Tuesday, March 11, 2014

மதம்- மனிதன்- மக்கள்தொகை

இன்ன தேதியில் இது நடந்தது என்ற பதிவே வரலாறு.. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நேற்றைய நிகழ்ச்சி இன்றைய வரலாறு... ஆனால், ஒருவனின் வாழ்க்கை சாதனைகளே சரித்திரம்...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ?
பதில் சொல்லுங்க மக்களே...


சமீப காலமாக, நமது நாட்டின் மீதான வருத்தம் எனக்கு அதிக அளவில் எழுகிறது..
தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று எல்லோரைப் போலவும் என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை..

நாட்டில் நடக்கும் அத்துணை பிரச்சனைகளுக்கும் அரசியல் நிலவரம் தான் காரணம்..
சாதி மதம் இனம் மொழி என்ற எதை வைத்து வேண்டுமானாலும் அரசியல் நடக்கிறது...

மதம் என்பது மனிதனை ஒழுக்க நெறியில் செலுத்த உதவும் கொள்கைகளை உள்ளடக்கியது... ஆனால், இதில் வருத்தம் என்னவென்றால், கொள்கைகள் யாவும் மனிதர்களால் எழுதப் பட்டது.

உலகத்தில் எங்கும் இல்லாத வளம் இந்தியாவில் இருந்திருக்கிறது...
நம் முன்னோர்கள் கொண்ட ஆசையினால் உலகெங்கும் உள்ள செல்வங்களை இங்கே கொண்டு குவித்தார்கள்.

ஆனால், நாம் கடுமையான சாபத்திற்கு ஆளாகி இருக்க வேண்டும். இல்லையேல் தற்சமயம் இவ்வளவு துயரத்திற்கு அவதிப்பட வேண்டியது இல்லை. இந்திய தீபகற்பம் மிகவும் மோசமான சூழலில் உள்ளது.

மதம் என்ற பெயரில் தீவிரவாத சக்தியை சொந்த நாட்டிலே வளர்க்கும் கும்பல் ஒரு பக்கம்.

உலகெங்கும் எங்கள் மதம் மட்டுமே இருக்க வேண்டும்.. என்று கண்டோர், கேட்போரையெல்லாம் மத மாற்றம் செய்யும் கும்பல் ஒரு பக்கம்.

மதமே இல்லை என்று, இருக்கும் மத நம்பிக்கைகளை எல்லாம் வாயில் வந்த மொழியில் தூற்றும் கூட்டம் ஒரு பக்கம்.

நாடு இழந்து, வீடு இழந்து, சாலையோரங்களில் வாழும் ஏராளமான கூட்டங்கள் ஒரு பக்கம்...

அறிவே இல்லாமல் வெறும் கூலிப்படைகளையும் பண பலத்தையும் விதண்டா வாதம் செய்யும் திறமையும் மட்டுமே உள்ள அரசியல்வாதிகள் கொண்ட கூட்டம் ஒரு பக்கம்...

நடப்பதை எல்லாம் பார்த்தும், நாளை வெட்டப்படுவோம் என்று தெரிந்திருந்தும், ஆட்டு மந்தைகளாய் வாழும் சாதாரன அப்பாவி [ஓட்டு போடுவதற்கே பிறந்த] மக்கள் ஒருபக்கம்.. 

வயிறை மட்டும் நிரப்பி, தனக்கென ஒரு கூட்டை கடன் வாங்கி வாழ்நாள் முழுதும் வரி செலுத்தும் கணினித் துறை சார்ந்த இயந்திரங்கள் ஒரு பக்கம்..

மேற்கண்ட தொந்தரவுகளினால், என்ன செய்வது என்றே தெரியாமல், எனக்கும் இதற்கும் சமந்தம் இல்லை, நான் பிறப்பால் மட்டுமே இந்தியன்.. ஆனால் உண்பது, உடுப்பது, உறவு கொள்வது என்று அனைத்திற்கும்  மேலை நாட்டை பின்பற்றும் பெரும்பான்மையினர் கூட்டம் ஒரு பக்கம்...



செல்லும் திசையறியாது திக்குமுக்காடும் இளங் கன்றிற்கும் மேற்கண்ட பிரிவைச் சார்ந்த கூடங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

வளர வேண்டிய குழந்தைகள் வாடிக் கிடக்கின்றன...
உணவுப் பற்றாக் குறை..
கல்லாமை..
கடன் வறுமை...
அரசியல் வன்முறைகள்... அத்துமீறல்கள் 
இது எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம்....

ஆனா வீட்ல குழந்தைக்கு சோறு இருக்காது... பொண்டாட்டி ஏதோ வேலை செஞ்சு சம்பாதிக்கற காசையும்  புடுங்கி, கொண்டுபோய்  குடிக்கிறான் பாருங்க.. என்னால தாங்க முடியல...

தட்டி கேக்க வேண்டிய அரசாங்கமே ஊத்திக் கொடுக்குது...

என்னுடைய இயலாமைய நினைச்சு வருத்தப் படுறேன்...
இந்த மாதிரி ஒரு மோசமான நாட்ல பிறந்ததிற்காக வருத்தப் படுறேன்.

நான் கால வெள்ளத்தில் பின்னோக்கிச் சென்று, ப்ருத்விராஜனுக்கும் சம்யுக்தாவிற்கும் நல்ல முறையில் திருமணம் ஏற்பாடு செய்ய ஆசைப் படுகிறேன்... அவர்களின் கந்தர்வத் திருமணம், பின்னாட்களில் நடந்த சரித்திரச் சரிவிற்கு மிகப் பெரிய காரணிகளாக இருக்கின்றன.

சும்மா இருக்குற சங்கை ஊதி  கெடுத்த மாதிரி, உள்ளூர் வைஸ்ராய்களே சேர்ந்து, இந்திய கலாச்சாரம் என்ன என்று அறியாத ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர், வீரம் பொருந்திய மன்னனாகவே இருக்கட்டும், சொந்தமா நாடே இல்லாமல் நாடோடியாய் வாழும் வெளிநாட்டு மன்னனுக்கு ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க வைத்திருக்காங்க.

ஒரு சின்ன உதாரணம்... தற்சமயம் 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் சட்ட திட்டங்களோ, அரசியல் நிலைமையோ, பொருளாதாரமோ சரிஇல்லை என்பதற்காக, அமெரிக்காவை இங்கே வந்து ஆட்சி அமைக்க கூப்புடுவீங்களா?

உள்ளூர் நிலவரம் சரியில்லை... அதற்காக இந்திய கலாச்சாரம் என்ன என்று அறியாத ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தல் ஒரு சரியான தீர்வு அல்ல.. அதற்கான பின்விளைவுகளைத்தான் நாம் இப்போது நேரிட்டுக் கொண்டிருக்கிறோம்...

மதம் சார்ந்த மக்கள்தொகை பெருகி வருகிறது... இதற்கு, மதவாத, மதப் பெருக்கக் கொள்கைகளை இயற்றிய மதவாதிகளே காரணம்...

மதம் என்பது மனிதனின் மனதில் பரவ வேண்டியது...
விதவிதமான உணவுப் பண்டங்களாலும், கல்வி, கல்லூரி, மருத்துவ சலுகைகளாலும் ஈர்க்கப் பட வேண்டியது அல்ல.

மேலை நாட்டு மதத்தலைவர்களின் பேச்சுத் திறமை அபார சக்தி வாய்ந்தது... சாதாரன குடிகளின் பலகீனத்தை நல்லா தெரிஞ்சவங்க...
ரொம்ப சாமர்த்தியமா அப்பாவி ஏழை எளிய மக்களை ரொம்ப சுலபமா மதம் மாற வச்சாங்க... இன்னும் மாத்திட்டுதான் இருக்காங்க..

இந்து மதம் ஆயிரம் காலத் தொன்மை வாய்ந்தது...
அதில் இருக்கும் சாதிகளுக்கும், கிளை சாதிகளுக்கும் அளவே இல்லை எண்ணிக்கையில் அடங்காது...
நீங்கள் செய்வது எல்லாம் மூட நம்பிக்கை...
எங்கள் மதத்தை தழுவுங்கள்...
உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்...
நீங்கள் அனைவரும் சமமாகக் கருதப் படுவீர்கள்.. என்று கூறி பெரும்பான்மையான இந்துக்களை வேறு மதத்திற்கு மாற்றினார்கள்..,
கடைசியில், அந்த மேலை நாட்டு மதத்திலும் மேற்கூறிய சாதிகளும், கிளை சாதிகளும், சாதி உட்பிரிவுகளும்... எண்ணிக்கையில் அளவிட முடியாத அளவில் உருவாகி இருப்பதை சாதிச் சான்றிதல்கள் பறை சாற்றுகின்றன..

ஊரில் வசிக்கும் ஆயிரம் மக்களில் வருடத்தில் நூறு குழந்தை பிறக்கும் நாற்பது பெரியவர்கள் இறப்பார்கள்.
2001-ம் ஆண்டில் இருந்த 80% இந்துக்கள் தற்பொழுது இந்தியாவில் பாதிக்கும் மேல் வேறு மதங்களுக்கு மாறி விட்டார்கள் என்று சொன்னால், நம்பாமல் இருக்க முடியவில்லை.
இல்லை என்று வாதாடினால், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின், மத வாரியான அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் இன்னும் வெளியிட மறுக்கிறது என்று பதில் கூறுங்கள்...

போனத பேசி ஒரு புண்ணியமும் இல்ல. இனி என்ன செய்ய-ன்னு பருப்பு மாதிரி கேள்வி மட்டும் கேக்குறாங்கயா.. பதில் தெரிஞ்சா பண்ணி இருப்போமல்ல...

இந்தியாவின் மாபெரும் சக்தியான மக்கள்தொகையே இந்தியாவை முன்னேற விடாமல் தடுக்கும் தொல்லையாக இருக்கின்றது..

மக்கள் தொகையைக் குறைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்....

ஒரு மனிதனுக்கு எத்தனை மனைவி-ன்னு கணக்கு எடுக்கறத விட்டுட்டு, ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் இருக்கலாம்-ன்னு சட்டம் போடுங்க...

ஒரே குழந்தை போதும்-ன்னு குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கரவங்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுங்க... சிறப்பு சலுகைகளுக்கு உங்களுக்கு சொல்லியா தரணும் ?

அங்க சுத்தி, இங்க சுத்தி, எங்க வந்தாலும்., கடைசில அது இ.பி.கோ -வை மாத்தி எழுதுரதுலதான் வந்து முடியுது...

ஆமா... மாத்திதான் ஆகணும்.... வருஷம் ஒரு முறை காதலிய மாத்துறதுக்கு யாரும் இங்கே வருத்தம் தெரிவிக்கல... கடந்த நூற்றாண்டில் இயற்றிய சட்ட திட்தத்த மாத்த சொன்னா மட்டும் கோவம் வருதோ?

என்னால முடீலப்பா.....
எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும், வேதாத்திரி மகரிஷி இதுக்கு ஒரு மருந்து கொடுத்துட்டு போயிருக்காரு... தினமும் வாழ்த்துங்க..-ன்னு கீழ்க்கண்ட ஸ்லோகத்தை அருளிட்டு அவுரு போயிட்டாரு... அவர் போட்டுக்கொடுத்த ரூட்ல தான் என்னால நடக்க முடீல.

உலகப் பொது நல வாழ்த்து 
உலகமெல்லாம் பருவமழை ஒத்த படி பெய்யட்டும்...
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்...
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்..
பகுத்தறிவில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கழகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்..
கல்லாமை, கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்..
நல வாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி  வீசட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...

No comments: