Tuesday, August 19, 2014

காதல் அறிகுறி.

காணும் பொழுது ஏற்படும் மெல்லிய சலனம்,
இதயம் இருப்பது போன்ற சிறு உணர்வு,
மனதில் சிறு நடுக்கம்,
இனம் புரியாத சோகம்.

இன்னும் எத்தனயோ விவரிக்க முடியாத உணர்ச்சிகளின் வெளிப்பாடு.

இயற்கை நியதிப் படி, உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் வாழ்க்கை எனும் ஒரு பயணத்தை மேற்கொள்கின்றன. அதற்கு இயற்கையே பருவத்திற்கு ஏற்றாற்போல்,  ஒவ்வொரு ஜீவராசியின் உடலிலும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு காற்றில் பரவும் வாசனை, வண்டுகளை ஈர்த்து, மகரந்தச் சேர்கை நடைபெற எதுவாய் செய்துள்ளது.

சற்றே பரிணாம வளர்ச்சி கண்ட ஜீவராசிகளிடம், ஆண் பெண் என்ற வெவ்வேறு உடலமைப்புகளைக் கொடுத்து அவைகளை களிப்புறச் செய்கிறது...

எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன, பருவத்தே இனப்பெருக்கம் செய்கின்றன, மடிகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தனது யோசிக்கும் திறனை வைத்து காதலிக்கிறான், காதலால் செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் செய்கிறான்.

இனப் பெருக்கத்திற்கு தயாரான பெண் மனித விலங்கு பூப்படைகிறாள். [பூ]
மீசை அரும்பிய ஆண் மனித விலங்கு சைட் அடிக்கிறான். [வண்டு].
இந்த ஒரு ஈர்ப்பு விசைக்கு காதல் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர், அதற்கு ஆண்டுதோறும் விழாவும் எடுக்கின்றனர்.

இதை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வெட்கம் கெட்டு வினோத வினோதமான ஒலி ஒளி காட்சி அமைப்புகளை வைத்து காலம் காலமாக பாடியும் படமெடுத்தும் வருகின்றனர்.

மற்ற உயிரினங்களை விட மனிதன் சற்றே மேம்பட்டு மொழிப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் என்று பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதால், தலைவன் - தலைவி ஊடல், காதல் கத்திரிக்காய் என்று சில இலக்கியங்களைப் படைத்துவிட்டான். காலம் மற்றும் கலாச்சார கட்டுக் கோப்புகளுக்காக திருமணம், சொந்தம் பந்தம் என்று ஒரு சில நிபந்தனைகளை தனக்குத்தானே விதித்துக் கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்.

பசி தூக்கம், ஏக்கம் போன்று காதலும் ஒரு உணர்ச்சியே., காலம் கடந்து  ஏற்படும் உணர்சிகளால் ஏற்படும் விபரீதங்களைத் தவிர்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாய், கள்ளக் காதலனுடன் தலை மறைவு, சோகத்தில் தந்தை தற்கொலை... போன்ற செய்திகள் சம காலத்தில் மலிந்து வருகின்றன.

இல்லறம் சிறக்க கணவன் மனைவி தாம்பத்ய உறவு அவசியம். சரியான உணவு பழக்கம் இல்லாததாலும், அளவுக்கு அதிகமான புகை மற்றும் குடிப் பழக்கத்தினாலும் பெரும்பான்மை ஆண் மனித விலங்குகள் ஆண்மையை இழந்து தங்களது துணைவி /மனைவிகளை திருப்த்தி படுத்த முடியால் இருக்கின்றனர். மேலும் நரம்புத் தளர்ச்சி, பதட்டம் போன்ற நோய்களும் இலவச இணைப்புகளாக ஒட்டிக் கொள்கிறது... இதனால் சோகமடைந்த பெண் மனித விலங்கு வாய்ப்பு கிடைத்தவுடன் உறவுக்காக யாருடனோ ஓடி விடுகிறது...

கள்ளக் காதலுக்கு ஆண் மனித விலங்குகள் மட்டுமே காரணம் என்று ஒருதலையாக வாதிக்க முடியாது. சுத்துக் கொழுப்பு அதிகம் உள்ள சோரம் போகும் இயல்புடைய பெண் மனித விலங்குகள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட ஆண் மனித விலங்குடன் அவைகளால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. போரடித்து வேறு ஒரு ஆண்  விலங்குடன் ஓடி விடும். அவர்களைத் தடுக்க / திருத்த யாராலும் முடியாது.

சதா சர்வ காலமும் தனது துணையை கண்காணிப்பது என்பது முட்டாள்தனம், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன்னை அவதானிக்கிறார்கள் என்ற உணர்ச்சி காட்டிக் கொடுத்து நல்ல குடும்பத்தைப் பிரித்து விடும்.

கள்ளக் காதல் அறிகுறி இல்லாத வாழ்க்கைத் துணை வேண்டுமா?
என்னதான் வழி?

உடைந்த கண்ணாடியை ஒட்ட முடியாது, ஆனால் புதிய கண்ணாடியை வேண்டுமானால் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் துணை ஒழுக்கத்துடன் இருக்க நினைகிறீர்களா? நீங்கள் ஒழுக்கத்துடன் இருங்கள்.

கடந்த கால பாவங்களை மாற்ற முடியாது, உங்கள் வினைப்பயன் உங்களையும் உங்கள் சந்ததியையும் தொடரும். ஆகையால் உங்களது கணக்கில் உள்ள பாவப் பதிவுகளின் மீது புண்ணிய செயல்களினால் நல்ல பதிவுகளை உருவாக்குங்கள்.

தனிமையில் உன்னில் எழும் எண்ணங்களே உன் வாழ்க்கைத் தரத்தை நிர்மாணிக்கிறது - விவேகானந்தர்.
ஆகையால் நல்ல விஷயங்களைசிந்தியுங்கள் செயல்படுங்கள், உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைநிலையை வேண்டுகிறேன்.

No comments: