Thursday, February 27, 2014

சிறைகளும் சிறகுகளும்


இந்த வார புதிய தலைமுறை இதழில் வெளிவந்த சிறைகளும் சிறகுகளும் -கட்டுரைக்கு என்னுடைய கருத்து...

ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் அறைகிறான்?  நாட்டில் பெரும்பாலும் ரத்தக் கொதிப்பு ஆண்களுக்கே அதிகம்..... 
பெரும்பான்மையான காரணம்: குடும்ப மன அழுத்தம். 
ஒரு பெண்- தாய் தான் செய்ய வேண்டிய கடமையில் சரியாக இருந்து, அவளை அரசு மதுபானக் கடையில் குடித்து விட்டு வந்து அடிப்பது வன்முறை! 
அதற்கான சட்ட திட்டங்களைத் தெளிவு படுத்தியதற்கு நன்றி.  
ஒரு ஆண்/ அப்பா  சரியாக, பொறுப்பாக, மரியாதையாக, மானத்துடன் இருந்து,  அவருடை மனைவி கலாச்சார சீரழிவுடன், கற்பை மறந்து சமுதாயத்தைக் கெடுத்தால் ஏதாவது சட்டம் அவளை தடுத்து நிறுத்துகிறதா? தயை கூர்ந்து மன உளைச்சலுடன் வாழும் மணமகன்களுக்குத்  தெரிவு படுத்துங்கள்...

என்னுடைய பார்வையில் 
நிறைய  ஆண்களும் சரியில்லை; நிறைய பெண்களும் சரியில்லை... ! 
- ஒரு யதார்த்தமான உண்மை!... 
இதில் அவ்வையாரின் கல் உண்ணும் பழக்கைத்தை புலிகளின் புதல்வர்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்த கவிஞரும்., சமுதாய சீர்கேடுக்கு ஒரு சிறு  பங்கு வகிக்கிறார். 
ஆதி  காலம் முதல் ஒருவனைப் பார்த்தே ஒருவன் கற்கிறான், வாழ்கிறான் -  இதுதான் நாகரீகம்... 
அந்த காலத்து ஒளவையாரே தண்ணி அடிச்சிருக்காங்க, நாம ஏன் அடிக்கக் கூடாது-ன்னு நம்ம வீட்டு வயசுப் பொண்ணுங்க எல்லாம் கிளம்பிட்டாங்க- ன்னா என்ன பண்றது? 
டிவி சீரியலில் வரும் கூத்துக்கள் எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடக்கின்றது. நகர குடும்பங்களில் [கடந்த 5 ஆண்டு அளவில் திருமணமான வீடுகளில்] முடிந்தால் ஒத்து வாழ்வது, இல்லையேல் விவாகரத்து... இதுதான் இப்போ ட்ரெண்டு.. 
நீ வேலைக்குப் போறியா? நானும் வேலைக்குப் போறேன்!.. நீ ஊர் சுத்துறியா? நானும் ஊர் சுத்துறேன்!... நீ அடிக்கறியா? நானும் அடிக்குறேன்!... எல்லா விதங்களிலும் எல்லா வேலைகளும் பெண்கள் செய்யறாங்க...

பத்து பொண்ணுங்களை லவ் பண்ணிட்டு, ஊர் சுத்திட்டு ட்டேடிங் போயிட்டு, நாம நல்ல பிரண்ட்ஸ் ஆவே இருக்கலாம்-ன்னு பிரிஞ்ச பையனும், ஊருக்கு குறைந்த பட்சம் இருபது பேர்  கூட ட்டேடிங் போன பெண்ணும் கலியாணம் கட்டிக்குறாங்க... அப்புறம் எப்புடி விளங்கும்? 
எந்த ஒரு மாற்றத்திலும் பயனும் இருக்கு. பங்கமும் இருக்கு... உதாரணம்:  கணினி, உலா பேசி, இன்டர்நெட், மக்களாட்சி, நாகரீக வளர்ச்சி, .. இன்னும் எத்தனையோ இப்புடி மாற்றங்கள் இருக்கு.
எல்லாம் கலி படுத்துற பாடு-ன்னுட்டு போக வேண்டியதைத் தவிர, எங்களால் வேற எதையும் செய்ய முடியல. 
ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம்  எடுக்கனும்-ன்னு நான் விரும்புறேன் 
  • மது ஒழிப்பு
  • கள்ள நோட்டு ஒழிப்பு
  • விலை மகள் விடுதிகள் ஒழிப்பு 
  • எந்த ஒரு மக்கள் தொடர்பு சாதனத்திலும் கவர்ச்சி [ஆடைக்குறைப்பு] ஒழிப்பு 
எப்படியும் யாரும் என்னோட இந்த அறைகூவல மதிக்கப் போறது இல்ல.. இருந்தாலும் எழுதி வைக்கிறேன்....

No comments: