Monday, August 25, 2014

இஸ்லாமும் ஈஸ்வரனும்...

ஜிப்ரேல் என்ற இறை தூதர் (நபி), அண்ணல் முகம்மது அவர்களுக்கு கூறிய வேதமே குர்ரான். இறைவன் ஒருவனே என்ற தத்துவம், எளிமையான வாழ்க்கை முறை, நோன்பு, மற்ற உயிர்களிடம் அன்பு காட்டுதல் மற்றும் தினசரி கட்டாயத் தொழுகை.. ஜிப்ரேல் ஒரு நாளுக்கு 52 முறை தொழ சொன்னாராம், ஆனால் நடைமுறை சாத்தியம் கருதி, முகம்மது 5 முறையாகக் குறைத்ததாக ஒரு வரலாறு உள்ளது., [மேலும் விபரங்களுக்கு நிலமெல்லாம் ரத்தம் என்னும் நூலை படிக்கவும்]

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்தவன் ஈஸ்வரன். தவ யோகத்தை வழிகாட்டுகிறது சைவம். உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளப்பவர் ஈஸ்வர். ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாத இறைவன் ஈஸ்வரன்.

நீள அகல உயரம், ஆரம்பம் மற்றும் முடிவு நிலை இல்லாத ஒரே ஒரு உதாரணம் இந்த பிரபஞ்சமே... விண்வெளி, பால்வெளி...காலக்ஸி .. என்று வல்லுனர்களால் பல்வேறு வார்த்தைகளில் விளக்கப் பட்டு வந்த இந்த பிரபஞ்சமே இறைவன் என்ற தத்துவம் சைவத்தில் உள்ளது.

எந்த ஒரு மதமும் உருவான காலத்தில் மிக சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது, ஆனால் காலப் போக்கில் மத குருக்கள், மற்றும் மத அரசியல்வாதிகள் அவர்களின் வசதிக்கேற்ப ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள், ஆதலால், மதத்தின் போக்கு மாறி இருக்கிறது.

மதம் என்பது மக்களின் அபின் - என்று ஒரு மார்க்சீய வாக்கியம் உள்ளது. இதை மறுக்க என்னால் இயலவில்லை.

இன்று இருக்கும் சூழலில் மதமே இல்லாமல் இருப்பது உத்தமம் என்றே தோன்றுகிறது. [நம் ஆதி தமிழர்கள் போல].


அமேஸான் காடுகளில் இருந்து...

இயற்கை நமக்கு பல அரிய மூலிகைகளைக் கொடுத்து இருக்கிறது.. ஆனால் அவை யாவும் பொய் என்று போலி சித்த மருத்துவர்கள் நிராகரிக்க வைத்து விட்டார்கள்.

உடலில் ஜீரன மண்டலத்தில் இருந்துதான் எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பிகின்றன..

பெரும்பான்மையான நோய்களுக்கு முறையான மருத்துவம் சித்த மருத்துவ மூலிகைகளில் இருக்கிறது, அவை உடலுக்கு பக்க உபாதைகள் ஏதும் கொடுக்காது.,

ஆனால் நவீன / ஆங்கில மருத்துவ முறை இதனைக் குப்பை என்று நிராகரிக்கிறது. சித்த மருத்துவ மூலிகைகளை அங்கீகரித்தால், கொள்ளை விலையில் விற்கும் ரசாயன மருந்துகளின் விற்பனை படுத்துவிடும் என்ற ஒரே காரணம்தான்.

இன்று அரைகுறை ஆடையில் ஒரு பெண் வலம் வந்து, அவளைவிட கவர்சிகரமான வார்த்தைகளில், என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிறோம்.

அமேஸான் காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சில அறிய வகை மூலிகைகளால் ஆன தைலத்தை விரும்புகிறோம், [மேலும் விபரங்களுக்கு மிடாஸ் டச் - எம்.எல்.எம் காட்சிகளை சதுரங்க வேட்டை எனும் படத்தில் பார்க்க] ஆனால், நமது பாரம்பரிய மூலிகைத் தைலங்களை வசதியாக மறந்து விட்டோம்.

ஆங்கில / ரசாயன மருந்துகளில் போலிகளைப் பிரித்தறிவது கடினம், ஏனெனில் அவை உடலில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் சித்த மருந்துகளில் நீங்கள் பரிச்சயம் அடைய ஒரு சில முயற்சிகள் தேவை. பின் போலிகளை எளிதில் கண்டு கொள்ளலாம்.

சித்த மருந்துகளால், உடனடி நிவாரணம் கிடைக்காது, ஆனால் நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

வளம் பெறுவோம்., வாழ்க வளமுடன்.
Friday, August 22, 2014

மரம் நடுவோம்..


இயற்கை நியதிப்படி ஒன்றை சார்ந்தே ஒன்று உயிர் வாழ்கிறது, இயற்கையின் விதிப்படி, உலகம் முழுவதும் வெறும் காடுகளாகவும் மரம் செடி கொடி புதர்களாகவும், பாலைகளாகவும், சோலைகளாகவும், கடலாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனும் மற்ற உயிரினங்களைப் போலவே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான்.
அவனுக்கு வேண்டியது எல்லாம் உணவு மட்டுமே., மரங்களில் இருந்து பழங்களையும் கீரை கிழங்குகளையும் தேவைப் பட்டால் ஒரு சில சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்ந்தான்.

மாற்றம் ஒன்று மட்டுமே நிலையான இயற்கை நியதிக்கு மனிதனும் விதி விலக்கல்ல., விங்குகளின் தோலை உன்ன முடியாது, ஆகையால் அதை வைத்து சுகாதாரத்திற்காக குறிகளை மறைக்கப் பழகினான். இது வாய் மூலமே குடிக்க உண்ண முடியும் என்று தோன்றிய அனிச்சை செயல்.

சிக்கி முக்கி கற்களின் மூலம் நெருப்பைக் கண்டு பிடித்தான், பின்னர் அதை வைத்து குளிர் காய்ந்தான்., இவை எல்லாம் இயற்கையே மனிதனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

நெருப்பின் பின் சக்கரம், வண்டி, வண்டியை இழுக்க மற்ற ஆநிரைகளை அடிமைப் படுத்தினான்.. இங்குதான் மனிதனின் முதல் தவறு ஆரம்பிக்கிறது.

அடிமைத் தனம் என்ற ஒன்றை மனித விலங்கு மற்ற விலங்குகளிடம் செலுத்த ஆரம்பித்தது... அன்று தொட்டு, இயற்கையின் போக்கு இந்த மனித விலங்குகளினால் பெரிதும் பாதிக்கப் பட்டு, மொழி, மதம் இனம் வன்மம், நாகரீகம் நகரமயம், முதலாளித்துவம், தொழிலாளித்துவம், அடிமைத் தனம், தீவிரவாதம்... என்று மனித சமுதாயம் அடைந்த பாதிப்புகளை விட இயற்கை சீரழிந்துள்ளது.

ஒட்டு மொத்த இயற்கையையும் துவம்சம் செய்து மனித விலங்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக போகங்கள் கூடிய விரைவில் முடியப் போகின்றன.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை எந்த அளவிற்கு மாசுபடுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே மாசுபடுதுகிறோம்.

இயற்கை தன்னை உருமாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்தது...
வறண்ட ஏரிகளில் மீண்டும் தண்ணீர் சுரக்க ஒரு சில தலைமுறைகள் ஆகலாம், ஆனாலும் ஏரி என்பது ஏரி தான். அதில் மண் கொட்டி மாடி வீடு கட்டுவது மனிதனின் முட்டாள்தனம்.

கடைசி சொட்டு தண்ணீரும் நச்சுண்டு, அமெரிக்காவின் ஆயுத பலமும், அரேபியாவின் எண்ணெய்  வளமும், ஆசியாவின் தங்க வளமும் ஒரு சொட்டு மழை நீருக்காக ஏங்கும் தருணம் மிகத் தொலைவில் இல்லை...

இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகாமல் இயற்கையை பேண நம்மால் முடிந்த ஒரு சில காரியங்களைச் செய்வோம்.


மரம் நடுவோம், மழை நீர் சேமிப்போம்...
வேதாத்திரி மகரிஷி பாணியில்,

எரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிய,
மக்கள் வளமாய் வாழ்க.

ஜென்ம ஆசை...

பொன்னியின் செல்வனில் இருந்து சில வரிகள்...


என் வாழ்நாளில் ஒரு முறையேனும் இப்படி, தமிழரின் பாரம்பரிய உணவை ருசிக்க ஆசைப் படுகிறேன். இது அந்தக் காலத்து ஏழை வீட்டு உணவு... மிக்க ஆரோக்கியம் நிறைந்தது.பண்ணித் தமிழ்


ஏய், இதைக் கொஞ்சம் ஓபன் பண்ணிக் கொடேன் ப்ளீஸ்? [தமிங்கலம்]

தோழியே, கொஞ்சம் தயை கூர்ந்து இதைத் திறந்து தருகிறயா? [தூய தமிழ்]

இதைக் கொஞ்சம் திறந்து தரியா? [என்னுடைய எதிர்பார்ப்பு..]

இனிய உளவாக இன்னாத கூறல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று... என்று வள்ளுவர் ஒரே குறளில் சொல்லி விட்டார்.எங்கிருந்து வந்தது இந்த "பண்ணி"
பண் என்றால் பாடல் என்று பொருள்., சாமானியர்களின் வட்டாரச் சொல்லாக வழங்கி வந்த இந்த பண்ணி, இன்று தமிழ் பேசும் அத்தனை வாய்களிலும் விளையாடுகிறதே அது எப்படி?

முழு முதற் காரணம்: "ஷோ ஆங்கர்" என்று அழைக்கப் படும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்.

யூஸ் பண்ணி, ஓபன் பண்ணி, அதைப் பண்ணி, இதைப் பண்ணி...
இவங்க யாருமே தமிழ்நாட்ல  பிறக்கலையா? தமிழே கற்காதவர்களா?

கால் பண்ணுங்க... கால் பண்ணதுக்கு ரொம்ப நன்றி.. எதற்கெடுத்தாலும் ஒரு பண்ணி யை சேர்த்து தமிழ் வழக்கத்தில் "பண்ணி" எனும் பன்றியை சேர்த்த இவர்களை என்ன செய்யலாம்?

இரண்டாவது காரணம் "ரேடியோ ஜாக்கி" என்று அழைக்கப் படும் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்.

தமிழை எவ்வாறெல்லாம் கற்பழிக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து பேசுவதில் கில்லாடிகள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சில நூறு வார்த்தைகள், அவற்றில் இலக்கணம் இல்லாத தமிழ் ஏராளம், மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்கள் ஏராளம், இவை மட்டும் இல்லாது, வழமையான பண்ணி -ச் சொற்களும் ஏராளம்.

மூன்றாவது காரணம் நான் [நாம்]
உனக்கு எங்க போச்சு புத்தி, எவனோ ஒருத்தன் கூவறான், அதைக் கேட்டுட்டு நீயும் எதுக்கு கூவுற? [என்னை நானே கேட்டுக் கொள்கிறேன், உங்களுக்கும் உரைத்தால் மன்னிக்கவும்.]

பேச்சுரிமை உங்கள் பிறப்புரிமை., தாய்த் தமிழ் மொழியை நீங்கள் புறக்கணியுங்கள்., படிக்காதீர்கள், பேசாதீர்கள் கற்காதீர்கள்.. உங்கள் மொழி உங்கள் உரிமை.  அதைச் சாட நான் யார்?

ஆனால், மொழியைக் கலக்காதீர்கள் கெடுக்காதீர்கள் கற்பழிக்காதீர்கள். மொழிக்கலப்பு மொழிகளின் தன்மையை, வீச்சைக் கெடுத்து விடும், உங்கள் புலமையும் கெட்டு விடும்.

ஒன்று தமிழில் பேசுங்கள், அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் 

பி.கு: இந்த பண்ணி வழக்காடு என்னையும் ஆட்கொண்டு விட்டது, அதிலிருந்து வெளிப்பட நானும் முயற்சிக்கிறேன்.

Tuesday, August 19, 2014

காதல் அறிகுறி.

காணும் பொழுது ஏற்படும் மெல்லிய சலனம்,
இதயம் இருப்பது போன்ற சிறு உணர்வு,
மனதில் சிறு நடுக்கம்,
இனம் புரியாத சோகம்.

இன்னும் எத்தனயோ விவரிக்க முடியாத உணர்ச்சிகளின் வெளிப்பாடு.

இயற்கை நியதிப் படி, உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் வாழ்க்கை எனும் ஒரு பயணத்தை மேற்கொள்கின்றன. அதற்கு இயற்கையே பருவத்திற்கு ஏற்றாற்போல்,  ஒவ்வொரு ஜீவராசியின் உடலிலும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு காற்றில் பரவும் வாசனை, வண்டுகளை ஈர்த்து, மகரந்தச் சேர்கை நடைபெற எதுவாய் செய்துள்ளது.

சற்றே பரிணாம வளர்ச்சி கண்ட ஜீவராசிகளிடம், ஆண் பெண் என்ற வெவ்வேறு உடலமைப்புகளைக் கொடுத்து அவைகளை களிப்புறச் செய்கிறது...

எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன, பருவத்தே இனப்பெருக்கம் செய்கின்றன, மடிகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தனது யோசிக்கும் திறனை வைத்து காதலிக்கிறான், காதலால் செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் செய்கிறான்.

இனப் பெருக்கத்திற்கு தயாரான பெண் மனித விலங்கு பூப்படைகிறாள். [பூ]
மீசை அரும்பிய ஆண் மனித விலங்கு சைட் அடிக்கிறான். [வண்டு].
இந்த ஒரு ஈர்ப்பு விசைக்கு காதல் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர், அதற்கு ஆண்டுதோறும் விழாவும் எடுக்கின்றனர்.

இதை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வெட்கம் கெட்டு வினோத வினோதமான ஒலி ஒளி காட்சி அமைப்புகளை வைத்து காலம் காலமாக பாடியும் படமெடுத்தும் வருகின்றனர்.

மற்ற உயிரினங்களை விட மனிதன் சற்றே மேம்பட்டு மொழிப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் என்று பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதால், தலைவன் - தலைவி ஊடல், காதல் கத்திரிக்காய் என்று சில இலக்கியங்களைப் படைத்துவிட்டான். காலம் மற்றும் கலாச்சார கட்டுக் கோப்புகளுக்காக திருமணம், சொந்தம் பந்தம் என்று ஒரு சில நிபந்தனைகளை தனக்குத்தானே விதித்துக் கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்.

பசி தூக்கம், ஏக்கம் போன்று காதலும் ஒரு உணர்ச்சியே., காலம் கடந்து  ஏற்படும் உணர்சிகளால் ஏற்படும் விபரீதங்களைத் தவிர்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாய், கள்ளக் காதலனுடன் தலை மறைவு, சோகத்தில் தந்தை தற்கொலை... போன்ற செய்திகள் சம காலத்தில் மலிந்து வருகின்றன.

இல்லறம் சிறக்க கணவன் மனைவி தாம்பத்ய உறவு அவசியம். சரியான உணவு பழக்கம் இல்லாததாலும், அளவுக்கு அதிகமான புகை மற்றும் குடிப் பழக்கத்தினாலும் பெரும்பான்மை ஆண் மனித விலங்குகள் ஆண்மையை இழந்து தங்களது துணைவி /மனைவிகளை திருப்த்தி படுத்த முடியால் இருக்கின்றனர். மேலும் நரம்புத் தளர்ச்சி, பதட்டம் போன்ற நோய்களும் இலவச இணைப்புகளாக ஒட்டிக் கொள்கிறது... இதனால் சோகமடைந்த பெண் மனித விலங்கு வாய்ப்பு கிடைத்தவுடன் உறவுக்காக யாருடனோ ஓடி விடுகிறது...

கள்ளக் காதலுக்கு ஆண் மனித விலங்குகள் மட்டுமே காரணம் என்று ஒருதலையாக வாதிக்க முடியாது. சுத்துக் கொழுப்பு அதிகம் உள்ள சோரம் போகும் இயல்புடைய பெண் மனித விலங்குகள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட ஆண் மனித விலங்குடன் அவைகளால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. போரடித்து வேறு ஒரு ஆண்  விலங்குடன் ஓடி விடும். அவர்களைத் தடுக்க / திருத்த யாராலும் முடியாது.

சதா சர்வ காலமும் தனது துணையை கண்காணிப்பது என்பது முட்டாள்தனம், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன்னை அவதானிக்கிறார்கள் என்ற உணர்ச்சி காட்டிக் கொடுத்து நல்ல குடும்பத்தைப் பிரித்து விடும்.

கள்ளக் காதல் அறிகுறி இல்லாத வாழ்க்கைத் துணை வேண்டுமா?
என்னதான் வழி?

உடைந்த கண்ணாடியை ஒட்ட முடியாது, ஆனால் புதிய கண்ணாடியை வேண்டுமானால் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் துணை ஒழுக்கத்துடன் இருக்க நினைகிறீர்களா? நீங்கள் ஒழுக்கத்துடன் இருங்கள்.

கடந்த கால பாவங்களை மாற்ற முடியாது, உங்கள் வினைப்பயன் உங்களையும் உங்கள் சந்ததியையும் தொடரும். ஆகையால் உங்களது கணக்கில் உள்ள பாவப் பதிவுகளின் மீது புண்ணிய செயல்களினால் நல்ல பதிவுகளை உருவாக்குங்கள்.

தனிமையில் உன்னில் எழும் எண்ணங்களே உன் வாழ்க்கைத் தரத்தை நிர்மாணிக்கிறது - விவேகானந்தர்.
ஆகையால் நல்ல விஷயங்களைசிந்தியுங்கள் செயல்படுங்கள், உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைநிலையை வேண்டுகிறேன்.

Monday, August 18, 2014

மாட்டுக்கறியும் கொலை வெறியும் - என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்.

மாட்டுக்கறியும் கொலை வெறியும் - என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்.

நான் யார் சொல்வதையும் விளக்கவில்லை... என்னில் எழும் ஒரு கேள்வி...
எந்த ஒரு பாலூட்டியும் இன்னொரு பாலூட்டியின் குட்டிக்கு பால் கொடுக்காது.,
உதாரணம்., ஒரு மனிதப் பெண் இன்னொரு மனிதப் பெண்ணின் குழந்தைக்குப் பால் கொடுக்க முகம் சுழிப்பாள்.,

பசுவே உங்கள் இல்லம் வந்து, இந்தா குடி என்று பால் கொடுப்பதில்லை.... பால் நிறைய சுரக்கிறது என்று பசுவிடம் இருந்து மனிதன் பாலைத் திருடுகிறான்.  ஏன் பன்றியிடம் இருந்து பால் திருடவில்லை என்றால், பசுவின் பால் உடலுக்கு சத்து, மற்றும் எந்த பக்க விளைவுகளும் இல்லாதது...

பசுவிற்கு செயற்கையாக சினையேற்றுகிறான், தீவனமிட்டு ஒன்றுக்கு பல மடங்காக பால் கறக்கிறான், கொள்ளை லாபம் பார்கிறான், மடி வற்றிய பின் கறிக்காக விற்று விடுகிறான்...

பசுவின் கன்றுக்காக சுரந்த பாலைத் திருடி விட்டு, நன்றி உணர்ச்சியே இல்லாமல் பசுவைக் கொல்வது நியாமா?

Tuesday, August 5, 2014

"ஜிகிர்-தண்டா" திரை விமர்சனம்


தமிழில் வெளியாகும் அத்தனை படங்களையும் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால், மிகவும் தேர்ந்தெடுத்து படங்களைப் பார்ப்பது என் நிலைப்பாடு.
படத்தின் 30 % காட்சிகள் நகைச்சுவை மிகுந்தது...
முதல் பாகம் சற்றே இழுவை...
இரண்டாவது பாகம் மிதமான வேகம்... அவ்வளவே..

தமிழ்பட வெறியர்களுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சி.,
என்னை பொறுத்த மட்டில், இது ஓகே வொர்த் வாட்சிங் படம்.. அவ்வளவுதான். அடுத்த சீன் என்ன என்று என்னால் எளிதாகக் கணிக்க முடிந்தது...

ஆனால், RED (English Movie) படத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு விறுவிறுப்பான அனுபவம், அந்தக் கதா நாயகியின் முகபாவத்தில் ஈர்ப்பு, இந்தப் படத்தில் ஏற்படவில்லை.
லட்சுமி மேனனுக்கு செயற்கையாக ஒரு பாத்திரம்... தேவையே இல்லை, செலவைக் குறைத்து இருக்கலாம்.