. 
அறிவியல் தொழில்நுட்ப  சாதனையில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும்.

ஒளியின் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகமாக பயணிக்கக் கூடிய கதிர்களை நான் இப்போ உருவாக்கி இருக்கிறேன். இதை நான் காஸ்மிக் இயற்றி மூலமா இணைத்து ஒருமுகப் படுத்தினால், என்னால திடப் பொருளை ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு ஈமெயில் அனுப்புறது போல மிக எளிமையா அனுப்ப முடியும்.

எந்த ஓர் செயலையும் அற்பணிப்புடன் செய்தால், அதன் பலன் கிட்டும். கடந்த மூன்று ஆண்டு ஆராய்ச்சியின் வெற்றியாக தற்பொழுது இந்த விஞ்ஞானி ரமேஷ் கண்டுபிடித்திருக்கும் பவர் ஒமேகா கதிர், குவாண்டம் இயற்பியலில் எண்ணற்ற விபரீதங்களை ஏற்படுத்தும் என்று இவர் அறியவில்லை.

விவாத மேடைகளில் கேட்கப் படும் வினாக் கணைகளுக்கு பதிலளிக்கத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார், அப்போதைய ராணுவ மந்திரி.
...
பேட்டியாளர்: குஜராத் பார்டரில் எந்த ஒரு அணுசக்தி ஆராச்சி மையமும் இல்லைன்னு நீங்க உறுதி அளிக்கிறீர்களா?
ராணுவ மந்திரி: ஆமாம்.

பே : அப்போ சமீபத்தில நடந்த விபத்துல கதிரியக்கத் தனிமங்கள் கொண்ட கழிவு வெளியானதா ஒரு வதந்தி பரவி வருதே, அதைப் பற்றி?
ரா.ம: தகுந்த ஆதாரம் இல்லாமல் எதையும் உறுதி செய்ய முடியாது. உங்களுக்கு இந்தத் தகவலைக் கொடுத்தது யாரு?

பே : வெளிநாட்டில் இருந்து உதவி பெரும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
ரா.ம: அர்னாப், நீங்க என்னதான் முயற்சி செய்து என் வாயைக் கிளறினாலும், என்னிடம் இருந்து வரும் பதில் ஒன்னே ஒண்ணுதான். தகுந்த ஆதாரத்தோட வாங்க, நாம மேற்கொண்டு பேசலாம். தொண்டு நிறுவனங்கள் எதற்காக அரசாங்க தொழிற்சாலையோட கழிவுல கை வைக்குறாங்க?

பே : இந்திய நாட்டுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும். இந்த தேசம் உங்களைக் கேள்வி கேட்கிறது... 
ரா.ம: நான்தான் சொல்லிட்டேனே, உரத் தொழிற்சாலைல எந்தவித கதிரியக்கத் தனிமமும் உபயோகப் படுதலை-ன்னு.

பே: அப்போ இந்த என்.ஜி.ஓ -வின் கட்டுரை? அவர்கள் கேட்கும் கேள்விகள்?
ரா.ம: என்ன கேள்வி?

பே : இந்தியா, மறைமுகமா, அணு ஆயுதம் தயாரிக்குது-ன்னு ஏதோ சொல்லி இருக்காங்க.
ரா.ம: எனக்கும் அது உண்மையா இருக்கணும்-ன்னு ஆசை. நாம இன்னொரு நல்ல தருணத்தில் சிந்திப்போம்.
--விளம்பர இடைவேளை...--
பே : இந்தியா தேவையே இல்லாமல் அணு ஆயுதத்தைக் கையில் எடுக்கிறது, இதை ஆணித்தரமாக மறுக்க முயல்கிறது.. ஆனால், நாம் கேட்பதை நிருத்தப் போவதில்லை... மீண்டும் அடுத்த சந்திப்பில் மேலும் சில திடுக்கிடும் தகவல்களுடன் சந்திப்போம், அதுவரை உங்களிம் இருந்து விடை..

ச்ச.. என்றே சொல்லிக் கொண்டு, பிரதம மந்திரி டிவி-யை நிறுத்தினார். 

யோவ், யாருயா அங்கே, ராணுவ மந்திரிக்கு ஒரு போனை போடு.. நான் உடனே அவரை பாக்கணும்.

இருக்குற பிரச்னை பத்தாது-ன்னு இவன் வேற.


ஹாட் லைன்:

பிரதமர்: யோவ்.. உன்னை யாருயா பேட்டிக்கு  கூப்பிட்டது?
ராணுவ மந்திரி:  சார், அது வந்து..
பி: என்ன வந்து, போயி.. இதுக்கு மேல யாரு கூப்பிட்டாலும் நீ வாய தொறக்காத..
ரா.ம: சரி சார்.
பி: சரி, ரமேஷ் ஏதோ பெரிய கண்டுபிடிப்பு-ன்னு பினாத்துனானே, அது என்னது?
ரா.ம: அது ரொம்ப பிரமாதமான கண்டுபிடிப்பு சார், ஒளியை விட வேகமா..
பி: என்ன பவர் குவாண்டம் கதிரா?
ரா.ம: ஆமா சார்.. ஆனா உங்களுக்கு எப்படி சார் தெரியும்?
பி: நீ ஒரு மண்ணு, உன் விஞ்ஞானி  ஒரு சாணி... அவன் யாருக்கோ போன் பேசி இருக்கான்.. அதை சி.ஐ.ஏ மோப்பம் பிடிச்சி ஒண்ணுமே தெரியாதமாறி, அவனுங்களோட அடிமை என்.ஜி.ஓ வைத் தூண்டி விட்டு உன் வாயை பிடுங்குறானுங்க...
ரா.ம: ஓ..
பி: சரி ஆகட்டும் விடு, அவனை கண்டிச்சு வை... இன்னும் பத்து  நாளில் நாம ஒரு எலி-ய இந்த பவர் குவாண்டம் கதிர் மூலமா இடமாற்றம் செய்யணும்.. டெமோ தயாரான வுடனே கூப்புடு...
ரா.ம: ஓகே சார்.
பி:ஆங், அப்புடியே, அவனோட காதலி, குடும்பம்-ன்னு யாராவது இருந்தா, அவங்களுக்கு மறைமுகமா, பாதுகாப்பு ஏற்பாடு பண்ணு..
ரா.ம: ஓகே சார்.
பி: அவனுக்கு வேற நம்பர் கொடு.. ஆனாலும் இந்த நம்பரையும் வச்சு இருக்கச் சொல்லு.
ரா.ம: ஓகே சார்.
பி: நம்முடைய அடுத்த கட்ட நடவடிக்கை திரிகோணமலைக்கு ராமேஸ்வரத்துல இருந்து குகை கண்டுபிடிப்பு.
ரா.ம:..

----- 

ரமேஷ் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தான்... என்ன இருந்தாலும், இவன் என்னை இப்படி திட்டி இருக்கக் கூடாது... என்ன பெரிய ராணுவ மந்திரி.. நானும்  இந்த நாட்டுகாகத்தானே பாடுபடுறேன்...
தூக்கம் பிடிக்காமல், வெளியே வந்தான்.

ஓய்வு விடுதியில் இருந்து வெளிப்பட்டான்... உடனடியாக எ.கே.74 ஏந்திய இரு ப்ளாக் கேட்ஸ் அவன் பின் பாதுகாப்பிற்கு வந்தார்கள்.. 

நீங்க இத்தனை நாளா இல்லையே?
எஸ் சார்... உங்களோட பாதுகாப்பு பலப்படுத்தி இருக்காங்க சார்.

ஏதோ யோசனையுடன் படுக்கச் சென்றான்.. தூக்கம் வரவில்லை... சரி என்று ஆய்வகதிற்குச் சென்றான்..

அவன் காதலி ரமாவிற்கு அன்று பூத்த ஒரு வெளிநாட்டு மலரை அனுப்ப நினைத்தான்... சரி நமது முதல் ஆய்வை, இந்த டுலிப் மலரில் இருந்து ஆரம்பிக்கலாம். என்று துவங்கினான்...

ஒரு சிறிய மைக்ரோ வேவ் ஓவனின் அளவில் இருந்தது அந்த இயற்றி. பவர் ட்ரான்ஸ்பாண்டர், அதற்குள் வைக்கப் படும் பொருளை முப்பரிமான பிம்பத்தை எடுத்து, அதனை முதலில் பவர் ரிசீவரிடம் அனுப்பும், பின், அந்த பொருளை நுண் அணுவாக சிதைத்து, அதனை பவர் குவாண்டம் கதிர் மூலமாக அனுப்பும். முன்னரே சென்ற முப்பரிமான பிம்பத்திற்கு ஏற்ப, பவர் ரிசீவர், நுண்துகளை சேர்த்து மீண்டும் அதே பொருளை உருவாகும். அத்தனை  நிகழ்வுகளும், ஒரு மில்லி வினாடிக்கு குறைந்த நேரத்தில் நடந்தேறும். இதற்குப் பெயர்தான் டெலி-போர்ட்டேசன் 

கஷ்மீரில் உள்ளது ரமாவின் தங்கும் விடுதி...
உடனே லேப்-க்கு வா. உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது...

ரமா-வும் ரமேஷைப் போல் ஒரு அறிவியல் மேதை. இருவரும் ஐ.ஐஎஸ்-ல் குவாண்டம் இயற்பியல் நிபுணர்கள், மற்றும் காதலர்கள்.

மெசேஜ் கனாட் பி சென்ட்... யுவர் ஈமெயில் இஸ் ப்ளாக்டு  

வாட் தி ஹெல்? 
உடனே அவனுடைய புதிய சாட்டிலைட் போனில் இருந்து கால் வந்தது.

..ரமேஷ், உங்கள் பாதுகாப்பு குறித்த காரணங்களினால், உங்களுடைய அணைத்து வெளி உலக இனைப்புகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு இருக்கின்றது. - 
இணைப்பு துண்டிக்கப் பட்டது.

ரமேஷின் குழப்பம் அதிகரித்தது...
எடுத்த காரியத்தை முடிக்காமல் படுப்பதில்லை என்ற முடிவுடன், அதே வளாகத்தில் இருக்கும் இன்னொரு லேபில் இருக்கும் பவர் ரிசீவருக்கு டுலிப் மலரை அனுப்பினான்.

அடுத்த நிமிடமே, வெளியே ஓடினான். பக்கத்துக்கு லேபுக்கு போகணும்- என்று சொன்னான், ஒரு சில தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு, ஆல்பா ப்ளாக்-ல் உள்ள பேஸ்மென்ட் அறை திறக்கப் பட்டது.
அவசர அவசரமாக உள்ளே ஓடினான்.
ஏமாற்றம்தான் மிஞ்சி இருந்தது.


முதல் டெலி-போர்ட்டேசன், படு தோல்வி அடையும் என அவன் எதிர்பார்கவில்லை...

டுலிப்  மலரின், அணைத்து நுண்துகள்களும்,  சாம்பலாக இருந்தது.

எடுத்த முயற்சியை கை விடுவது என்பது ரமேஷ்-க்குப் பழக்கம் இல்லாத ஒன்று.
எத்தனை பொழுதுகள் விடிந்ததோ தெரியவில்லை.. இருக்கும் அத்தனை சமன்பாடுகளையும் கிடைத்த இடத்தில் எல்லாம் கிறுக்கினான்.

உடலில் உள்ள அணைத்து நீர் சக்தியும் தீர்ந்து போனதால், மயங்கிவிழுந்தான்.

அடுத்த நாள் தீவிர சிகிச்சையின் பலனாக சுயநினைவு வந்தது... ராணுவ மந்திரியை நான் உடனடியாக தொடர்பு கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்தான்.

ஒரு மணி நேரம் கழித்து ஒரு உலா பேசி கொடுக்கப் பட்டது.
சார், எனக்கு ரமா-விடம் உடனே பேச வேண்டும். இது என் ஆராய்ச்சி சம்பந்தமாக...

நானும் அதைதான், நினைத்தேன்.. ரமா அவருடைய விமானத்தில் இருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்களை சந்திப்பார்.

மறுமுனை துண்டிக்கப் பட்டது.

போனை தூக்கி சோபாவில் எறிந்தான்.


அடுத்த காட்சி ரமாவும் ரமேஷும் கொஞ்சும் காதல் காட்சியே.. ஆனால், நான் எழுதும் அறிவியல் புதினத்தில், காதல் விளையாட்டுகளைப் புகுத்த எழுத்தாளர் சுஜாதா அளவிற்கு என்னிடம் கற்பனை சக்தி இல்லை.

பரஸ்பர விசாரனைகளுக்குப் பிறகு ஆராய்ச்சியைப் பற்றி விவரித்தான்...
ஒரு அரை மணி நேர பேச்சுக்குப் பிறகு.. ரமாவின் முகம் மலர்ந்தது...

நீ இவ்ளோ தூரம் இறங்கி இருக்க வேண்டியதே இல்ல.. ஒரு சின்ன தப்பு பண்ணிட்ட... நியுட்டனின் சார்பு விதிப்படி, டெல்டா மாறிலி என்ன?
டைம்
டைம் ஸ்பேஸ் கண்டினியுயம் எதுக்கு எல்லாம் பொருந்தும்?
ஸ்பேஸ் ல இருக்குற எல்லா பொருளுக்கும்..
இல்ல.. ஸ்பேஸ்-கூடவே நகரும் பொருளுக்கு மட்டும்தான்...

அப்போ?

நீ எங்கே இருக்கே?
பூமில
பூமி ஸ்பேஸ் கூட நகருதா?

ஓ....

ரமாவின் புத்திக் கூர்மை ரமேஷின் முகத்தில் மின்னியது..

ஒரு சில போராட்டங்களுக்குப் பிறகு, விண்வெளியில் ஒரு சில ஒளி மணி நேர தூரத்தில், ரமேஷின் ஆராய்ச்சி மீண்டும் அரங்கேறியது...

எண்ணற்ற மாற்றங்களை உணர்ந்தான்...

முதல் டெலி-போர்ட்டேசன், ரமேஷின் கைக் கடிகாரத்தை வைத்து வெற்றிகரமாக நடந்தேறியது... ஒரு வினாடியில் லட்சத்தில் ஒரு பங்கு நேரத்தில் டெலி-போர்ட்டேசன் வெற்றிகரமாக முடிந்தது.. இது ஒரு வரலாற்று சாதனை...

ஆய்வு அறிக்கைகளை பூர்த்தி செய்தான்.

அறிவியல்பூர்வமாக, இது ஒரு அறிய சாதனைதான்... ஆனாலும் எந்த ஒரு சாதனையுமே, அதன் பயன்பாட்டை மையமாகக் கொண்டே போற்றப் படும்.

ராணுவ மந்திரி கொஞ்சம் கூட யோசிக்காமல் கேள்விகளை கேட்டார்..

சரி, நான் ஒரு மரப் பொட்டியை  இங்கிருந்து கார்கில் யுத்தக் களத்துக்கு அனுப்பனும், அதுக்கு ரொம்ப நேரம் செலவாகும்-ன்னுதான் உன்னை குவாண்டம் கதிர்மூலமா சீக்கிரம் அனுப்ப சொன்னேன்.. நீ என்னடா-ன்ன இங்கிருந்து விண்வெளிக்கு எடுத்துட்டு போய், விண்வெளில இருந்து விண்வெளியிலேயே வேற இடத்துக்கு அனுப்பி வைக்குற... உனக்கு நான் பல கோடி லட்சம் செலவு செஞ்சது எல்லாம் வீணா?

ஐயோ, நீங்க ஏன் கொஞ்சம் யோசிக்க மாட்டேன்குறீங்க...
என்னோட இந்த கண்டுபிடிப்பை வச்சிட்டு நீங்க காலத்தில் பயணிக்கலாம்... எனக்கு மட்டும் இன்னும் ஒரு மாதம் அவகாசம் கொடுங்க.. நான் ஒரு கால இயந்திரத்தை உருவாக்கிக் காட்டுறேன்...

ஆமா.. அமெரிக்காவும், பிரிட்டனும் 50 வருசமா கண்டுபுடிக்காதத நீ ஒரே மாசத்துல கண்டுபிடிக்கப் போறியா..?

பிரதமர் இடை மறித்தார்..
ஓகே ரமேஷ்.. நீங்க அடுத்த மாசத்துல எனக்கு ஒரு கால இயந்திரத்தை உருவாக்கிக் கொடுங்க... உங்களுக்கு இன்னும் வேற என்னென்ன தேவையோ சொல்லி அனுப்புங்க..

வேறு எதையும் பேசாமல், அந்தக் கூட்டம் கலைக்கப் பட்டது.

மிகவும் பலத்த ஆலோசனைக்குப் பிறகு, ஒரு சில கோட்பாடுகளை மீண்டும் வரையறுத்தான்...

1. எக்காரணத்தைக் கொண்டும் பரடாக்ஸ் உருவாகக் கூடாது.
2. பயன்பாட்டாளர், பயணிக்கும் கால நேரம் முழுவதும் தன கையில் இருக்க வேண்டும்.
3. பயன்பாட்டாளர், எங்கு, எப்போது செல்ல வேண்டுமோ, அதை நானே நிர்ணயிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில், ஒரு லிப்ட் கொள்ளளவில், 13 பேரை கடத்தும் குளிர்சாதன வசதியுடன் கூடிய கால இயந்திரத்தின் கட்டுமான வரைபடத்தை முடித்தான்.

முழுவதும் பிளாட்டினத்தால் ஆன வடிவமைப்பு பரிந்துரைக்கப் பட்டது.

பிரதமர் ஒரு நிமிடம் அசந்தே போய் விட்டார்,

நீங்கள் கேட்கும் அளவுக்கு பிளாட்டினம் இந்தியாவில் இல்லை. ரஷியா மற்றும் அமெரிக்கா மனது வைத்தால், இது சாத்தியம். ஆனால், அவர்கள் உதவியை நாடினால், நமது ஆராய்ச்சி பற்றி வெளியே சொல்ல நேரிடும். அதனால், நீங்கள் மாற்று உலோகத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.


எவ்வளவோ முயன்றும், வேறு யோசனைகள் புலப்பட வில்லை...
நீ ஒரு நாள் பிரேக் எடுத்துக்கோ ரமேஷ் என்று ரமா அறிவுரை கூறினாள்...

சரி என்று அடுத்த நாள் வெளியில் கிளம்பினான், தொல்பொருள் கண்காட்சிக்கு சென்றான்... எதேச்சையாக சுற்றிய பொழுது, காலத்தால் அழியாத கல்வெட்டுகளின் செப்பேடு புலப்பட்டது... அதைப் பற்றி மேலும் அறிய முற்பட்டான்...
நமது முன்னோர்கள் ஒரு வித ரசாயனக் கரைசலை செப்பேடுகளில் பயன்படுத்தினர், அதனால், எத்தனையோ ஆண்டுகள் மண்ணுக்குள் இருந்தும் செப்பேடுகள் அழிவு இல்லாமல் இருந்தன.

செம்பு ஒரு மிகச் சிறந்த மின் கடத்தி. அதற்கு மேற்பரப்பில் உள்ள ரசாயனக் கலவையால், அது மண்ணுடன் இருக்கும் நீரில் எந்த வினையையும் மேற்கொள்ளாமல், அதாவது மட்காமல் இருக்கிறது. என்றால், அது என்ன கலவை...
யோசனை விரிந்தது..
ஐ. ஐ. ஏ.சி. பேராசிரியரை தொடர்பு கொண்டான்.

அவர் ஒரு சில யோசனைகளை வழங்கினார்...

கடைசியில், ரமேஷின் தேடல் முற்றுப் பெற்றது. பசுவின் சாணம், மஞ்சள் மற்றும் இதர சேர்மங்களுடன் செம்பு மீதான ரசாயினப் பூச்சு பரிசோதனைக்கு அனுப்பப் பட்டது.

வெற்றி.

மிகவும் மகிழ்ச்சியுடன் பிரதமரின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டான்...
அடுத்த ஓரிரு மாதங்களில் மனிதனின் பேரழிவை உருவாக்கவிருக்கும் கால இயந்திரம் தன் பூரணத்துவத்தைப் பெற்றது.

இதன் பயங்கர நாச விளைவுகளை ரமேஷு-ம் ஓரளவு எதிர்பார்க்காமல் இல்லை. ஆதலால், முதல்கட்ட காலப் பயணத்தின் முன்பு, பிரதமரிடம் தன் படைப்பின் தன்மை குறித்த விளைவுகளை விவரித்தான்.

சந்திரனில் இருந்து ஒரு மணி  நேர ஒளி தூரத்தில் இந்திய விண்வெளிக் கப்பல் மிதந்து கொண்டிருந்தது.. பிரதமர், ராணுவ மந்திரி, ரமேஷ், ரமா மற்றும் முதல் காலப் பயணத்திற்காக தன் உயிரைப் பணயம் வைக்கத் தயாரான  தன்னார்வத் தொண்டன் வெற்றிவேல் . அனைவரும் அந்தக் கப்பலில் இருந்த ஒரு தனி அறையில் அமர்ந்திருந்தனர்

இந்த இயந்திரமோ, அல்லது இதன் கட்டுமான வரைபடமோ தீவிர வாதிகள் கைகளில் கிடைத்தால், விளைவுகள் விபரீதமாகி விடும். அதனால்,   நாம ரொம்ப கவனமா இருக்கணும்.

சரி.. அதை என்னிடம்  விட்டுவிடுங்கள்...

டெமோ தயாரா?

எல்லாம் ரெடி சார்...

சரி, நீங்க ஆரம்பிக்கலாம்...

தான் ஏதோ செய்யப்  போகிறோம் என்ற உணர்வு ரமேஷின் ஆழ் மனதில் தோன்றியது..

சரி வாருங்கள் என்று அனைவரையும், வெற்றிட  அறையின் முகப்பிற்கு அழைத்துச் சென்றான்...

மிஸ்டர் வெற்றிவேல், நீங்கள் இந்த காலப் பயணத்திற்கு சம்மதிகிறீர்களா? இதன் விளைவுகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆம்.

இந்த கோப்பை நீரில் தூக்க மாத்திரை கலந்து இருக்கிறது. இதை அருந்தி விட்டு, நீங்கள் இந்த அறைக்குக் சென்று ஓய்வு எடுங்கள்.

தூக்கம் கலைந்த பிறகு நீங்கள் வெளியே சென்று தானியங்கி விமானக் கப்பலுக்கு போங்க, அங்க இருக்குற மஞ்சள் நிற கோப்பில் உள்ள அறிவுரைகளை கொஞ்சம் கூட மாறாமல் செய்யணும். புரியுதா?
ம்ம்..

உங்களை கடைசி முறை எச்சரிக்கிறேன்... நீங்கள் கடந்த காலத்தில் எதையும் தொடக் கூடாது, சாப்பிடக் கூடாது, நடந்து முடிந்த எந்த நிகழ்வையும் தடுக்கக் கூடாது.

சரி.

கோப்பையில் உள்ள மது போன்ற திரவத்தை உட்கொண்டான். பிறகு வெற்றிட அறையில் சென்று உறங்கினான்.

ரமேஷ் மற்றும் இதர மக்களும், கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று கணினியில் வெற்றிவேலின் நிலையை கவனித்தனர்..

இவருடைய இதயத் துடிப்பு சீரா இருக்கு. இன்னும் 5 நிமிடத்துல தூங்கிடுவார்.

இதயத் துடுப்பி 80-ல் இருந்து குறையத் தொடங்கியது... 59 ஐ எட்டி பிறகு நிலையானது... ரமா, நீ போயி அவனை ஒரு உதை  விடு, நான் அந்த அண்டிப்ல்க்ஸ் மருந்தையும், இந்த டப்பா கணினியை மட்டுமே நம்பி இவ்ளோ பெரிய காரியத்தை செய்ய விரும்பல...

லேசான புன்னகையுடன், ரமா வெற்றிட அறைக்குச் சென்றாள், வெற்றி அங்கு நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தான்..
அவன் அருகில் சென்று, அவனை உலுக்கினாள், கேமராவை நோக்கினாள், இருந்தாலும் ரமேஷின் மன நிம்மதிக்காக, ஓங்கி ஒரு உதை விட்டாள், எந்த சலனமும் இல்லாமல்,
வெற்றி உறங்கிக் கொண்டிருந்தான்.

பிறகு வெற்றியின் அறைக் கதவு மூடப் பட்டது.
........
கட்டுப்பாடு அறையில் இருந்து ஒரு சில கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டன. ஒரு சில நிமிடங்களில், பவர் ஒமேகா கதிர் காஸ்மிக் கொளைடர் தனது வேலையை ஆரம்பித்தது..
வெற்றிட அறையில் உள்ள காற்று ஒரு வினாடி நேரத்திற்கு உரிஞ்சப் பட்டது,......

விண்வெளிக் கப்பல் முழுவதிலும் ஒரு சில லேசான அதிர்வு ஏற்பட்டது.
.....
அனைவருமே வெற்றியின் அறையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்... ஒரே ஒரு மில்லி செகண்ட் வெற்றி மறைந்து மீண்டும் தோன்றினான்.
.....
பிறகு ஒரு சில நிமிடங்களில் காஸ்மிக் கொளைடர், தனது வெளிபரப்பில் பச்சை விளக்கை எரிய விட்டது...
அனைவரும் அவசரமாக வெற்றியின் அறைக்கு ஓடினர்.
வெற்றி கையில் ஒரு கத்தை அருகம்புல்லுடன் அதே அறையில் படுத்திருந்தான்..
....
பிரதமர்: மிகவும் அற்புதமான  கண்டுபிடிப்பு ரமேஷ்... பாராட்டுக்கள், நீங்கள் மிகவும் கடினமாக உழைத்து இதை உருவாக்கி இருக்கிறீர்கள்..  ஆதலால்,..உங்களுக்கு ஓய்வு தேவை. உங்களுடைய இந்த கால இயந்திரத்தில் ஏதாவது மேம்பாடு வேலை மிச்சம் இருந்தால், அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்... ஆதலால், அனைவரும் இப்போதே பூமிக்குச் செல்கிறோம்... பிறகு, நீங்கள் உங்கள் ஆராய்ச்சியை பூமியில் இருந்தே தொடரலாம்.

நாம் இன்னும் ஒரு மணி நேரத்தில் புறப்பட தயார் செய்யுங்கள்... என்று ராணுவ மந்திரியைப் பார்த்து ஒரு மர்மப் புன்னகை செய்தார்.

தொடரும்..

No comments: