Monday, November 10, 2014

விளம்பரம்

எங்களால, எந்த ஒரு கருமாந்திரத்தையும் உங்க தலைல கட்ட முடியும்-ன்னு நிரூபிக்கறது தான்  இந்த விளம்பரங்களோட உச்ச கட்ட சாதன.


100 பேர் கிட்டேகேட்டா, 10 பேரு வாங்குவான் - இதுதான் மார்க்கெட்டிங் (கு)யுத்திகளின் தாரக மந்திரம்.

நம்மில் பலருக்கு கண்ட நம்பர்களில் இருந்து, நேரம் கெட்ட நேரத்துல கால் வரும்,
என்ன-ன்னு கேட்டா,

நாங்க இந்த ஹேர் கிளப்-ல இருந்து கூப்புடுறோம், உங்களுக்கு சூப்பரான ஸ்கீம் இருக்கு வேணுமா?

கிரிடிட் கார்டு வேணுமா?

பெர்சனல் லோன் வேணுமா?

வீடு/ ப்ளாட் வேணுமா?

கரப்பான் பூச்சி விரட்ட கூட எங்க கிட்டே ஒரு ஆபரேசன் இருக்கு வேணுமா?


சலிச்சு போய், DND அக்டிவேட் செய்தால், அதை ஆரம்பிக்க கால அவகாசம் 49 நாள்.

நாங்க அப்படி என்னடா பாவம் செஞ்சோம்?

வேலை வாய்ப்பு தேடி, ஒரு இணையத் தளத்துல எங்க மொபைல் நம்பர பதிஞ்சது குத்தமா?

அடுத்த நாளே சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனில இருந்தும் டெலி மார்கெட்டிங் செய்றாங்களே?

எந்த ஒரு மொக்கை படத்தையும் வெற்றிப் படமாக்குற சக்தி சன் டிவி-க்கு இருக்கு.

எந்த ஒரு வெளங்காத பொருளையும் நம்ம தலைல கட்டுற சக்தி, விளம்பரங்களுக்கு இருக்கு.,

இது பத்தாது-ன்னு  நம்ம கலாசாரத்தையே குலைக்குற மாதிரி ட்ரென்ட் செட்டிங் இந்த விளம்பரங்கள்..

எ.கா:
அம்மா மகனிடம், உன் மனைவி ரொம்ப ஹாட்ஆ இருக்குறா-ன்னு சொல்லும் ஒரு Dominos Pitza விளம்பரம்.

வொய் திஸ் கொலவெறி?





No comments: