Monday, June 23, 2014

அன்புத் தொல்லை..

குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்....

ஆ..உவே.... உர்ர்ர்..  என் மகனின் மனம் நான் அறிவேன். அவனுக்கு பிஸ்கட் வேண்டும்,

உப்பூ [UBBU] மம்மி....
...ம்ம் 
யாரு எங்க உப்பு மம்மி..
நான்தான் என்று மார்தட்டுவான்...ம்ம்ம்..ம்ம்.ம்ம் 

கூல புஜ்ஜி மம்மி..
தரணிஷ் குட்டி..
ஒப்புட்டு..
ஜின்ஜி..
சிங்கம்..

என்று எண்ணற்ற அடைமொழியில் நாங்கள் அவனை அழைத்தாலும், எங்களுக்கு பெயர்கள் போதவே இல்லை.. தினமும் அவனுக்கு ஒரு செல்லப் பெயர் வைக்கிறோம். 

யார் சொல்லியும் காலையில் நான் சீக்கிரம் எழுந்ததில்லை... ஆனால், எங்கள் உப்பு மம்மிகாக, ஆறு மணியளவில் எழுந்து டெய்ரி-க்குச் சென்று புத்தம் புதிய பசும்பால் வாங்கி வருவேன்.. சமீப காலத்தில், ஏதோ மாட்டுத் தீவனம் சேரவில்லை போலும், ஆதலால், மீண்டும் பாக்கெட் பாலுக்கு மாறி இருக்கிறோம்...

அவனுடன் கொஞ்சிப் பேச, எவ்வளவு நேரம் இருந்தாலும், போதவில்லை... 

அவனுக்கு என் கண் கண்ணாடியின் மேல் அலாதிப் பிரியம்... எப்போது வேண்டுமானாலும், பிடுங்கி எரியுவான்...

பொது இடங்களில், கடைகளில், ஓடிப் பிடித்து விளையாட அழைப்பான்...

என் மடியில் அமர்ந்து கார் ஓட்டுவான், ஆனால், நான் ஸ்டீரிங் பிடிக்கக் கூடாது... என் கைகளைத் தட்டி விடுவான்..

கையில் எது கிடைத்தாலும் என் முகத்தில் எரியுவான்....

மொபைல் போன் அவனுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அடிக்கடி தண்ணீர் வாளியில் வைத்து விளையாடுவான்..

அவனே எடுத்து சாப்பிட வேண்டும் என்று எதைக் கொடுத்தாலும், கீழே பாதி வாயில் கொஞ்சம், சட்டையில் மீதி என்று கொட்டுவான்... நான் ஊட்டி விடுவது ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை..

நான் எத்தனை  முறை, என் மகனிடம் அடி வாங்கினாலும், அவன் மீது எவ்வளவோ கோபம் வந்தாலும், அனைத்தும் மறந்து போகிறது அவனுடைய ஒரே ஒரு புன்சிரிப்பில்..


மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்..
குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்....

No comments: