அறியாதே, அறியாதே!....இ பவிழவார்த் திங்கள் அறியாதே!...
அழயான் வா, ஆழியான் வார், இ ப்ரணய கல்பத்தில் அமரான் வார்.....
அழயான் வா, ஆழியான் வார், இ ப்ரணய கல்பத்தில் அமரான் வார்.....
சித்ராவின் தேனிசைக் குரலில் ஒரு இனிமையான மலையாள கீதம்.
பதினெட்டாவது முறையாக, ராகுல் அதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான்.
அன்று சனிக் கிழமை, காலேஜ்-ம் இல்லை., காலையில் இருந்து பையன் சாப்பிடவும் இல்லை. பல்லு கூட விளக்கவில்லை. பதினோரு மணி வரைக்கும்., ரூமை விட்டு வெளியே வராமல், ஐஸ்வர்யாவை நினைத்துக் கொண்டு, அவளின் கைப் பட்ட, ஒரு பொம்மையை உத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
நேற்று சாயும் காலம் அவளைப் பின்தொடர்ந்து அவளுக்குத் தெரியாமலே அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது, அவள் ஒரு கிளி பொம்மையை கையில் எடுத்துக் கொண்டு ரொம்ப நேரம் வைத்து அதனுடன் பேசிக் கொண்டிருந்தாள். அப்புறம் ஏதோ காரணத்தினால், அத்தனை வாங்காமலே வைத்து விட்டு வேறு பக்கம் சென்று விட்டாள்.
ராகுல் அதனைப் பொறுக்கிக் கொண்டு வீட்டுக்கு போனான்.
டேய், மணி பன்னண்டு ஆகுதுடா, எப்போ கீழே வர்றதா உத்தேசம்?
-படிக்கட்டு பக்கம் நின்று அம்மா குரல் கொடுத்தார்கள்.
வர்றேன்ம்மா.... மொட்டை மாடி, தனியறையில் இருந்து ராகுல் குரல் கொடுத்தான்....
ஒரு பத்து நிமிடத்தில் குளித்து விட்டு கீழே வந்தான்.
ஏதோ அவசர அவசரமா ரெண்டு தோசையை சாப்புட்டு, "எனக்கு வெளில வேலை இருக்கும்மா, அப்படியே சாயிந்தரம், நான் விவேக் வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்"-ன்னு சொல்லிட்டு கிளம்பினான்.
[ஹீரோவோட பிரண்ட்-க்கு வேற பேரே கிடைக்கலையா? ஏன்டா நீ எல்லாம் உயிரோட சுத்துற? எங்கியாவது போயி சூசைட் பண்ணிடு]
கடந்த ஒரு மாத முயற்சியால், ஒரே மாதத்தில் மலையாளம் கற்றுக் கொண்டிருந்தான்... பேசுவது ஓரளவுக்குப் புரிந்தது. ஆனால், மறுமொழி சரியாக, மலையாளத்தில் சொல்லத் தெரியாது.
நேரே தியேட்டருக்குச் சென்றான்.
யாருக்காகவோ காத்திருப்பது போலத் தெரிந்தது.
இந்த நேரத்துக்கெல்லாம் அவளுக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் முடிஞ்சிருக்குமே?..எங்கே இன்னும் ஆளைக் காணோம்?... தனியே புலம்பினான்....
எவ்வளவுதான் வலி இருந்தாலும், ஒரு தலைக் காதலில் ஒரு தனி சுகம் உண்டு.
ஒரு அரை மணி நேரம் கழித்து, ஐஸ்வர்யா, அவளது மலையாளப் பட்டாளத்துடன் அந்தப் பக்கம் வந்தாள்.
ரெண்டு மூனு பொண்ணுங்க., நாலைஞ்சு பசங்க இருப்பாங்க.
மலையாள நியூஸ் சேனல் கேட்டீங்கன்னா, மலையாளம், தமிழை விட அருமையா அழகா புரியும். பட் நாலு மலையாளிங்க பேசுறதை கேட்டீங்கன்னா, ஒரு வார்த்தை கூட புரியாது...
அதுங்க என்னமோ பேசிக்கிட்டே எங்கேயோ போனுச்சுங்க.... ராகுலுக்கு ஒண்ணுமே புரியல.
அவங்க எந்த தியேட்டருக்கு போனாலும், அந்த படத்துக்கு போயி ஐஸ்வர்யாவை பார்க்குறது தான் அவனுக்கு, அந்த நாளோட தலையாய கடமை.
விவேக்குக்கு போனை போட்டான்.
டேய் மச்சான், சீக்கிரமா கிளம்பி, மல்டிப்ளக்ஸ்-க்கு வாடா.
போடா., வேற பொழப்பில்ல? எனக்கு நிறையா வேலை இருக்கு., அங்கே ஓடுற எல்லா படத்தையும் ஏற்கனவே பாத்தாச்சு...டேய் மச்சான், நான் இன்னைக்கு அவகிட்டே என்னோட லவ்வ சொல்லலாம்-ன்னு இருக்கேண்டா.
இதைதான் நீ போன மாசமும் சொன்னே.
இதைதான் நீ போன மாசமும் சொன்னே.
இல்லடா, இன்னைக்கு கண்டிப்பா சொல்லப் போறேன்., நீ கொஞ்சம் பக்கத்துல இருந்தா எனக்கு கொஞ்சம் தைர்யமா இருக்கும்டா..
ஹ்ம்ம்., சரி வர்றேன்....
ஹ்ம்ம்., சரி வர்றேன்....
படம் ஆரம்பிச்சும், ராகுலால ஐஸ்வர்யா-கிட்டே தனியா பேச வாய்ப்பு கிடைக்கல...
இண்டர்வல்ல ஒரு சான்ஸ் கிடைச்சுச்சு பட் வயித்துக்குள்ளே ஏதோ பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி ஒரு பீலிங். ஹாய் கூட சொல்ல முடியாம அப்படியே வந்து சீட்ல உட்காந்தான்.
என்னடா, சொன்னியா?
.........
ஹ்ம்ம்ஹூம்.... நீ இந்த ஜென்மத்துல சொல்ல மாட்டே!....
.........
ஹ்ம்ம்ஹூம்.... நீ இந்த ஜென்மத்துல சொல்ல மாட்டே!....
..........
மீதி இருந்த படத்தையும், ஐஸ்வர்யாவை பார்த்து கொண்டே, அவளின் பின் சீட்டில் உட்காந்து கொண்டிருந்தான்.
டேய், உருப்புடுற வழியப் பாருடா. நீ அவளை லவ் பண்றது, அவளுக்கு சுத்தமா தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் ஒத்துக்க மாட்டா., வீனா மனசைப் போட்டு உலப்பிக்காதே!..............
"காதல்-ன்றது கரண்ட் மாதிரி, அது இல்லாம எதுவும் ஓடாது. எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுக்கணும்., அவசரப் பட்டு கரண்ட தொடக் கூடாது. ... " ஒரு காதல் விவசாயி (நம்ம விஜய் தான்), படத்துல டயலாக் மழை பொழிஞ்சிட்டு இருந்தாரு.
ராகுலுக்கு என்னவோ மாதிரி இருந்துச்சு., வாடா, போலாம்-ன்னு தியேட்டரை விட்டு வெளியே வந்துட்டான்.
ஒருத்தரோட அட்வைஸ் கேட்டு, அதன் படி நாம நடந்து, அதனால நம்ம மூக்கு உடைஞ்சா, இந்த மாதிரி எரிச்சல் வருவது மனிதனோட இயற்கை.,
நம்ம ராகுல் எத்தனை முறை, விஜய் படம் பார்த்து, அதுல அவரு யூஸ் / அட்வைஸ் பண்ணின காதல் டெக்னிக்ஸ் (வெத்து பேப்பரை, லவ் லட்டர் மாதிரி, பொண்ணுங்க நடக்குறப்போ அவங்களுக்குத் தெரியுற மாதிரி கீழே போடுறது, பொது இடத்துல பொண்ணுங்கள கலாட்டா பண்ற ரவுடிங்க கிட்டே சண்டை போடுறது, பொண்ணுங்களோட சொந்தக் காரங்க கிட்டே நல்ல பேர் எடுக்கறது., ... etc கணக்கில் அடங்காத டெக்னிக்ஸ்) எல்லாத்தையும் பாலோ பண்ணினானோ, நமக்குத் தெரியாது.
அன்னைக்கு, கொஞ்சம் சீக்கிரமாவே வீட்டுக்கு வந்துட்டான்.,
டைரியை எடுத்து எழுத ஆரம்பிச்சான்.
"இன்னைக்கு என் தேவதை, மஞ்சள் நிற சுடிதாரில் வந்து இருந்தா,
தோடு, வளையல், ஹேர் கிளிப், பொட்டும் கூட மஞ்சளாவே இருந்தது,
தியேட்டரில் அவளுக்கு தெரியுற இடத்துலேயே உட்காந்து இருந்தேன், இண்டர்வல் -க்கு முன்னாடி, என்னை ஒரு தடவை பார்த்தாள்.,
எனக்கு அப்படியே மேல பறக்குற மாதிரி இருந்துச்சு..,
அவ பக்கத்துல உட்காந்து இருந்த பிரண்ட் கிட்டே, ஏதோ என்னைப் பத்தி சொன்னா.....
உன் மை விழிப் பார்வை என் மீது விழுவதற்கு,
என் இமை திறந்து காத்திருப்பேன்.
உன் செவ்விதழ், எனைப் பற்றி பேசுவதற்கு,
என் இளமை முழுவதும் காத்திருப்பேன்.
உன் கூந்தல் என் மீது வீசுவதற்கு,
என் தென்றல் தீரும் வரை காத்திருப்பேன்.
என் இமை திறந்து காத்திருப்பேன்.
உன் செவ்விதழ், எனைப் பற்றி பேசுவதற்கு,
என் இளமை முழுவதும் காத்திருப்பேன்.
உன் கூந்தல் என் மீது வீசுவதற்கு,
என் தென்றல் தீரும் வரை காத்திருப்பேன்.
........
நான் சொல்லித்தான், என்னோட காதலை, உனக்கு புரிய வைக்கணும்-ன்னு எனக்கு அவசியம் இல்லை.
நான் சொல்லித்தான், என்னோட காதலை, உனக்கு புரிய வைக்கணும்-ன்னு எனக்கு அவசியம் இல்லை.
உண்மைக் காதலை, எந்த வார்த்தையாலும் வெளிக் காட்ட முடியாது.
என்னோட காதல் உண்மைன்னா, உனக்கே தன்னால புரியும்.
என்னோட காதல் உண்மைன்னா, உனக்கே தன்னால புரியும்.
அதுவரை, உன்னை என் நெஞ்சில் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும்,
-ராகுல்."
-ராகுல்."
அப்பா, அம்மா கூப்புடுறாங்க, அந்த LIC ரிசிப்ட் கிடைச்சுடுசாம்.,
கண்மணி அழைத்தவுடன் தான், ராகுல் நிகழ் காலத்துக்கு வந்தான். படிச்சுட்டு இருந்தது அவனோட காலேஜ் டேஸ் டைரி, ஆனாலும், நேத்து எழுதின மாதிரியே இருந்துச்சு.
வர்றேன்-ன்னு சொல்லுடா...
எல்லா நினைவுச் சின்னங்களையும் எடுத்து பழைய படி அதே பெட்டிக்குள் போட்டான்.
அங்கே இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? ஆபிஸ் க்கு லேட் ஆகலையா? ராகுலின் மனைவி குரல் கொடுத்தாள்...
இதோ, வந்துட்டேன் உஷா-ன்னு சொல்லிட்டு, கண்மணியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
இந்தாங்க, LIC ரிசிப்ட், பீரோக்குள்ளே தான் இருந்துச்சு.
ஹ்ம்ம்.,
இட்லி ஹோட்பாக்ஸ்ல இருக்கு, பிடிக்கலன்னா தோசை ஊத்திக்கோங்க., லஞ்ச்-க்கு தயிர் சாதம் போட்டு வச்சு இருக்கேன்.
ஹ்ம்ம்.,எனக்கு லேட் ஆகுது., கண்மணியை க்ருஷ்-ல விட்டுட்டு போயிடுங்க, நான் சாயும் காலம், வரும் போது கூட்டிக்கறேன். ஹ்ம்ம்.,
ஹ்ம்ம்.,எனக்கு லேட் ஆகுது., கண்மணியை க்ருஷ்-ல விட்டுட்டு போயிடுங்க, நான் சாயும் காலம், வரும் போது கூட்டிக்கறேன். ஹ்ம்ம்.,
ஆங்.. சொல்ல மறந்துட்டேன்., போன மாசமும் கரண்ட் பில் கட்டல, உங்க ஆபிஸ் போற வழில தான EB கவுன்ட்டர் இருக்கு. அப்படியே கட்டிடுங்க.சரி என்பது போல தலையாட்டினான்.
........
அப்புறம் சாயிந்தரம் சீக்கிரம் வர முடியுமா?எதுக்கு என்பது போல் உஷாவைப் பார்த்தான்..
ஒன்னுமில்ல கோவிலுக்கு போகலாம்-ன்னுதான் ஹ்ம்ம்.,
........
அப்புறம் சாயிந்தரம் சீக்கிரம் வர முடியுமா?எதுக்கு என்பது போல் உஷாவைப் பார்த்தான்..
ஒன்னுமில்ல கோவிலுக்கு போகலாம்-ன்னுதான் ஹ்ம்ம்.,
ஓகே, நான் வர்றேங்க., ..என்னோட கேப் வந்துடும்., பாய்..டாட்டா காண்பித்தான்.
ஹையோ., மறந்துட்டேன்....கண்மணி அருகே வந்து, அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஹனி, வர்றேண்டா செல்லம்- என்று கூறி, அவசர அவசரமாக கிளம்பினாள்.
ஹையோ., மறந்துட்டேன்....கண்மணி அருகே வந்து, அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஹனி, வர்றேண்டா செல்லம்- என்று கூறி, அவசர அவசரமாக கிளம்பினாள்.
கடந்த காலத்தில் இருந்து வருவதற்கு கொஞ்ச நேரமானது.
கண்மணி கையில் ஏதோ விளையாட்டுப் பொருளைக் கொடுத்து விட்டு, குளிக்கச் சென்றான்.
என்ன நினைத்தானோ தெரியவில்லை.
அவனுடைய வாய், ஒரு பாடலை முனுமுனுக்க ஆரம்பித்தது...
அறியாதே, அறியாதே!....இ பவிழவார்த் திங்கள் அறியாதே!...
அழயான் வா, ஆழியான் வார், இ ப்ரணய கல்பத்தில் அமரான் வார்.....
அழயான் வா, ஆழியான் வார், இ ப்ரணய கல்பத்தில் அமரான் வார்.....
Chapter 2
கண்ணோடு காண்பதெல்லாம்., தலைவா...! கண்களுக்குச் சொந்தமில்லை..
கண்ணோடு மணியானாய்.., அதனால், கண்ணை விட்டுப் பிரிவதில்லை...
கண்ணோடு மணியானாய்.., அதனால், கண்ணை விட்டுப் பிரிவதில்லை...
அதிகாலை., ஆறு மணியளவில், அந்த லேடீஸ் ஹோஸ்டலில் ஒரே ஒரு ரூமில் மட்டும் பாட்டுச் சத்தம் கேட்டது.
உள்ளே ஒரு தேவதை நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது...
[உன்னை யாருடா லேடீஸ் ஹாஸ்டல்க்கு உள்ளே விட்டது?]
ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ஆடியதை விட மிகுந்த நளினத்துடன், நெளிவுடன், உருக்கத்துடன் நம்ம ஐஸ்வர்யா ஆடிக் கொண்டிருந்தாள். இல்ல நாட்டியத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்...
நாட்டிய கலைஞர்களுக்கு நடராஜன் தான் கடவுள்., அவரைத் தலைவராகவும், தன்னை சேவகியாகவும் பாவித்து, பாடுவது, ஆடுவது அவர்களது வழக்கம்.
அதற்கு ஐஸ்வர்யாவும் விதி விளக்கல்ல...
தினமும், ஒரு நல்ல பாடலுக்கு பரத நாட்டியம் ஆடுவது அவளது தினசரி வாழ்கையின் ஒரு பகுதியாகவே மாற்றி வைத்திருந்தாள்.
நிறுத்தம், நிருத்தியம், பிறகு நாட்டியம்... மூன்றிலும் இவள் கை தேர்ந்தவள்.....
[for more information, kindly read சிவகாமியின் சபதம்... ]
முகம் வேர்க்கும் வரை ஆடுவாள். வேண்டுமென்றே வேகமாக ஆடுவாள்....
-காலைத் தென்றல், சூரியன் உதயமாகத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரம், அந்த நேரத்தில், மனதை உருக்கும் ஒரு பாடல், அதற்குத் தகுந்த நடனம்... இதற்க்கெல்லாம் கொடுத்து வைத்த தமிழ்ப் பெண்கள் எண்ணிக்கையில் குறைவு.
ஐஸ்வர்யாவின் முழுப் பெயர் ஐஸ்வர்யா நாயர் கருத்திருமால் வெள்ளிலாப்புளி, பாலக்காடு.
கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், அவளுக்குத் தமிழ், மலையாளத்தை விட மிக நன்றாகத் தெரியும்.
நாட்டியப் பெண்களை கொஞ்சம் உற்று நோக்கினால் அவர்களின், நடையும் உடையும், பேசும் செயலும்.. எல்லாமுமே ஒரு பாவத்துடன் இருக்கும்... ஐஸ்வர்யா பிறக்கும் பொழுதே பேரழகுடன் பிறந்தவள். அவள் நடவடிக்கைகளை எல்லாம் அவளைத் தவிர வேறு யார் செய்தாலும், நமக்கு எரிச்சலைக் கிளப்பும். அனால், அவளைப் பார்க்கும் போது அவ்வளவும் அழகுக்கு அழகு சேர்ப்பது போல இருக்கும்
வகுப்பில் பாடம் கவனிக்கும் போது கூட ஒரு நளினத்துடனே உட்காந்து இருப்பாள், ஆசிரியர் சொல்வதை ஆமோதிக்கும் பொருட்டு அவள் தலையை ஆட்டுவது கூட, ரசிக்கக் கூடியதாக இருக்கும். அவள் தலையை ஆட்டும் பொழுது காதருகே அவளுடன் சேர்ந்து ஆடும் அந்த ஒரு கொத்து முடி கூட சுருளுடன் அழகாக இருக்கும். அதற்கும் மேலாக, ஒரு சின்ன வளையம்தான் காதில் அணிந்திருப்பாள். அது அவளுடன் இருப்பதாலேயே அழகாக இருக்கும்.... அவள் கண்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
[டேய்., போதும்டா... படிக்கறவங்க பாவம்.]
அந்த பெரிய, கரிய கண்களினால் அவள் ஒரு பையனை எதேச்சையாக பார்த்துட்டா அவ்வளவுதான்... அவனுக்கு அந்த வருடம் ஒரு அரியர் கண்பிர்ம் (confirm)...
அவள் வகுப்பில் அவளால், மன்னிக்கவும், அவளை நினைத்து தாடியுடன் அலைபவர்கள் ஏராளம், ஏராளம்.., அவளுக்காக சிறிய, பெரிய சண்டைகள் எல்லாம் கூட நடந்திருக்கின்றன.
[இப்போ, நீ என்னதான் சொல்ல வர்றே?]
[ஐஸ்வர்யா ஒரு சூப்பர் பிகரு...]
[சரி, ஓகே, நாங்க ஒத்துக்கறோம்., நீ கதைக்குப் போ!..]
ஞான் நின்னே ஒரு நல்ல பிரண்ட் ஆயிட்டனு கண்டது... நீ இங்கனே பறையமென்னு ஞான் ஸ்வப்னத்தில் போலும் விசாரிசில்லா....
தயவு செய்து மேலால் எண்டே முன்பில் வராது.....ஞான் போகுன்னு... குட் பாய்.
தயவு செய்து மேலால் எண்டே முன்பில் வராது.....ஞான் போகுன்னு... குட் பாய்.
அம்மு., ஞான் பரயுன்னது குறைச்சு சிந்திச்சு நோக்கு.. எண்டே ஜீவனன்னும் நீ.,
ஞான் நின்னே ஓர் மகாராணியப் போலே நோக்கும்....
ஞான் நின்னே ஓர் மகாராணியப் போலே நோக்கும்....
ஞான் இத்தரையும் நாள்., நின்னே ஒரு நல்ல ப்ரண்டா ஆயிட்டன்னு கண்டிருன்னது.,
இனி ஒருக்காலும் எனிக்கி நின்னே ஒரு பிரண்ட் ஆயிட்டு கூடி கணன் பட்டில்லா...
இனி ஒருக்காலும் எனிக்கி நின்னே ஒரு பிரண்ட் ஆயிட்டு கூடி கணன் பட்டில்லா...
இது, ஐஸ்வர்யாவின் நண்பர்களில் பெரும்பாலானோர் பெறும் வசைகள்.
முதல்ல ஐஸ்வர்யா-கிட்டே நல்ல பிரிண்டா பழகுவானுங்க., அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ப்ரொபோஸ் பண்ணுவானுங்க., அதுக்கு அப்புறம்., மேற்கண்ட வசனம் தான்...
இந்த கூட்டத்தில் ஒருத்தனாக இருக்க ராகுலுக்கு மனமில்லை...
அவன் ஐஸ்வர்யாவைக் காதலிப்பது, அவனுக்கும் அவனுடைய மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
[ஆனா உனக்குத் தெரிஞ்சது எவ்வளவு தப்பா போயிடுச்சு....இப்போ ஊரே சிரிக்குது...]
நல்ல வேலையாக, ஐஸ்வர்யா ராகுலின் வகுப்பில் இல்லை. பக்கத்துக்கு கிளாஸ்-சில் இருந்தாள். அதனால், ஓரளவுக்குத் தப்பித்தான்.
ஒருதலைக் காதல் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நிலவைப் போல் கொஞ்ச நாள் பெருசாகும், அப்புறம் சின்னதாகும்., கொஞ்ச நாள் கழிச்சு மறைஞ்சது போல இருக்கும்., அப்புறம் பௌர்ணமியப் போல திடீர்-ன்னு ஜொலிக்கும்., this is directionally proportional to the amount of time you think about her and the moments you spent with her.
[டேய் கொலம்பஸ்., கப்பல்ல மட்டும் போ, கடல்ல இறங்கிடாதே!.. மனசுல நியூட்டன்-ன்னு நினைப்பு.]
கடவுளை நாம குத்தம் சொல்லக் கூடாது., எல்லாத்துக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கறாரு. அன்னிக்கு அந்த சான்ஸ் ராகுலுக்குக் கிடைச்சது.
அது செமஸ்டர் விடுமுறை., ஐஸ்வர்யாவின் இடத்தை, கொஞ்சம் ஒரு ஓரமாக, பாடங்களுக்கும் கொடுத்து, லேசாகப் படித்து எல்லாப் பரீட்சைகளையும் வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன், காலேஜ்-இல் இருந்து வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான்.
இன்னும் பத்து நாள், நான் எப்படி அவளைப் பார்க்காமல் இருப்பேன்-ன்னு நினைத்துக் கொண்டே மெதுவாக சென்று கொண்டிருந்தான்.
Aishwayrya என்ற பெயருடன் ஒரு கேரளா ரெஜிஸ்ட்ரேசன் அம்பாஸிடர், ராகுலின் பைக்கைக் கடந்து சென்றது.உள்ளே கறுப்புக் கண்ணாடியின் வழியாக, ஒரு பெண்ணின் தலை, மல்லிகைப் பூ, அருகில் இருப்பவருடன் பேசிக் கொண்டு இருந்ததால், அதே சுருள் முடி + வளையம் தெரிந்தது.. ராகுலின் மனதில் திடீரென்று குற்றாலச் சாரல்.
இன்னும் சற்று உத்துப் பார்த்தான். கார் சென்ற வழியில் தண்ணீர் போன்ற திரவம் சொட்டிக் கொண்டே இருந்ததற்கான அடையாளம் தெரிந்தது.
கீரை மாத்திப் போட்டு, ஒரே நிமிடத்தில் காரை ஓவர் டேக் செய்து டிரைவரிடம் சிக்னல் கொடுத்தான்...
டிரைவருக்கு முதலில் புரியவில்லை. பிறகுதான் வண்டியை நிறுத்த முயற்சி செய்தான். அப்போதுதான் தெரிந்தது, கிளுட்ச் கட் ஆகி இருந்தது.
ராகுல், காரை வலது புறமாக ஓவர் டேக் செய்து சிக்னல் கொடுத்து விட்டு, காரின் இடது பக்கமாக வந்தான். டிரைவர் காரை ராகுலின் வண்டிக்கு அருகே வந்து நிறுத்தும் போதுதான் தெரிந்தது கிளுட்ச் கட் ஆகி இருந்தது. வண்டி தற்காலிகமாக நின்றிருந்தாலும் வந்த வேகத்திற்கு இருந்த ஆக்சிலறேசனுக்கு ராகுலின் வண்டியின் மீது லேசாக மோதியது.
அம்பாஸிடார்-க்கு, அது லேசான மோதல் தான். ஆனால் ராகுல், வண்டியில் இருந்து எகிறி நாலு அடி தூரம் தள்ளி விழுந்தான்.
அச்சா, இவன் எண்டே பக்கத்துக்கு கிளாஸ் ஸ்டுடென்ட். இவன் எதுக்கு நம்ம வண்டியை நிறுத்தினான்.
அப்பா ஏதோ சொல்ல வருவதற்கு விசாரிப்பதற்கு முன், டிரைவர் என்ன நடந்ததென்று விளக்கினான்.
எண்டே குருவாயூரப்பா... அவனுக்கு என்ன ஆயிட்டுன்னு நோக்கு.. - அம்மா பதறினார்கள்..
அவசர அவசரமாக காரை விட்டு அனைவரும் வெளியே வந்தனர்.
கையில் லேசான சிராய்ப்புடன், ராகுல் தட்டுத் தடுமாறி எந்திரிச்சான்...
hey.. hey.. are you all right? உனக்கு ஒன்னும் ஆகல இல்ல? - அச்சன் விசாரித்தார்.
எஸ் சார், ஐ ஆம் ஓகே.. நொதிங் பிக்... இட்ஸ் லைட் ஸ்க்ராட்ச்....
லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது...
ஐஸ்வர்யா, அந்த பர்ஸ்ட் எயிட் கிட் எடு, அச்சன் சொல்வதற்கு முன் ஐஸ்வர்யா, முதலுதவிப் பெட்டியுடன் ராகுல் அருகே நின்றாள். அவளே detol அப்பளை செய்து கட்டு போட்டாள்....
ராகுல், அந்த ஐந்து நிமிடத்தில், சுவர்க்கத்தில் கால் வைத்து விட்டு திரும்பி வந்தான்.
சிரித்துக் கொண்டே, ரொம்ப தேங்க்ஸ்., நீங்க வந்து எங்கள வார்ன் பண்ணி இருக்கலன்னா, ரொம்ப பெரிய பிரச்சனையாயிருக்கும்.
முதன் முதலில் இண்டர்வியு-விற்கு செல்லும் புது மாணவனைப் போல நெஞ்சுக்குள் அவ்வளவு பதட்டம். சிரித்துக் கொண்டே., "பரவாயில்லங்க.. ஈ ஈ ஈ .. "
ரொம்ப தேங்க்ஸ் தம்பி..-அச்சன்.
சிரித்துக் கொண்டே, ஈ ஆளு கொள்ளாமல்லோ? - அம்மே
அப்போ, நாங்க வர்றோம், பாய், டேக் கேர்.. சி யு.. - ஐஸ்வர்யா..
எல்லாத்துக்கும் "ஈ ஈ ஈ ஈ ..." -ராகுல்.
ஐஸ்வர்யா லைட் ஆ பார்த்தாலே, இவனுக்கு தூக்கம் வராது., இன்னைக்கு தொட்டு, கட்டு போட்டு, சிரிச்சு, பாய் சொல்லிட்டு போயிருக்கா...
அன்னிக்கு டைரில எழுதுறதுக்கு இடம் பத்தலைன்னு, ஒரு A4 சீட் அட்டாச் பண்ணி., பையன் சும்மா பூந்து விளையாடிட்டான்...
இங்கிலாந்து, பிராட்போர்ட் சிட்டி...
பல நெருக்கடியான அபார்ட்மேன்ட்களுக்கு மத்தியில் ஒரு அழகான, சாப்ட்வேர் கம்பெனி-யின் கெஸ்ட் ஹவுஸ்... IST இரவு பன்னிரண்டு மணி ஆவதற்காக ஒரு ஜீவன் காத்துக் கொண்டிருந்தது....
பன்னிரண்டு மணியும் ஆனது.
மொபைலை எடுத்து, காதில் வைத்தது, நான்கைந்து முறை மறுபடியும், மறுபடியும்
ISD கால் செய்தது, எந்த பதிலும் இல்லாததால், ஒரு ஈமெயில்ஐ கம்போஸ் செய்து அனுப்பியது...
Dear Rahul,
Many more happy Returns of the day...Happy Birthday...
just try to be happy as much as possible...
I pray got to give you fruitful results in all your attempts till your life time.
with love
-Sandhya.
Chapter 3
கண்ணின் மணி, கண்ணின் மணி நிஜம் கேளம்மா...
கங்கை நதி, வைகை நதி பெண் தானம்மா...
கடல் நதி என்பது...
ஐயோ அம்மா, உன்னோட தொல்லை தாங்கல, இப்போ டிவி-ய நிறுத்தப் போறியா இல்லையா?
கங்கை நதி, வைகை நதி பெண் தானம்மா...
கடல் நதி என்பது...
ஐயோ அம்மா, உன்னோட தொல்லை தாங்கல, இப்போ டிவி-ய நிறுத்தப் போறியா இல்லையா?
....
உன்னோட இந்த டெலி சீரியல் தொல்லைக்கு பதிலா ஹாஸ்டலே தேவலாம் போல இருக்கு.அலுத்துக் கொண்டாள் சந்தியா
ஏண்டி, இப்போ பொங்குறே? உனக்கு பிடிக்கலன்னா பாக்காதே!
உன்னோட இந்த டெலி சீரியல் தொல்லைக்கு பதிலா ஹாஸ்டலே தேவலாம் போல இருக்கு.அலுத்துக் கொண்டாள் சந்தியா
ஏண்டி, இப்போ பொங்குறே? உனக்கு பிடிக்கலன்னா பாக்காதே!
ஏம்மா, ஒரு நாளைக்கு எத்தனை சீரியல் தான் பார்ப்பே? ஆறரை மணிக்கு ஆரம்பிச்சே, இப்போ மணி பத்து ஆகப் போகுது.
சரி, உனக்கு நான் சமைக்க கத்து கொடுக்கறேன்னு சொன்னேனோ இல்லையோ? நீ ஒத்துன்டியா?
எதுக்கு? என்னையும் உன்னை மாதிரி ஆக்கிடலாம்-ன்னு பாக்குறியா? என்னால எல்லாம் புகுந்த ஆத்துல உக்காந்துண்டு, வேலா வேலைக்கு பொங்கி போட்டுண்டு இருக்க முடியாது.
பொண்ணா பொறந்துட்டா, இதெல்லாம் செஞ்சுதாண்டி ஆகணும்... பின்னே என்ன பண்ணப் போறே?
பொண்ணா பொறந்துட்டா, இதெல்லாம் செஞ்சுதாண்டி ஆகணும்... பின்னே என்ன பண்ணப் போறே?
பாத்துண்டே இரு... நான் என்ன பண்ணப் போறேன்னு... இப்போதைக்கு சொல்ல மாட்டேன்.
ஹ்ம்ம்., பாக்கத்தானே போறேன்... வந்துட்டா என்னோட மாமியா மாதிரி.,
நகருடீ.,போயி உன் தோப்பனாருக்கு எதாவது வேணுமா-ன்னு கேளு போ!...
இந்த சீரியல் முடிஞ்சவுடனே, நான் வந்து சமைக்குறேன்-ன்னு சொல்லு....
ஹ்மம்க்கூம்...

தன்னுடைய அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டாள்.
-இந்த செமஸ்டர் லீவ் வந்தா, பாதி பேத்துக்கு சந்தோசம், மீதி பேத்துக்கு நிம்மதி போயிடுது....
-இந்த செமஸ்டர் லீவ் வந்தா, பாதி பேத்துக்கு சந்தோசம், மீதி பேத்துக்கு நிம்மதி போயிடுது....
போன மாசம் நடந்தது எல்லாமே அப்படியே மனக்கண் முன்னாடி வந்தது.
சந்தியா, மற்ற மாமிகளைப் போல (ததக்கா புதக்கா, மொழாம்பழம், ஹோர்லிக்ஸ் பாட்டில், பெப்சி உமா... etc ) அல்ல. இவள் மிகவும் சாதாரணமானவள். நிறமும் மாநிறம்தான்.
பாத்தா இவளை, மாமி என்று யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
இவளுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. உண்மை மட்டுமே பேசுவாள். (மோஸ்ட் ஓப் தி டைம்ஸ் ) அதைப் போல உண்மை பேசுபவர்களை மட்டுமே இவளுக்குப் பிடிக்கும்.
பெண்களுக்கும் தனக்கு வரப் போகிற ஆளு எப்படி எல்லாம் இருக்கணும்-ன்னு லைட்-ஆ சின்ன சின்ன கற்பனைகள் இருக்கும். அந்த கற்பனைக்கு ஒரு உருவமும் கொடுத்து வைத்து இருப்பார்கள். தனியாக இருக்கும் பொழுது அந்த உருவத்துடன் பேசிக் கொண்டிருப்பார்கள்.
[டேய், இதை மகளிர் மட்டும் படத்துல ரேவதி ஏற்கனவே, கமலஹாசனை கம்ப்யூட்டர்ல வரைஞ்சு காட்டிடாங்கடா., ஏதாவது புது பிட் இருந்தா போடு ]
[டேய், இதை மகளிர் மட்டும் படத்துல ரேவதி ஏற்கனவே, கமலஹாசனை கம்ப்யூட்டர்ல வரைஞ்சு காட்டிடாங்கடா., ஏதாவது புது பிட் இருந்தா போடு ]
இந்த கற்பனை உருவத்திற்கு கொஞ்சம் மேட்ச் ஆன மாதிரி ஒரு ஆளு, அவளோட கிளாஸ்லையே இருந்தான். அவன் வேறு யாரும் இல்ல நம்ம விவேக்தான்.. சாரி, சாரி. நம்ம ராகுல்-தான்
[விட்டா நீ கதையையே மாத்திடுவ போல இருக்கே?]
[விட்டா நீ கதையையே மாத்திடுவ போல இருக்கே?]
அன்னிக்கு மாடல் பிரக்டிகல் லேப்-ல என்ன நடந்துச்சுன்னா, ராகுல் வழக்கம் போல ஒண்ணுமே தெரியாம நிமொநிக்ஸ் கோடை மட்டும் எழுதிட்டு என்ன பண்றது-ன்னு 8086 ப்ராசெஸ்சர் கிட்டை பார்த்துட்டு இருந்தான்.
அவனுக்கு அடுத்த ரோல் நம்பர் சந்தியா. அவனைக் கூப்பிட்டு என்ன ஆச்சு-ன்னு கேட்டாள். இவன் கூச்சமே இல்லாம உண்மையை ஒத்துக்கிட்டான். எனக்கு ஒண்ணுமே தெரியாது சந்தியா.-ன்னு சொன்னான்.
சரி சரி, கவலைப் படாதே-ன்னு அவள் கர்சிப்-க்கு உள்ளே இருந்து ஒரு பிட்டை எடுத்து இவன் கையில் கொடுத்தாள். அது ஒரு சின்ன துண்டுச் சீட்டுதான், ஆனால் அதுக்குள்ளே ஒரு ரெகார்ட் நோட்டே இருந்தது.
அடிப் பாவி, உன்னை இத்தனை நாளா நல்ல பொண்ணு-ன்னு இல்ல நினைச்சுகிட்டு இருந்தேன்?
அடிப் பாவி, உன்னை இத்தனை நாளா நல்ல பொண்ணு-ன்னு இல்ல நினைச்சுகிட்டு இருந்தேன்?
சரி, உனக்கு வேண்டாம்-ன்னா திருப்பிக் கொடுத்துடுஅங்கே என்ன சத்தம்? -ன்னு லேப் இன்சார்ஜ் சத்தம் போட்டாரு.
அதுக்கப்புறம் இவங்க எதுவும் பேசுல.
பிரக்டிகல் முடிஞ்சவாட்டி அவளோட பிட்டை அவள் கைலையே திருப்பிக் கொடுத்துட்டான்.
ஏன், ஒரு மாதிரி இருக்கே? அதுதான், லேப் முடிஞ்சிடுச்சு இல்ல?
ம்ம்ம்...உன் மூஞ்சி.
ஏன்..?என்ன கையெழுத்து இது? எங்க வீட்டு கோழி கூட கொஞ்சம் நல்லா கிறுக்கும். எனக்கு ஒண்ணுமே புரியல. கடைசில நான் எழுதின நிமொநிக்ஸ் கோடே வொர்க் ஆயிடுச்சு.
சரி விடு, அதுதான் வொர்க் ஆயிடுச்சு இல்ல?

அப்புறம்? ஸ்டடி லீவ்-க்கு என்ன பண்ணப் போற?
வேற என்ன பண்ணப் போறேன்? படிக்கத்தான் போறேன்..
வேற என்ன பண்ணப் போறேன்? படிக்கத்தான் போறேன்..
ஹையோ மக்கு., மக்கு... ஸ்டடி லீவ் படிக்கறதுக்கு இல்ல. இத்தனை நாளா படிச்சதால ரெஸ்ட் எடுக்கறதுக்கு. ஹி ஹி ஹி....இருவரும் சிரித்தனர்.
நல்லா ரெஸ்ட் எடுத்தாதான், பரீட்சைக்கு ஒரு நாள் முன்னாடி உட்காந்து த்ரோ நைட் அடிச்சு, ஒரு தடவை ரிவைஸ் பண்ணி, தெரியாததுக்கெல்லாம் ஒரு சின்ன பேப்பர்ல நோட்ஸ் எடுத்து அப்புறம் போயி தைர்யமா பரீட்சை எழுத முடியும்..ஹி ஹி ஹி....இருவரும் சிரித்தனர்.
ஹ்ம்ம்., எப்படியோ பாஸ் ஆனா சரி. கம்ப்யூட்டர் எஞ்சிநியருங்க எல்லாம் எலக்ட்ரானிக்ஸ் படிக்கணும்-ன்னு சொல்லி உயிரை எடுக்கரானுங்க.
ஹ்ம்ம்., .....

ஹே ராகுல்., எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா?
ம்ம், சொல்லு.
ம்ம், சொல்லு.
எனக்கு ஒரு நல்ல க்ரீடிங்க்ஸ் கார்டு வேணும்.. வாங்கிட்டு வரியா?
ம்ம், எதுக்கு-ன்னு சொல்லு.
ம்ம், எதுக்கு-ன்னு சொல்லு.
பர்த்டே கார்டு தான்.
ஓகே. நான் நாளைக்கு லைப்ரரிக்கு வருவேன். அப்போ வந்து வாங்கிக்கோ.
ஓகே, தேங்க்ஸ்... பாய்.
ஓகே. நான் நாளைக்கு லைப்ரரிக்கு வருவேன். அப்போ வந்து வாங்கிக்கோ.
ஓகே, தேங்க்ஸ்... பாய்.
-ராகுலுக்கு சந்தியாவின் பேரில் பெரிதாக எந்த அபிமானமும் இல்லை. ஒரே கிளாஸ்-இல் இருப்பதால் கொஞ்சம் பிரண்ட் அவ்வளவுதான். ஆனால், சந்தியாவிற்கோ ராகுல் என்றாள் உயிர், இருந்தாலும் அவ்வளவாக வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாள்.
.......
.......
என்ன.. மாமி, லேப்ல கலக்கிண்டு இருந்தேள்?
யாரென்று திரும்பிப் பார்த்தாள்., வேற யாரு நம்மகிட்டே அயர் பாஷையில் பேசி கிண்டல் பண்ணப் போறாங்க? விவேக்தான்.
[டேய், கதை நல்லாதான போயிட்டு இருக்கு, இப்போ நீ எதுக்கு உள்ளே வர்றே?]
வாடாப்பா அம்பி, உன்னைத்தான் பாத்துண்டே இருந்தேன்.
எத்தனை பிட்டு மாமி வச்சு இருந்தேள்? எந்த ப்ரோக்ராம் வந்தாலும் எழுதுறதுக்கு தயாரா இருந்தேள் போல இருக்கே?
வாடாப்பா அம்பி, உன்னைத்தான் பாத்துண்டே இருந்தேன்.
எத்தனை பிட்டு மாமி வச்சு இருந்தேள்? எந்த ப்ரோக்ராம் வந்தாலும் எழுதுறதுக்கு தயாரா இருந்தேள் போல இருக்கே?
உனக்கு என்னடா வந்துச்சு? நீ என்னமோ யோக்கியம் ஒன்றை காசு மாதிரி பேசுறே?
ஹி ஹிஹி..
ஹி ஹிஹி..
சரி மாமி, எக்ஸாம் ஹால்-ல உங்களுக்கு பக்கத்துக்கு கொலம்ன்(column)-ல தான் நான் உட்காருவேன் போல இருக்கு. நீங்க தான் உங்க பெரிய மனசை கொஞ்சம்..
என்ன?
என்ன?
இல்ல இல்ல., நீங்கதான் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, பேப்பரைத் திறந்து காமிக்கணும். இல்லாட்டி அடிசனல் ஷீட்டையாவது கொடுக்கணும்
அச்சச்சோ..செருப்பு புதுசா இருக்கே... இப்போ உன்னால பிஞ்சு போயிடுச்சுன்னா, நான் மறுபடியும் போயி வேற செருப்பு வாங்குறதுக்கு இப்போ என்கிட்டே டைம் இல்லடா அம்பி, எக்ஸாம் முடிஞ்சவாட்டி வா, நன்னா கொடுக்கறேன்.

ஹி ஹிஹி.. ஹ்ம்ம்.,
சந்தியாவை வம்பிழுக்கவில்லையென்றால் இவனுக்குத் தூக்கம் வராது., எவ்வளவுதான் ஓட்டினாலும் சந்தியா, அதை பெருசா எடுத்துக்க மாட்டாள்.
அவன் வகுப்பிலேயே அவனுக்குப் பிடித்த ஒரே பெண் சந்தியா தான். பிரிஎண்ட்ஷிப்-மட்டும்தான், வேற எதுவும் இல்ல. சோ நோ இஸ்சுஸ்.
[ஹையோ, இதைக் கேட்க யாருமே இல்லையா? உங்க அம்மா உன்னப் பெத்ததுக்கு ஒரு அம்மிக் கல்லைப் பெத்து இருக்கலாம்., ஏண்டா இப்படி கொடுமை பண்ற?]
அடுத்த நாள், என்றும் காணாத புதுப் பொலிவுடன் சந்தியா வந்திருந்தாள். எந்தப் பெண்ணும் தாவணியில் பார்க்கும் பொழுது இரட்டை அழகுடன்தான் இருப்பார்கள். ஆனால் சந்தியா மூன்று மடங்கு அதிக அழகுடன் இருந்தாள்.
காலையில் முதல் வேலையாக லைப்ரரி-க்கு சென்று காத்திருந்தாள்.
அரை மணி நேரமானது.
ஆனால் சந்தியாவிற்கு ஆறு வருடம் ஆனதைப் போல இருந்தது....ராகுல் வந்தான். ...
ஹாய் சந்தியா..
ஹப்பா.. வந்துட்டியா! ஏன் இவ்ளோ லேட்?
நான் உன்கிட்டே சீக்கிரம் வர்றேன்-ன்னு சொல்லவே இல்லையே?
-சிரித்தான்.
-சிரித்தான்.
யாருக்கு பர்த்டே? என்னை கார்டு வாங்கிட்டு வரச் சொன்னே? என்றவாறு, க்ரீடிங்க்ஸ் கார்டை எடுத்தான்.
ஏன், என்னைப் பார்த்தா பர்த்டே பேபி மாதிரி தெரியலையா? - சோகத்துடன் கேட்டாள்.
ஒஹ் மை காட்.... ஐ ஆம் சோ சாரி., இன்னைக்கு உனக்குத்தான் பர்த்டேவா? ஹாப்பி பர்த்டே... ஏன் சொல்லவே இல்ல?
எத்தனை வருஷம் சொல்லுவேன்?
இந்த காலேஜ்-க்கு வந்தவாட்டி, இது நான் கொண்டாடுற மூனாவது பர்த்டே... ஒவ்வொரு முறையும் நானேதான் உன்கிட்டே வந்து., ஹை ராகுல், இன்னைக்கு எனக்கு பர்த்டே., இந்தா முட்டாய் எடுத்துக்கோ-ன்னு சொல்லுறேன்.

ஒஹ்.. சாரி பா. நான் அடுத்த முறை, கண்டிப்பா ஞாபகம் வச்சுக்கறேன். ஹாப்பி பர்த்டே சந்தியா-ராகுல் என்று ஒரு கையெழுத்து போட்டுக் கொடுத்தான்.
சரி இந்தா. என்று சொல்லி, அவன் வாங்கி வந்த கார்டிலேயே என்று எழுதி, கீழே ஒரு மன்ச் பாக்சை எடுத்து நீட்டினாள்.. உனக்குத்தான் முதல்ல கொடுக்கறேன். ஹாஸ்டல்ல கூட வேற யாருக்கும் கொடுக்கல...
ஒஹ்.. அப்படியா? ஏன்?
ஒன்னுமில்ல, சும்மாதான்...
சரி சந்தியா, எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்புறேன்...

சந்தியாவின் முகம் மாறியது,, ஏன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணேன்? கான்டீன் போயிட்டு அப்புறம் கிளம்பலாம்...
இல்ல சந்தியா., எனக்கு கொஞ்சம் அவசரமா போகணும்.. சாரி... டோன்ட் மைன்ட். பாய்.........
இல்ல சந்தியா., எனக்கு கொஞ்சம் அவசரமா போகணும்.. சாரி... டோன்ட் மைன்ட். பாய்.........
சந்தியாவும் எத்தனையோ முறை அவளுடைய மனசை ராகுலுக்கு இந்த மாதிரி மறைமுகமாக வெளிப்படுத்தினாள்.. பட் இந்த ராகுல் மர மண்டைக்கு எதுவும் ஏறல. சந்தியா எல்லாத்துகிட்டேயும் சகஜமா பழகுவா., அதுனாலாதான் என்கிட்டேயும் நல்லா பேசுறா- அப்படி-ன்னு நினைசுக்கிட்டு சும்மா இருந்துட்டான்.
ஆனால், ஒவ்வொரு முறையும் இவன் உதாசினப் படுதுத்தினவாட்டி, சந்தியா ரொம்ப பீல் பண்ணுவா.
அதுவும் இல்லாம, ராகுலுக்கு, ஐஸ்வர்யாவைப் பத்தி நினைக்கறதுக்கே நேரம் பத்தல.
ராகுல், எழுந்து கிளம்பி விட்டான். சந்தியாவிற்கு அழுகை வரும் போல இருந்தது... என்ன செய்வதென்றே தெரியாமல் உட்காந்திருந்தாள்.
ஹாப்பி பர்த்டே சந்தியா... அவள் உட்காந்திருந்த டேபிளின் பின்புறமிருந்து சத்தம் கேட்டது.
யாரென்று திரும்பிப் பார்த்தாள்.
அங்கே பரத் நின்று கொண்டிருந்தான்.
[டேய், எ த் த னை லவ்வுடா?]
நீங்க பர்த்டே கொண்டாடுறதுக்கு வேற இடமே கிடைக்கலையா? ஏன் லைப்ரரி-ல வந்து சத்தம் போடுறீங்க? வெளில போங்க... லைப்ரரியன் சத்தம் போட்டார்.
[டேய், எ த் த னை லவ்வுடா?]
நீங்க பர்த்டே கொண்டாடுறதுக்கு வேற இடமே கிடைக்கலையா? ஏன் லைப்ரரி-ல வந்து சத்தம் போடுறீங்க? வெளில போங்க... லைப்ரரியன் சத்தம் போட்டார்.
உடனே., பரத்தும் சந்தியாவும் லைப்ரரியை விட்டு வெளியே வந்தனர்.
தேங்க்ஸ் பரத். இந்தா என்று மன்ச் பாக்சை நீட்டினாள்.- குரலில் பழைய குதூகலம் இல்லை.
உனக்கு இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு. ஈ.. ஈ..
உனக்கு இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு. ஈ.. ஈ..
:-)இந்தா., ஒரு கார்டையும் ஒரு சின்ன கிப்ட் பாக்சையும் கொடுத்தான்.
....தேங்க்ஸ்...
அப்புறம், ப்ரிபரேசன் எல்லாம் எப்படி இருக்கு?
...ஹ்ம்ம்., போயிட்டு இருக்கு... சரி ஓகே பரத், நான் கிளம்புறேன். பாய்.
அப்புறம், ப்ரிபரேசன் எல்லாம் எப்படி இருக்கு?
...ஹ்ம்ம்., போயிட்டு இருக்கு... சரி ஓகே பரத், நான் கிளம்புறேன். பாய்.
ஏதோ சொல்ல வந்தான். ஆனால், சந்தியா அவனுக்காக காத்திருக்கவில்லை. கிளம்பி விட்டாள்.
இது பரத் சந்தியாவிற்கு கொடுக்கும் மூனாவது கிரீடிங் கார்டு அண்ட் கிப்ட்.
அன்றிரவு பரத்தின் தினசரிக் குறிப்பில் இருந்து சில வரிகள்...
வானம் எங்கும் உன் பிம்பம், ஆனால் கையில் சேரவில்லை....
காற்றில் எங்கும் உன் வாசம்.. வெறும் வாசம் வாழ்கை இல்லை...
டேய், கண்ணா!.. இந்தா போட்டோவைக் கொஞ்சம் பாருடா... உனக்கு பிடிச்சிருக்கு-ன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு. அப்புறம் நான் பார்த்துக்கறேன்.. பரத்தின் அம்மா அவனிடம் கேட்டார்கள்.
அம்மா., நான் உன்கிட்டே எத்தனை தடவை சொல்லுறது?.. எனக்கு இதுல எல்லாம் இஷ்டம் இல்ல. என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க.
இப்போ உனக்கு கல்யாணம் பண்றதுக்கு சரியான வயசு. ஏன் வேண்டாம்-ன்னு சொல்லுறே?- அப்பா கேட்டார்.
...... எனக்கு கல்யாணமே வேண்டாம்., என்னை இப்படியே விட்டுடுங்க.... எப்போ ஊருக்கு வந்தாலும் இதே தொல்லை- என்றவாறு எழுந்து உள்ளே சென்றான்.

என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான்?..
.......
நீயாச்சு, உன் பையானாச்சு.. என்னமோ பண்ணுங்க போங்க., அப்பாவும் எழுந்து சென்றார்.அன்று சனிக் கிழமை., அடுத்த நாள் சாயும் காலம் பரத் பெங்களுருக்கு கிளம்பினான். வழக்கம் போல அவனை, பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விட,அப்பா வண்டியை எடுத்து தயாராக நின்றார்... பரத் வந்து வண்டியை எடுத்தான்., அப்பா பின் சீட்டில் உட்காந்து கொண்டார். அவர்கள் வீட்டில் இருந்து பஸ் ஸ்டான்ட் வருவதற்கு கொஞ்ச தூரம் செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் அவ்வளவாக வீடுகள் இல்லை.

கொஞ்ச தூரம் சென்றவுடன்,
டேய்., பரத் கொஞ்சம் வண்டிய நிறுத்து. நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்.- ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தினான்.
டேய்., பரத் கொஞ்சம் வண்டிய நிறுத்து. நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்.- ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தினான்.
உன் மனசுல என்ன இருக்கு-ன்னு சொல்லு... நீ யாரையாவது விரும்புறியா? -வெளிப்படையாகவே கேட்டார்.
....... கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு, பரத் வாய் திறந்தான்.
ஆமாப்பா.. என் கூட காலேஜ்ல படிச்ச பொண்ணு... சந்தியா-ன்னு பேரு. அவளுக்கும் இன்னும் கல்யாணம் ஆகல. இங்கிலாந்த்ல இருக்கா.
சரி. அந்த பொண்ணு வீட்ல போயி நாங்க பேசுறோம். நீ அதுக்கு ஏற்பாடு பண்ணு.
இல்லப்பா. நான் அவள் கிட்டே முதல்ல பேசிப் பாக்குறேன்...
அப்போ, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணலையா?.. நீ மட்டும்தானா?................
அப்போ, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணலையா?.. நீ மட்டும்தானா?................
சரி., போய் தைர்யமா பேசு.. பேசிட்டு எனக்கு சொல்லு.
சரிப்பா. கொஞ்ச நேரம் கழித்து பஸ் ஏறினான்.
சரிப்பா. கொஞ்ச நேரம் கழித்து பஸ் ஏறினான்.
அவனுடைய நிலைமைக்குத் தகுந்தவாறு., பஸ்ஸில் ஒரு பாடல்....
வழியே, என் உயிர் வழியே, நீ உலவுகிறாய் என் விழி வழியே!..
சகியே, என் இளம் சகியே, உன் நினைவுகளால் என்னைத் துரத்துறியே.!
மதியே, என் முழு மதியே.. பெண் பகலிரவால் நீ படுத்துறியே!..
நதியே, என் இளம் நதியே., உன் அலைகளினால் என்னை உரசுறியே..
[இவன் கதைல, கதைய விட பாட்டு தான் அதிகமா வருது.... ]
Chapter 4
காணாக் கண்ணில் காணும் நிழலா?...என்னும் எஞ்ஞ்ஜாரே நீ!....
அறியாக் கனவில் மறையாதே!... எந்நாளும் நீ மாத்ரமா?...
ஐஸ்வர்யாவின் வரவை எண்ணி ஒரு ஜீவன் சுவாசித்துக் கொண்டிருந்தது...
இரண்டு நாட்களாக தூக்கம் இல்லாமல் தவித்ததினால் கண்களில் ஏக்கம் செறிந்து, உருகி சொட்டிக் கொண்டிருந்தது.
இரண்டு நாட்களாக தூக்கம் இல்லாமல் தவித்ததினால் கண்களில் ஏக்கம் செறிந்து, உருகி சொட்டிக் கொண்டிருந்தது.
பாலக்காட்டின் வனப்பு மிகுந்த பகுதிகளின் மத்தியில் ஒரு அழகான தோட்ட வீடு. அந்த வீட்டைத் தனிமையில் பார்த்தால் சுவர்க்க வாசலைப் போல் இருக்கும்.
சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்த்தால், ஒரு கோடி ரூபாய் வாடகை கேட்டாலும் கொடுத்து விட்டு தங்குவதற்குத் தயங்க மாட்டார்கள். நாம் உள்ளே நுழையலாம் என்றால், அதற்கும் ஒரு தடை.
Entry to Public is Prohibited. No Trespassing
These premises owned by PRITHVI Estates ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக இருப்பது, இன்றுவரை யாராலும் அறிய முடியாத, மறுக்க முடியாத உண்மையாகவே இருந்து வருகிறது.

ஆனால், பிரித்வி விஷயத்தில், இந்தக் கருத்து சற்று வித்தியாசமாக இருந்தது. எந்த நாள், எப்படி போனாலும், இவனுடைய நாள், ஐஸ்வர்யாவை நினைக்காமல் நகர்ந்ததில்லை.
இவன் பிறந்த மாவட்டத்திலேயே முதல் மார்க் வாங்கி இருந்திருந்தாலும், மத்த பசங்களைப் போல இவன் என்ஜினியரிங், மெடிசின் எதுவும் எடுக்கல BA Sociology படித்தான்.
இவனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் மூன்று வயது வித்தியாசம். சின்ன வயசில இருந்தே ஒரே ஸ்கூல்-ல படிச்சவங்க.
இவனோட இந்த பீஷ்மர் குணங்களைப் பார்த்து, அந்த ஊரே இவனைப் பத்திதான் பேசியது.
அதுவும் இல்லாமல், பன்னிரண்டாவது படிக்கும் போதே, ஊரே புகழும், ப்ரித்வியின் மீது ஒன்பதாவது படிக்கும் ஐஸ்வர்யாவின் மனம் சாய்ந்ததில் வியப்பில்லை.
இருவரும் ஒரே பள்ளியில் இருப்பதால், அடிக்கடி இவர்களுடைய கண்கள் சந்திக்க நேரிடும். ஆதலால், இவர்கள் கண்கள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும்!
ஐஸ்வர்யா வயதுக்கு வந்த பின் ஏற்பட்ட மாற்றங்களால், இந்த சண்டை வெட்கமாக மாறியது. பிரித்வி-யின் மீசை முளைக்க ஆரம்பித்தவுடன் அது, காதலாக மாறியது!
இருவருக்கும் அவர்களுடைய மனதில் இருப்பது என்னவென்று புரியாத பருவம்.
அவன் ஐஸ்வர்யாவைப் பிரியும் நேரம் வந்தது.
மாவட்டத்திலே முதல் மதிப்பெண் வாங்கியதால், பள்ளியில் பாராட்டு விழா எடுத்து, இவனை சிறப்பித்து, அனுப்பினார்கள்.
பிரிவு ஏற்படும் போது, ஒரு அசாத்தியமான தைர்யம் பிறக்கும். அந்த தைர்யத்தை வைத்து, பிரித்வி, அவனுடைய மனதை ஐஸிடம் திறந்து காண்பித்தான். அதைப் பாத்துட்டு, ஐஸு-ம் அவளோட மனசுல என்ன இருந்தது-ன்னு சொல்லி விட்டாள்.
ரெண்டு பேருக்கும் அன்னைக்கு ஒரே சந்தோசம்தான்.
தரைலையே நடக்குல. சாப்பாடு உள்ளே இறங்குல.
தூக்கம்?
கேட்கவா வேணும்., அதை ஒரு வாரத்துக்கு மறந்தே போனார்கள்.
ப்ரித்வியோட அப்பாவுக்கு, அந்த ஊரிலே ரொம்ப நல்ல பேரு இருந்தது. அவரு நிறையா நல்ல காரியங்கள் எல்லாம் ஊரில் செய்வாரு.
அவரோட புண்ணியங்கள் எல்லாமே ப்ரித்விக்குக் கிடைத்தது.
அவன் தொட்ட காரியங்கள் எல்லாம் ஜெயம்.
அவனைப் பார்த்தாலே, அவன் கூட பழக ஆசை வரும். அவன் கூட இது வரைக்கும் எந்த ஒரு நண்பனும் சண்டை போட்டது கிடையாது.
அவன் ஒரு காரியத்தை கையில எடுத்தா, அதை முடிக்காம விட மாட்டான்.
அவனுடைய மாமா, அவனை கலெக்டர் ஆக்கணும்-ன்னு ரொம்ப ஆசைப் பட்டாரு. ப்ரித்வியோட அம்மாவுக்கு சொந்தம்-ன்னு சொல்ல அவரு ஒருத்தர் தான் இருந்தாரு. அதனாலே மாமாவோட ஆசைய நிறைவேத்தனும்-ன்னு ஒரு வெறியோட district first வாங்கினான்.

அதுக்கு அப்புறம் BA Sociology, சமுதாயத்துக்கு உண்மையாலுமே என்ன தேவை-ன்னு அவனுக்கு நல்லா புரிய வந்தது.
அதனாலேயே, கலெக்டர் ஆவதில் தப்பில்லை-ன்னு ஒரு முடிவுக்கு வந்தான்.
இப்போ ரெண்டு வருஷமா, ஐஏஎஸ் –க்குதான் தயார் பண்ணிக்கிட்டு இருக்கான். இவனோட இந்த வேகத்துக்கெல்லாம் இருந்த ஒரே ஒரு சிறிய ஸ்பீட்-பிரேக்கர் ஐஸ்வர்யாதான். போன வருஷத்துல ஒரு மார்க்-ல தவற விட்டான்.
பிரித்வி காலேஜ் முடிக்கும்போது, ஐஸ், இன்ஜினியரிங் சேர்ந்து இருந்தாள். எந்த காலேஜ்-ன்னு தானே கேட்க வர்றீங்க?...
பாலகாட்டுக்குப் பக்கத்துல கோயம்புத்தூர் தான இருக்கு., வேற எங்கே? நம்ம பூ.சா.கோ தான்.
[மவனே, நீ என்னைக்காவது ஒரு நாள், என் கிட்டே மாட்டுவே!.. அன்னைக்கு இருக்குடீ உனக்கு....]
ஐஸ் பர்ஸ்ட் இயர் படிக்கும் போதுதான், பிரித்வி அவனோட வாழ்க்கைல முதல் தடவை சருக்கினான். ஐஏஎஸ் பரீட்சையில், ஒரு சிறிய அளவில் கோட்டை விட்டான்.
என்னாலதான் நீ சரியா படிக்கல-ன்னு, ஐஸ்வர்யா, அவளோட காதலுக்கு கொஞ்ச நாள் தடை போட்டாள். ஐஏஎஸ்-க்கு செலக்ட் ஆகாம, என் மூஞ்சிலே முழிக்காதே-ன்னு சொல்லிட்டு, கோவையிலேயே இருந்து விட்டாள்.
ஐஸ், ப்ரித்வியைப் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் இருக்கும்.
அதற்குப் பின், இப்போதுதான், செமஸ்டர் விடுமுறையில் வீட்டிற்குச் செல்கிறாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பே ப்ரித்விக்குத் தகவல் கொடுத்திருந்தாள். அவனுடைய நினைவிலேயே, ஊருக்குச் சென்று கொண்டிருந்தாள்.
அப்போதுதான் ராகுல் காரை நிறுத்தினான். பிறகு, காரை சரி செய்து கொண்டு ஐஸும், அவளுடைய குடும்பமும் பாலக்காடை அடைந்தது.
வீட்டிற்குச் சென்றவுடன், அரை மணி நேரம் கூட அவளால் இருக்க முடியவில்லை. துணி மாத்திக் கொண்டு, தோழி வீட்டிற்குச் செல்வதாகக் கூறி,
பிரித்வி எஸ்டேட்-ஸின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்து மீறி நுழைந்தாள்.
கோவையில் இருந்து மதியம் கிளம்பினால், இரண்டு மணி நேரத்தில் பாலக்காடை அடைந்து விடலாம். ஆனால், சாயிந்திரம், ஆகியும், ஐஸைக் காணாததால், பிரித்வி அவனுடைய வீட்டிற்குள் சென்று, பியானோ வாசித்துக் கொண்டிருந்தான்.
அந்த தோட்ட வீடு, ப்ரித்வியின் படிப்பிற்காக, கட்டப்பட்டது. வீட்டு வேலைக்கு ஒரு நம்பகமான ஆள் மற்றும் ப்ரித்வியைத் தவிர அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை.
பியானோ சத்தம், அந்த வீடு முழுவதும் நிரம்பியிருந்தது. திடீரென்று அதில் ஒரு கொலுசுச் சத்தம் கலந்தது. கலந்தவுடன் பியானோ நின்றது.
காதலர்கள், கொஞ்ச நாட்கள் பிரிந்து இருந்து, சந்தித்தால், அவர்களின் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவார்கள் என்று ஏகப்பட்ட கவிஞர்கள் வர்ணித்து இருக்கிறார்கள். அவர்களின் கற்பனைக்கு / சொந்த அனுபவத்திற்கு முன் என்னுடைய சிறு கவிதையை போட்டிக்கு அழைக்கிறேன்.
அற்றைத் திங்கள் வானிடம்,
அல்லிச் செண்டோ நீரிடம்,
சுற்றும் தென்றல் பூவிடம்,
சொக்கும் ராகம் யாழிடம்...,
காணுகின்ற காதல் என்னிடம்... நான்,
தேடுகின்ற யாவும் உன்னிடம்...
குறிப்பு: சிவப்பதிகாரம் படம் பார்க்காதவர்கள் மட்டுமே இந்தக் கவிதையை அனுபவிக்க முடியும். ;-)
ஐஸின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ப்ரித்வியின் அருகில் ஓடிச் சென்றாள்..... அவனைக் கட்டி அணைக்க வேண்டுமென்று ஆசைப் பட்டாள்., இருந்தாலும் அவளை ஏதோ ஒன்று தடுத்தது...
ஒரு நிமிடத்திற்கும் மேல் "பின் ட்ராப் சைலன்ஸ்..."
பின்னர், ப்ரித்விதான் மௌனத்தைக் கலைத்தான்.
என்னே காணாதே, இத்தரையும் நாள், எங்கனே கழிஞ்சு அம்மு???..
ஞான், நின்னே, ஓரோர் நிமிஷமும், சுவாசித்ரிக்குயாயிரின்னு...
வாசகர்களின் வசதிக்காக, ஞான் அவர்கள் எங்கனம் சம்சரித்ததை இவ்விடம் ட்ரான்ஸ்லேட் செய்யும்... மனசிலாயோ?
[ங்கொக்கா மக்க.. உனக்கு மொதல்ல மலையாளம் தெரியுமாடா?]
அந்தத் தோட்ட வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு புல்வெளியில் இருவரும் உட்காந்தார்கள்.
ஐஸுக்கு, பிரித்வி ஒரு சர்ப்ரைஸ் வைத்திருந்தான்...
மாட்டா ராணி மௌனமிதி.....மௌனவில கானமிதி....
தெலுகு வெர்ஷன் ஒப் ஒன் பியுட்டிபுல் தமிழ் சாங்.... விவேக்கின் லேப்டாப்பில் இருந்து வெளி வந்து கொண்டிருந்தது.... அதைக் காதில் வாங்கிக் கொண்டே, ஓர்குட்டில் யார் யாருக்கோ டெஸ்ட்டிமொனியல் எழுதிக் கொண்டிருந்தான்....
பரத்திடம் இருந்து சாட் விண்டோ அழைப்பு வந்தது.....
ஹாய் டா மச்சான்!...
டேய்,... மாப்ள.... நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?....
ஹ்ம்ம்.. ஆமாடா.. வேற வழி இல்ல...
ஹ்ம்ம்., ஏன்டா., இவ்ளோ சோகமா இருக்கே?..
ஒன்னும் இல்லடா...
ஓகே, அப்புறம் லைப் எப்படி இருக்கு?
ஒன்னும் பெரிசா இல்ல., ஏதோ போயிட்டு இருக்கு... அப்புறம், எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் வேணும்.
செருப்பால அடிப்பேன்... என்ன வேணும்-ன்னு சொல்லு., ஹெல்ப் ஹில்ப்-ன்னு சொல்லி, என்னைக் கேவலப் படுத்தாதே...
சரிடா மச்சான்.., நம்பர் கொடு., கால் பண்றேன்.
9036121622
பின்னர், மேற்கண்ட உரையாடல் மொபைலில் நடந்தது.
பரத்தும் அவனுடைய அப்பாவும் பேசியதை விவேக்கிடம் சொன்னான்.
[சொல்றதுக்கு வேற ஆளே கிடைக்கலையா?.. கடவுளே.. என்ன கொடுமை இது? போயும் போயும் இவன்கிட்டேயா சொல்லணும்?..]
நான் சந்தியா கிட்டே ஒரு தடவை ப்ரோபோஸ் பண்ணினேன்... அவளுக்கு என்னைப் பிடிக்கல-ன்னு சொல்லிட்டாள்...
எப்போ?
நம்ம காலேஜ் டேஸ்-ல... த்ர்டு இயர்..
மச்சான்., நான் சொல்றனேன்-ன்னு தப்பா எடுத்துக்காதே!... உனக்கு லவ் பண்றதுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?... அவள் இந்நேரம், எங்கியாவது செட்டில் ஆயிருப்பாடா.... இப்போ என்கிட்டே அவ்வளவா கான்டக்ட்ல இல்ல... அவ இப்போ எங்கே இருக்கா-ன்னு உனக்கு தெரியுமா?
ஹ்ம்ம்., யு.கே-ல..
ஓஹ.. அதுதான்., கரெக்ட் பண்ணலாம்-ன்னு ட்ரை பன்றியா? ங்கொய்யாலே...
டேய் மச்சான், விளையாடதடா... நான் ரொம்ப சீரியஸா இருக்கேன்... நீதான் அவகிட்டே பேசணும்....
ஹ்ம்ம்., அவளைப் பத்தி உனக்கு தெரியாதுடா,. அவ ஒரு சரியான பிராடு... இப்போ என்ன பண்ணிட்டு இருக்காளோ தெரியாது... நான் பேசிப் பார்க்குறேன். எனக்கு என்ன பதில் கிடைக்குதோ, அதை அப்படியே உனக்கு சொல்றேன்...
ஹ்ம்ம் ., ஓகே டா. ரொம்ப தேங்க்ஸ் டா...
ஏன்டா., மறுபடியும் செருப்...
இல்ல இல்ல சாரி, சாரி, தேங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன்...
ஹ்ம்ம்., ஓகே டா. பாய். நான் உனக்கு அப்புறமா பேசுறேன். சி.யு...
[அதாவது மஹா ஜனங்களே. இவன் என்ன சொல்ல வர்ரான்னா, உங்களுக்கு, உங்க லவ்வுல ஏதாவது பிரச்னை இருந்த இவன்கிட்டே வந்து ஹெல்ப் கேளுங்க... இவரு ஷாஜகான் விஜய் மாதிரி காதலை வாழ வைப்பதற்காக உயிர் வாழுறாறு]
Chapter 5
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி...
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாம சங்கதம் சொல்லடி.....
பாடிக்கொண்டே அவள் குளித்துக் கொண்டிருந்தாள், திருச்சி என்ற தமிழ்நாட்டின் மிகச் செழிப்பான பகுதியில் ஒரு அழகிய வீடு. அப்பா ஒரு வங்கியில் வேலை செய்கிறார். அம்மா வீட்டை கவனிக்கிறார். இந்த மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து தனிக்காட்டு ராணியாக உஷா வளர்கிறாள்...
இப்பொழுது பன்னிரண்டாவது தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு என்ன செய்வதென்ற ஆலோசனையில் இருக்கிறாள்.
அப்பா இவளை டாக்டர் ஆக்க வேண்டுமென்கிறார். அம்மாவுக்கோ டாக்டரானால், பொண்ணு ரொம்பவும் கஷ்டப் படுவா. மாப்பிள்ளை பாக்குறதும் கொஞ்சம் சிரமம். பேசாம டீச்சர் வேலைக்குப் போனா பரவாயில்ல-ன்னு அபிப்ராயப் படுறாங்க.
உஷாக்குட்டி என்ன சொல்றா? எனக்கு கம்ப்யூட்டர் தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா படிச்சு ஒரு நல்ல சாப்ட்வேர் என்ஜினியர் ஆகணும். வெளி நாட்டுக்கு எல்லாம் போகணும்.. அப்படின்னு சொல்றா.
இவள் மனசைத்தான் ஸ்ரீ ரங்கதாதரிடம் முறையிட்டுக் கொள்கிறாள். எனக்கு எக்காரணத்தைக் கொண்டும் டாக்டர் சீட்டைக் கொடுத்துடாதே... அப்புறம் அப்பாவை என்னால சமாளிக்க முடியாது. என்னைக் கண்டிப்பா மெடிசின் படிக்க சொல்லுவாரு.
ப்ளீஸ்.. ப்ளீஸ்... எனக்கு ஒரு நல்ல காலேஜ்-ல கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சீட கொடுத்துடுங்க சாமி.-ன்னு மனசுல வேண்டிக்கிட்டே, கடந்த ஒரு வாரமாக ஓயாம, மேற்கண்ட பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறாள்.
என்னை மாதிரி நிட்சரகுட்சிகளுக்கே வரம் கொடுக்கற ஸ்ரீரங்கநாதர், இந்த பிஞ்சு மனசுள்ள உஷாக்குட்டிக்கா வரம் கொடுக்க மாட்டார்?...
அப்பா கவலையுடன் வீட்டிற்குள் வந்தார். “என்ன ஆச்சுப்பா?” என்று வழக்கமான குதூகலத்துடன் உஷா வந்து அப்பாவின் தோளைக் கட்டிக்கொண்டாள்.
பக்கத்தில் இருந்த மேசையின் மீது கையில் கொண்டு வந்த ஒரு கவரைப் போட்டார்.
முதல் நாள் எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்கில் உன் பேர் இல்ல-ம்மா. -என்று கவலையுடன் சொன்னார். உஷாவுக்கோ அவ்வளவு குதூகலம்... இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்,
ஓகே பா விடுங்க. போனா போயிட்டுப் போவுது. நான் என்ஜினியரிங் சேர்ந்துக்கறேன்.
இல்லம்மா., ப்ரீ சீட கிடைக்கலன்னா என்ன? இந்த வீட்டை வித்தாவது உன்னை நான் படிக்க வைக்குறேன்.-அப்பா உணர்ச்சி வசப்பட்டார்.
இருக்கற ஒரு வீட்டையும் வித்துட்டு நாளைக்கு அவளுக்கு கல்யாணம் காட்சி-ன்னு ஏதும் பண்ண வேணாமா? என்று அம்மா கேள்வி கேட்டார்.
இந்த மாதிரியான விவாதங்களுக்குப் பின், உஷா சென்னைக்கு அருகே உள்ள ஒரு என்ஜினியரிங் காலேஜ்-ல் சேர்ந்தாள்.
ஆரம்பத்தில் ஆஹா ஓஹோ.. என்று நினைத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் மோகம், இரண்டாம் ஆண்டிலேயே வெறுத்து விட்டது.
இயற்கையுடன் ஒன்றிப் படிக்கும் மெட்டலர்ஜி, சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகள் ஓரளவுக்குப் பரவாயில்லை என்று தோன்றியது. இருந்தாலும், உலகமே தன்னை கணினியுடன் இணைக்க ஆசைப் படுவதால், அனைவரும் விரும்பும் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்தது தவறில்லை என்ற நினைப்புடன் படிப்பைத் தொடர்ந்தாள்.
இவ்வளவு பூர்வ பீடிகைகளுடன் நமது கதாநாயகியை லேட்டாக அறிமுகப் படுத்தியதற்கு சிறிது வருந்துகிறோம்.
உஷாவிடம் எல்லோருக்கும் பிடித்த ஒரு அம்சம் இருந்தது. அவளுடைய கண்கள். யாரைப் பார்த்தாலும் கட்டி இழுக்கும் ஒரு வசீகரம். பட் அவளை, தோழிகள் முட்டைக்கண்ணி என்றுதான் செல்லமாக அழைப்பார்கள்.
பெண்களுக்கு பெண்களை அழகாகப் பார்க்கத் தெரியாது. அதனால்தான் ஆண்கள் மெனக்கெட்டு கவிதை காவியங்கள் எழுத வேண்டி இருக்கிறது. இந்த சம்பிரதாயப் படி, நானும் உஷாவை வர்ணிக்க கடமைப் பட்டிருக்கிறேன்.
எந்தப் பெண்ணும் இருபதில் ரெட்டை அழகு -என்று ஒரு கவிஞர் பாடி இருக்கிறார். அதற்கேற்றாற்போல் உஷா மிகுந்த வனப்புடன் இருந்தாள். நாம கால்-ல இருந்து கவனிப்போம்.
செருப்பு., ஆஹா., என்ன அழகான செருப்பு. மஞ்சள் தேச்சி குளித்தது காலில் தெரியுது.
ஒரே ஒரு சலங்கை வச்சு அதிகமா சத்தம் வராத கொலுசு. அதற்குமேல் ஒன்றும் தெரியவில்லை.
அரைக்கை சுடிதார் என்பதால் கைகள் மட்டும் தான் தெரிகிறது. அதைப் பற்றி வர்ணிக்க எதுவும் இல்லை. இருந்தாலும் அந்த டைட்டன் வாட்ச், இன்னொரு கையில் இருந்த தங்க வளையலும் ஜொலிக்கிறது.
மேலே மூஞ்சிக்குச் சென்றால்.
கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ணு பாக்கணும்-ன்னு தவிக்கற பசங்களுக்கு எல்லாம், இவள் ஓர் கானல் நீர். எது எது, எங்கே எங்கே இருக்கணுமோ அது அது அங்கங்கே இருந்தது.
[தமன்னா வாயப் போல, இவளுக்கு ஒன்னும் ரொம்ப பெரிசான வாய் இல்ல, அசின் போல பெரிய அழகான பல்லு இல்ல... etc]
அளவான அடர்த்தியுடன் இடுப்பு வரை கூந்தல்,
இரண்டு சிறிய அளவான புருவங்கள்,
பட் கண்கள் மட்டும் டாப் கிளாஸ். அவ்வளவு சூப்பரா இருக்கும்.
இவள் ஒரு கூர் மூக்கி. இருந்தாலும் அந்த ஒற்றைக் கல் மூக்குத்தி இவள் மூக்கில் இருப்பதாலேயே அவ்வளவு அழகாக இருக்கிறது.
மூக்குக்கு கீழே சின்னதா ஒரு ஒபெனிங், அதை உதடு என்று எல்லாரும் சொல்றாங்க. பட் எனக்கு அதைப் பார்த்தா சாகோபார் ஞாபகம்தான் வருது.
ஹலோ என்று அவள் ஒரு வார்த்தைதான் பேசினாள். but,
ஸ்ரேயா கோஷல் பாடலில் இருந்து ஒரு வார்த்தை மட்டும் வெளியே வந்தது போல இருந்தது, அவ்வளவு இனிமை.
ஒரு சிறிய பொட்டு, அதற்குக் கீழே சிறிய விபூதிக் கோடு இவை இல்லாமல் உஷாவை பார்ப்பது அரிது.
எப்போதும் தோழிகளுடன் கலகலவென்று பேசிக் கொண்டிருப்பாள். பசங்ககிட்டே அவ்வளவா பிரிண்ட்ஷிப் வச்சுக்க மாட்டாள். வெறும் ஹாய் ஹலோ சொல்றதோட சரி.
இப்படி ஒரு பொண்ணு கிடைச்சா நானே ப்ரோபோஸ் பண்ணுவேன். அவளுக்கும் ஒரு சில வேண்டுகோள்கள் கிடைத்தன. இல்லை என்பதைத் தவிர வேறு எந்த பதிலை எதிர்பார்க்க முடியும்?
ப்ரட்போர்ட் சிட்டி, யு.கே.
சிநேகிதனே..சிநேகிதனே... இன்ஸ்ட்ருமெண்டல் மிக மெல்லிய ஒலியில் கசிந்து கொண்டிருந்தது. அதை உள் வாங்கிக் கொண்டே கட்டிலில் ஒரு ஜீவன் காலாட்டிக் கொண்டிருந்தது.
சற்று முன் நடந்த கான்வர்ஸ்செசன் மனதில் ரீப்ப்ளே ஓடிக் கொண்டிருந்தது.
இன்னும் எத்தனை நாள்டி இப்படியே இருப்பே? எங்களுக்கும், உனக்கு ஒரு விஷேசம் செய்யணும்—நு ஆசை இருக்காதா? உன்ச்சோட்டு பொண்ணுங்க எல்லாம் கைல ஒன்னு, இடுப்புல ஒன்னு-ன்னு சுத்திண்டு இருக்கா. நீ மட்டும் இன்னும் கல்யாணமே வேணாம்-ன்னு உட்காந்துட்டு இருக்கே. உன் தோப்பனாருக்கோ அடிக்கடி உடம்புக்கு முடியாம போயிடுது... நாங்க நல்லா இருக்கும் போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிடலாம்-ன்னு இருக்கோம்.
அம்மா., நான் உனக்கு எத்தன தடவை சொல்றது? எனக்கு இதுல எல்லாம் விருப்பம் இல்லன்னு?
ஏண்டி விருப்பம் இல்ல? உன் மனசுல யாராவது வச்சிருக்கியா?
ஐயோ அம்மா., அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.
அதற்குள் அப்பா போனை வாங்கி பேசினார்.
கண்ணா, இப்போவே உனக்கு இருபத்தியேழு வயசு ஆகுது. உனக்கு பிடிச்ச மாதிரியே உன்னை புரிஞ்சுக்கற பையனாவே பார்த்து வச்சிருக்கோம். அந்த பையன கூட நீ சின்ன வயசுல பார்த்து இருக்கே. நம்ம ஷாமா மாமாவோட பையன்தான். அவனும் இப்போ அமெரிக்காவுல இருக்கான். அவனும் உன்னை மாதிரி படிச்ச வெளிநாட்ல வேலைல இருக்கற பொண்ணுதான் வேணும்-ன்னு சொல்லி இருக்கானாம். ஷாமா மாமா என்கிட்டே வந்து பேசினார்., நான் உன்னைக் கேட்காம எதுவும் சொல்ல முடியாது-ன்னு சொல்லி இருக்கேன். ஒன்னும் அவசரம் இல்லல. அந்த பையன் கிட்டே உன்னோட போன் நம்பர் கொடுத்து பேசச் சொல்லுறேன். நீங்க ரெண்டு பெரும் பேசி பிடிச்சிருந்தா மட்டுமே நாங்க மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்க்குறோம்.
சந்தியாவின் ஜம்பம் எல்லாம் அம்மாவிடம் தான். அவள் அப்பாவை எதிர்த்துப் பேச மாட்டாள்.
ஏதோ சொல்ல வந்தாள், ஆனால் இரண்டு மூன்று வினாடி மௌனம் சாதித்தாள்., அதனால் அப்பா இந்த மௌனத்தை சம்மதம் என்று நினைத்து,
சரிம்மா, நாங்க அப்புறம் பேசுறோம்-ன்னு சொல்லி போனை அனைத்து விட்டார்.
மறுபடியும் செல்போன் சினுங்கியது.,
யாரென்று பார்த்தாள், +91+809987231 இந்தியாவில் இருந்து, யாராக இருக்கும் என்று எடுத்து பேசினாள்...
ஹலோ,
என்ன மாமி., ஷேமமா இருக்கேளா?..
எங்கேயோ கேட்ட குரல்., ஹ்ம்ம்., இருக்கேன் யாரது?
ஹையோ., என்னைத் தெரியலையா மாமி?.. நான்தான் உங்களோட காலேஜ் அத்திம்பேல்...
ஒஹ்.. நீயாடா அம்பி., நன்னா இருக்கியா.. என்ன திடீர்-ன்னு அர்த்த ராத்திரில போன் பண்ற அளவுக்கு தைர்யம் வந்திருக்கு?...
ஹே.,பிராடு மாமி!... உனக்கு போன் பண்றதுக்கு எல்லாம் தைர்யம் ஒன்னும் வேண்டியது இல்ல... சும்மா பேசணும்ன்னு தோனுச்சு.. அதுதான்...
ஹ்ம்ம் ஓகே டா.. அம்பி., சொல்லு., அப்புறம் எப்படி இருக்கே? என்ன பண்ணிண்டு இருக்கே? எங்கே இருக்கே?..
நானா மாமி., சும்மாதான் இருக்கேன்...... நீ வாய்ஸ் மெசேஜ் எனேபில் பண்ணி இருப்பே-ன்னு எதிர் பார்த்தேன், மேட்டர சிம்பிளா சொல்லி இருந்திருப்பேன்...
பரவாயில்லடா, சொல்லு உனக்கு என்ன பிரச்சன?
எனக்கு எல்லாம் ஒன்னும் இல்ல மாமி... நான் உன்கிட்டே ஒரு சின்ன ஒபினியன் கேட்கணும்... அவ்வளவுதான்.
விஷயத்துக்கு வாடா அம்பி, சும்மா இழுக்காதே?..
ஹ்ம்ம்., டைரக்டாவே கேட்டுடுறேன். பட் ஒரு சின்ன கண்டிஷன். நான் பேசும்போது நீ எதுவும் சொல்லக் கூடாது. நான் பேசி முடிச்ச வாட்டி, யோசிச்சு பதில் சொன்னா போதும்.
ஹ்ம்ம்., சரி சொல்லு.
ஒன்னும் இல்ல. நம்ம பரத் இல்ல?. அவன் உன்னை ரொம்ப லவ் பண்றான். உனக்கே இது தெரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்குறேன். இப்போ அவனுக்கும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சு இருக்காங்க. அவனால உன்னைத்தவிர வேற ஒரு பொண்ணு கூட வாழ முடியாது-ன்னு நினைக்குறான்.
அவங்க வீட்டுலயும் சொல்லிட்டான். அவங்களும் உங்க அப்பா அம்மா கிட்டே பேசுறதுக்கு ரெடியா இருக்காங்க. அவனும் ஒரே பையன், நீயும் ஒரே பொண்ணு. சோ உங்க ரெண்டு வீட்டுலயும் பெருசா எந்த பிரச்சனைகளும் இருக்காதுன்னு நான் பீல் பண்ணறேன்.
உடனே, முடியாது-ன்னு சொல்லிடாதே!... நாம விரும்பரவன்களோட வாழுரத விட, நம்மள விரும்பரவன்களோட வாழுறது ரொம்ப நல்லது. இது பசங்களுக்கு மட்டும் இல்ல பொண்ணுங்களுக்கும் பொருந்தும்.
ஐ ஹோப் யு கேன் அண்டர்ஸ்டேன்ட்.,
நான் உன்னை கம்பெல் பண்றதா நினைக்காதே.
பரத் உனக்கு சரியான பேர்-ன்னு என்னோட மனசுல பட்டுச்சு. அவன் உன் மேல உயிரையே வச்சு இருக்கான். நீ என்ன சொன்னாலும் கேட்பான்... சோ உனக்கும் லைப் ஸமூத்தா இருக்கும். வீட்டுல பார்க்குற யாரோ முகம் தெரியாத ஒருத்தருக்கு ஓகே சொல்றதுக்கு உன்னை நல்லா புரிஞ்சுகிட்டே ஆப்சனை சூஸ் பண்றது ஒரு வைஸ் டெசிஸன்.
இதை ஒரு பிரின்ட்-ன்ற முறைல சொல்றேன். அதுக்கு அப்புறம் உன்னோட இஷ்டம். நான் உன்னோட காலுக்காக வெயிட் பண்ணுவேன்., நல்லா யோசிச்சு உன்னோட முடிவை சொல்லு...குட்நைட்...
சந்தியாவின் மனம் யோசிக்க ஆரம்பித்தது... பரத்தின் அழகிய சிரித்த முகம் அவள் மனதின் ஒரு சிறு மூலையில் தெரிய ஆரம்பித்தது.
Chapter 6
ராகுல் ராகுல் ராகுல் -என்று
உன் நினைவு என்னை நீங்காமல் இருக்க
ஒரு நொடி உன்னை நினைக்க மறந்து விட்டேன்.
என்ன அதிசயம், நுரையீரலில் இருந்து
காதல் காதல் ராகுல் -என்று, சத்தம் கேட்கிறதே?
உன் நினைவு என்னை நீங்காமல் இருக்க
ஒரு நொடி உன்னை நினைக்க மறந்து விட்டேன்.
என்ன அதிசயம், நுரையீரலில் இருந்து
காதல் காதல் ராகுல் -என்று, சத்தம் கேட்கிறதே?
சந்தியா, அந்த நாளுக்கான புதுக் கவிதையை எழுதி முடித்தாள். ராகுலைப் பிரிந்த நாட்களில் (பார்க்க முடியாமல் போன நாட்களில்) இந்த பாழப்போன காதல், இவளைப் படாத பாடு படுத்தியது. இந்த செமஸ்டர் லீவ் எப்போடா முடியும் என்று தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
பகல் முழுவதும், இதை செய், அதை செய், இதைக் கத்துக்கோ, அதைக் கத்துக்கோ என்று, அம்மா தொந்தரவு,
இரவு முழுவதும், ராகுலைப் பற்றிய சிந்தனையிலேயே ஓடி விடும்.
ஒரு வழியாக, மீண்டும் காலேஜ் செல்லும் நாள் வந்தது. ஆறாவது செமஸ்டர் முடிவதற்குள் தனது காதலை ராகுலிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டுமென்ற முடிவுடனே கிளம்பினாள்.
ரகுலுக்கோ, இரண்டு நாட்கள் சுய நினைவை இழந்தது போல இருந்தான். ஐஸ்வர்யாவின் முகத்தைத் தவிர வேறு எதுவும் அவனது மனதில் இல்லை. எதைப் பார்த்தாலும் மனதிற்கு குளிர்ச்சியாகவே இருந்தது. மனதில் மகிழ்ச்சி இருந்தால், புலன்களும் மகிழ்ச்சியாகவே உணர்வது மனித இயல்பு. ஆனால் காதலர்களுக்கோ அவர்கள் மனதில் மகிழ்ச்சி இருந்தால், இந்த உலகமே மகிழ்ச்சியாக இருப்பது போல உணர்வார்கள். அதிலும் இந்த ஒருதலைக் காதலர்கள், ஒரு படி மேலே போய், அவர்களின் மனம் சென்ற பொருட்களிடம் எல்லாம் தங்களது காதலை வெளிப் படுத்துவார்கள்.
அதைப்போல ராகுல், அவங்க பக்கத்து வீட்டு ஜிம்மி (பப்பி டாக்) கிட்டே பேசிக்கிட்டு இருந்தான். அதுக்கு குளிப்பாட்டி, அலங்காரம் எல்லாம் பண்ணி அழகு பார்த்துக்கிட்டு இருந்தான். ஐஸ்வர்யா ஒரு நாய் குட்டியோட இருக்கற மாதிரி ஒரு ஆல்பத்தை அவளோட பிரண்ட்ஸ் -ங்க பார்த்துட்டு இருந்தாங்க. அதை இவன், அவளோட கிளாஸ்ல போயி அவனோட பிரண்ட்ஸ்-ங்க கிட்டே பேசுற மாதிரி பார்த்து இருந்தான். அதனாலதான் இந்த நாய் புராணம் எல்லாம் நம்ம கதைல வருது...
டேய் என்ன டா பண்ணிட்டு இருக்கே?
விவேக்கின் குரல் கேட்டு திரும்பினான்.
வாடா, ஒன்னும் இல்ல, சும்மா நாய் கூட விளையாடிட்டு இருந்தேன்...
பாத்தா அப்படி தெரியலையே... சரி, என்னா பண்ணுன இந்த ரெண்டு நாளா, நம்ம பசங்கள பாக்காம போர் அடிக்குதுடா.
எனக்கு எல்லாம் ஒன்னும் போர் அடிக்கல...
ஒஹ் அப்படியா? அவ்வளவு நல்லவனா நீ?
அப்படி எல்லாம் ஒன்னு இல்ல., எனக்கு பொழுது போறதே தெரில., அதும் இல்லாத, உன்கிட்டே ஒன்னு சொல்லணும்..
ஐஸ்வர்யாவத் தவிர வேற எதைப் பத்தி வேணும்னாலும் சொல்லு. நான் கேட்குறேன். என் கிட்டே அவளைத் தவிர நீ வேற எதைப் பத்தி எதிர்பாக்குற?
த்து..எல்லாம் என் தலை எழுத்து., சொல்லித்தொல...
கடைசி நாள் பரீட்சை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, அவன் ஐஸ்வர்யாவின் காரைக் காப்பாத்தியதையும் அதனால், லேசாக அடி பட்டதையும் சொன்னான்.
டேய், சொல்றனே-ன்னு தப்பா நினைக்காதே., அவள் NSS ல இருக்கா., அந்த இடத்துல யாருக்கு அடி பட்டு இருந்திருந்தாலும், அவ வந்து கட்டு போட்டு இருப்பா. அப்படியே உனக்கு மட்டும் அப்படி செஞ்சு இருந்திருந்தாலும், அது ஒரு சிம்பதி தான், லவ் எல்லாம் அதுல இருந்து வராது.
எங்கிருந்துதான் வந்துச்சோ தெரியல. திடீர்ன்னு ராகுலோட நிறைய மாறுதல், .
உனக்கு ஏண்டா எரியுது? நான் சந்தோசமா இருக்கறது உனக்கு பிடிக்கலையா? அவளோட அப்பா சொல்றதுக்கு முன்னாடியே அவள் பர்ஸ்ட் எயிட் கிட்டோட நின்னா தெரியுமா? அவ்வளோ அக்கறையா என்னை கவனிச்சா....
-இதெல்லாம், அவனுடைய மனதில் எழுந்த எண்ணங்கள். பட், அவனால வெளிய சொல்ல முடியல. ஏன்னா விவேக் சொன்னதை அவனால முழுசா மறுக்க முடியல.
-இதெல்லாம், அவனுடைய மனதில் எழுந்த எண்ணங்கள். பட், அவனால வெளிய சொல்ல முடியல. ஏன்னா விவேக் சொன்னதை அவனால முழுசா மறுக்க முடியல.
பாதி காதல், பாதி சோகம், பாதி கவலை, பாதி அழுகை.. இவை எல்லாம் மாறி மாறி வந்தது. வார்த்தைகள் எதுவும் வெளியில் வரவில்லை.
அடக்க முடியாமல் கண்களில் இருந்து ஒரு துளி வெளியே எட்டிப் பார்த்தது. முகத்தை எங்கேயோ திருப்பி அழுகையை மறைத்தான்... ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மச்சான், ரொம்ப பீல் பண்ணாதடா... புரிஞ்சுக்கோ., மல்லு பொண்ணுங்கள பாக்கறதோட நிறுத்திக்கணும்., அவளுங்க யாரும் லேசுப் பட்ட ஆளுங்க இல்ல. விட்டா ஊரையே வித்துட்டுப் போயிடுவாளுங்க.
ராகுல் ஏதோ சொல்ல வந்தான்.,
உனக்கு ஒன்னும் தாங்கலன்னா., தைர்யமா போயி ப்ரொபோஸ் பண்ணிப் பாரு.
.......
இது வரைக்கும், நீ அவளை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி ஏதாவது பண்ணி இருக்கியா?
இல்லை என்பது போல தலையை ஆட்டினான்.
ஹ்ம்ம்., யோசி., உனக்கு நான் சொல்லித்தான் புத்தி வரணும்-ன்னு இல்ல.
சரி நான் படத்துக்கு போலாம்-ன்னுதான் வந்தேன்., நீயும் வர்றியா?
மீண்டும் இல்லை என்பது போல தலையை ஆட்டினான்...
சரி நான் படத்துக்கு போலாம்-ன்னுதான் வந்தேன்., நீயும் வர்றியா?
மீண்டும் இல்லை என்பது போல தலையை ஆட்டினான்...
......................
இன்னும் ஒரு சில உரையாடல்கள்... ராகுல் மனம் மாறுவது போல தெரியவில்ல... பிடி கொடுக்காமலேயே இருந்தான்., இது ஒத்து வராதுடா -என்று விவேக் கிளம்பினான்...
காதல் யாரிடம் இருந்தாலும், அவர்கள் தனிமையையே விரும்புவார்கள். சுகமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் அவர்கள் அதை தனிமையாகவே அனுபவிப்பார்கள். (ஒரு தலைக் காதலில் ஒருவர் மட்டும், இருதலைக் காதலில் இருவரும்.. இங்கே தனிமை என்பது ப்ரைவசி)
நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதும் ஒரு அளவுக்குத்தான் இருக்கும். எந்த காதலனோ, காதலியோ அவர்களுக்குள் பேசுவதை, நாம் எவ்வளவு அருகில் சென்று ஒட்டுக் கேட்டாலும் கேட்காது.
அப்படி என்னதான் பேசுறாங்கலோ தெரியல-ன்னு நாம ஒரு பேரு மூச்சோட கிளம்ப வேண்டியதுதான். ராத்திரி பன்னண்டு மணிக்கு கூட, ரெண்டு பேரும் போனை போட்டுக்கிட்டு சத்தமே கேட்காம அழுதுட்டு இருப்பாங்க. ஆயிரத்தெட்டு காரணம் இருக்கலாம். ஆனாலும் அவங்க பண்றது அவங்களுக்கு மட்டும்தான் புடிக்கும்.
ராகுலோட குதூகலம் அப்படியே மறஞ்சு போனது... ஐஸ்வர்யாவைப் பத்தி மட்டுமே யோசிச்சு, யோசிச்சு சந்தோசப் பட்டவன், அவனோட நிலமைய நினைச்சு வருத்தப் பட ஆரம்பிச்சான். அது அவனோட டைரில கவிதையா வந்து விழுந்துச்சு.
வானத்தின் பின் செல்ல வழி இருந்தால்
அதில் தொடங்கும் அவள் மனம் அறிய குறுக்கு வழி!...
மேகங்கள் நிலவை மறைப்பது கொஞ்ச நேரம்.,
அப்போது விழும் நிழல் போன்றது மங்கை உள்ளம்.
பூப்போல சிரிப்பதால் பூவையர் என்பார்
அதனால் பூத்த இவ்வுலகம் மாயையன்றோ
கார்குழலில் கட்டி வைப்பாள் மல்லிச் செண்டை
அதை நுகர, ஆழியினுள் திறந்தது சிற்பிக் கொண்டை!
தாகம் என்ற ஒரு சொல் தண்ணீருக்காக.
உன் மேல் காதல் என்ற ஒரு சொல் என் கண்ணீருக்காக

அதே நேரத்துல ஐஸ்வர்யாவும் ப்ரித்வியும், எங்கேயோ வேற ஒரு உலகத்துல பறந்துகிட்டு இருந்தாங்க.
உலகம், ஊரு, பேரு, மொழி எல்லாத்தையும் மறந்து வாய்க்கு வந்தது எல்லாம் பேசிட்டு இருந்தாங்க.
அந்த இன்ப வெள்ளத்துல இருந்து மீண்டு வர்றதுக்கே ரெண்டு நாள் ஆச்சு.
பிரிஞ்சு இருந்த, காதலோட வெயிட் தண்ணில ஊற வச்ச கம்பளிப் போர்வை மாதிரி ரொம்ப கனமாயிடும்.
அந்த கனமான போர்வை உலந்தவாட்டி,
ப்ரித்வி ஐஸ்-க்காக வச்சு இருந்த சர்ப்ரைசை திறந்தான்.
Union Public Service Commission -ல் தேர்வாகி இருந்தான்
இன்னும் இரண்டு ரவுண்டு பாக்கி இருந்தது. மெயின் எக்ஸாம் அப்புறம் இண்டர்வியு.
இந்த சந்தோசமான செய்தியை ஐஸிடம் தெரிவித்தான்....
அவளுக்கு வந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. சந்தோசத்தில் துள்ளிக் குதித்தாள்...
இந்த மெயின் எக்ஸாம் நான் கிளியர் பண்ணிட்டால், அப்புறம் டெல்லில இன்டர்வியு அதுக்கு அப்புறம் கல்சுரல் ட்ரைனிங்-க்கு ரெண்டு வருஷம் இந்தியா முழுசும் சுத்தணும்.-ன்னு ஐஏஎஸ்-இன் அடுத்த படிகளை விளக்கினான்.
ஒரு வருட காலம் பிரிந்து இருந்ததே ரொம்ப பெரிய விஷயம். இப்போ மறுபடியும் பிரியனும்-ன்னு நினைக்கும் போதே ஐஸின் கண்களில் கண்ணீர துளிர்த்தது...
உச்சாவும் காதலும் ஒன்னு.
ரொம்ப நேரம் அடக்கி வைக்க முடியாது.
கொஞ்ச நேரம் அடக்கி வெளிய விட்டா,
அதுலயும் ஒரு தனி சுகம்.
ரொம்ப நேரம் அடக்கி வைக்க முடியாது.
கொஞ்ச நேரம் அடக்கி வெளிய விட்டா,
அதுலயும் ஒரு தனி சுகம்.
[கவிதை?...கைல பேனா இருந்தா என்ன வேனும்ன்னாலும் எழுதிடிவியா? கொளுத்துங்கடா இவனை..]
உஷா, கண்மணிக்கு கஷ்டப்பட்டு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். ராகுல் எந்த சேனலை எதுக்காக பார்க்கறோம்-ன்னே தெரியாம டிவிய பார்த்துட்டு இருந்தான்.
ஏங்க, இவள கொஞ்சம் என்னன்னு கேளுங்க... என்ன சொன்னாலும் சாப்புட மாட்டேங்குறா.. துப்பிகிட்டே இருக்கா...
ராகுல் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
-உள்ளே வந்து டிவியை ஆப் செய்தாள்.
கொஞ்சமாவது காதுல வாங்கிக்கறீங்களா? இந்தாங்க, இவளுக்கு சாப்பாடு ஊட்டுங்க. எனக்கு கிச்சன்-ல நிறையா வேலை இருக்கு.
கண்மணி யார் சொன்னாலும் கேட்க மாட்டா.. பட் ராகுல் என்ன சொன்னாலும் கேட்டுக்குவா. ராகுலுக்கும் அப்படித்தான். கண்மணி மேல உயிரையே வச்சு இருந்தான்...
கண்மணியை தூங்க வைத்து விட்டு, படுக்கையில் சாய்ந்தான்.
உஷா, வீட்டு வேலைகள் எல்லாத்தையும் முடிச்சிட்டு களைப்பா வந்து ராகுல் பக்கத்துல உட்காந்தாள்...
என்ன ரெண்டு நாளா டல்லா இருக்கீங்க?
இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல.
மறைக்காதீங்க., நீங்க உங்க பழைய டைரிய புரட்டினாலே இப்படி ஆயிடுறீங்க...
உஷா, உனக்குத் தெரியாதது ஒன்னும் இல்ல. என்னோட டீன்ஏஜ்-ல நான் வருத்தப் பட்டது மட்டும்தான் மிச்சம். அப்போ என்ஜாய் பண்ண வேண்டியது எல்லாத்தையும் இப்போ நான் மிஸ் பண்றேன். வேற ஒன்னும் இல்ல. என்னோட ஏஜ் ல இருக்கறவங்களுக்கு யாருக்கும் குழந்தை இல்ல. இன்னும் நிறையா பேத்துக்கு கல்யாணமே ஆகல.
அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்-ன்னு சொல்றீங்க? நீங்க படிச்சு முடிச்சு வேலைக்கு போனவுடனே உங்க தாத்தாவுக்கு உடம்புக்கு முடியல. அதா இதா-ன்னு ஒரு ரெண்டு வருஷம் கூட இல்லாம என்னோட பைனல் இயர்லையே கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாங்க. முதல் குழந்தைய கலைக்க வேண்டாம்-ன்னு எங்க அம்மா பிடிவாதமா சொல்லிட்டாங்க. இதுக்கு எல்லாம் நாம என்ன பண்ண முடியும்? யார் மேலயும் தப்பு இல்ல. இப்போ நீங்க என்ன மிஸ் பண்றீங்க., அதை சொல்லுங்க..மொதல்ல.
-உஷாவின் உடலில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டதே ஒழிய, மனதிலோ, குரலிலோ இருந்த குழந்தைத்தனம் கொஞ்சம் கூட மாறவே இல்லை.
உஷாவின் கைகளைப் பிடித்து தன் மீது இழுத்தான். சிரிப்பைத் தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை.
சொல்லுங்க.. என்ன மிஸ் பண்றீங்க?...
ஏய் கன்னுக்குட்டி, உன்கிட்டே ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு உண்மையான பதில சொல்லணும்.
மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..
மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..
என்னோட கேள்வியும் அது சம்பத்தப் பட்டது தான்.
ஹ்ம்ம், சரி கேளுங்க..
உன்னோட காலேஜ் டேஸ்-ல நான் ஐஸ்வர்யாவுக்கு பதிலா உன் பின்னாடி சுத்தி இருந்திருந்தா நீ எனக்கு ஓகே சொல்லி இருந்திருப்பியா?
நீங்க ஏன் இப்படி யோசிக்கறீங்க?.. என்னோட பதில் எல்லாத்துக்கும் ஒன்னுதான். நீங்க-ன்னு இல்ல வேற யாரு கேட்டு இருந்தாலும் எங்க அப்பா அம்மா சொல்ற பையனைத்தான் நான் கட்டிக்குவேன்-ன்னு சொல்லி இருப்பேன்.
......
இப்போ இதைத்தான் மிஸ் பண்றீங்களா?
......
இப்போ இதைத்தான் மிஸ் பண்றீங்களா?
இல்ல. எனக்கு மறுபடியும் காலேஜ் போயி படிக்கணும் போல இருக்கு. மத்த பசங்க மாதிரி எல்லா அக்டிவிடீஸ்-ம் செய்யணும்-ன்னு இருக்கு.
உங்களை யாரு இப்போ படிக்க வேண்டாம்-ன்னு சொன்னது. எம்.பி.ஏ கரஸ்-ல பண்ணுங்க. அப்போ மறுபடியும் நீங்க ஸ்டுடென்ட் ஆயிடுவீங்க இல்ல?
ஹ்ம்ம்., பாக்கலாம்.
-நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் உஷா ராகுலுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தாள்.
ராகுல் யாரைப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தானோ அதே நபரை மறுபடியும் எம்.பி.ஏ கிளாஸ்-ல் சந்திக்கப் போகிறான் என்பதை அவள் அறியவில்லை.
சந்தியாவின் பதிலுக்காக பரத் ராப்பகலா தூங்காம காத்துட்டு இருந்தான். அவனுடைய தாட் வேவ்ஸ் சந்தியாவ தொந்தரவு பண்ண ஆரம்பித்தது.
தர்ட் இயர்-ல பரத் ப்ரொபோஸ் பண்ணினனான். பட் சந்தியா அப்போ இருந்த மன நிலைல "சாரி பரத் உன்னைப் பத்தி என் மனசுல எதுவும் இல்ல"-ன்னு ஒரே வார்த்தைல சொல்லி அவனை அனுப்பிச்சுட்டா.
அவனும் அதுக்கு அப்புறம் எந்த தொந்தரவும் பண்ணல. இப்போ யோசிச்சு பார்க்கும் போது இவனுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்தா என்ன-ன்னு தோனுச்சு.
போனை எடுத்தாள், விவேக்கின் ஈமெயில்ஐ ஓபன் செய்து அதில் இருந்து பரத்தின் நம்பரை டயல் செய்தாள்.
"உயிரே என்னுயிரே என்னமோ நடக்குதடி.."
காலர் ட்யூன் மட்டுமே ஒலித்தது. இரண்டு முறை ட்ரை செய்தாள், பட் நோ ரெஸ்போன்ஸ்....
Chapter 7
ஷெம்பகமே...ஷெம்பகமே... நீ என்னும் எந்தேதல்லே..
ஒரு அழகான கிராமம், வீட்டு வாசல்ல காலிங் பெல்-க்கு பதிலா கோவில் மணிய கட்டி வச்சு இருக்காங்க.
ஒரு போஸ்ட் உமன் அந்த வீட்டுப் பையனுக்கு லெட்டர் கொடுக்கறா..
அது அவன், அவனுக்கே எழுதின லெட்டர்...
தினமும் அந்த போஸ்ட் உமன் வந்து லெட்டர் கொடுக்கறா.
இந்த மாதிரி ரூம் புல்லா அவனோட லெட்டருங்க நிறைஞ்சு இருக்கு.
திடீர்-ன்னு ஒரு நாள். வேற ஒரு ஆள் வந்து லெட்டர கொடுத்தான். அந்த பையன் ஷாக் ஆயிட்டான். விசாரிக்கும்போது தெரிஞ்சது அந்த போஸ்ட் உமன் வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயிட்டாங்க-ன்னு.
அப்புறம், அந்த பொண்ணைத் தேடி ஊர் ஊரா அலைஞ்சான்.. எங்கேயும் கிடைக்காம வீட்டுக்கு வருவான்.
அடுத்த நாள் அவனோட பர்த்டே-வுக்கு அந்த போஸ்ட் உமனே ஒரு கார்டு கொண்டு வந்து தருவா... இப்படியா ஒரு சின்ன லவ் ஸ்டோரிய அடக்குன ஆல்பம்தான் "ஷெம்பகமே...ஷெம்பகமே.."
அதை நம்ம ராகுல் ரொம்ப விரும்பி மறுபடியும், மறுபடியும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
ஐஸ்வர்யாவும் ப்ரித்வியும் லவ் பண்றது ராகுலுக்குத் தெரியாது.
செமஸ்டர் லீவ் முடிஞ்சு வந்ததுக்கு அப்புறம். ராகுலுக்கு இன்னொரு முறை தேங்க்ஸ் சொன்னாள். அப்புறம் பார்க்கும் போதெல்லாம் சிரித்தாள்.
இது போதாதா? ஒரு பையன பைத்தியமாக்குறதுக்கு?
ராகுலுக்கு ஒரு அசாத்தியமான நம்பிக்கை பிறந்தது. எப்படியாவது ஐஸ்வர்யா மனசுல இடத்தைப் பிடிச்சுடலாம்-ன்னு நினைச்சான். அவளோட காதுல இவன் பேரு விழனும்-ன்னு நிறையா வேடிக்கைகள் எல்லாம் செஞ்சு மூக்கை உடைச்சுக்கிட்டான்.
இந்த பிரபஞ்சத்தில், எந்த ஒரு படைப்பும்/ தோற்றமும், அதன் பயணத்தை இனிதே தொடங்குகிறது. அதற்கான நோக்கத்தை ஒவ்வொரு நிலையிலும் உணருகிறது. ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலை செல்லும் பொழுது, அதற்கான விளக்கங்களிலும் தெளிவு பெறுகிறது. இந்தப் பயணத்தில், ஏதாவது தடங்கல் ஏற்பட்டாலும், அதை சரி செய்து கொள்வதற்கான வழி வகைகளும் பாதைகளிலேயே அமைக்கப் பட்டுள்ளது.
ராகுலின் பயணத்தில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு ஒரு அருமையான மருந்து சந்தியா. அவன் ஐஸ்வர்யாவைக் கொஞ்சம் ஒதுக்கி சந்தியாவின் மீது கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருந்தால் கூட அவனுடைய கல்லூரி வாழ்கை தலைகீழாக மாறி இருந்திருக்கும்.
எந்த ஒரு பெண்ணும், ஆண்களின் கண்கள் தன் மீது விழுவதை ரசிப்பார்கள். அதுவும் அவர்களுக்குப் பிடித்த ஆண்களின் கண்களாக இருந்தால், அவர்கள் தூக்கத்தை அவர்களை அறியாமலே தொலைத்து விடுவார்கள்.
அதிகமான கண்ணடிகள் படுவதற்காகவே, பத்தாத உடைகளை எல்லாம் விரும்பி உடுத்திக் கொள்வார்கள்.
நல்ல வேலையாக சந்தியா அந்த மாதிரி தப்பான காரியத்தில் எதிலும் இறங்கி விடவில்லை. ராகுலின் கவனத்தைப் பெறுவதற்கு, அவள் செய்த ஒரே ஒரு முயற்சி, அவனை முழு மனதாக காதலித்தது மட்டுமே!.... மனதை திடப் படுத்திக் கொண்டு சொல்லியே விடலாம் என்று முடிவு செய்தாள்.
காண்டீனின் முன்புறம் விவேக்கும் ராகுலும் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
அது இண்டர்வல் டைமோ, லஞ்ச் ப்ரேக்கோ இல்ல. மிட் டெர்ம் எக்ஸாம் நடந்து கொண்டிருப்பதால், அவரவர்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். அதனால், காண்டீனில் ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.
காண்டீனுக்குப் பின்புறம் இருந்து சந்தியா அவர்களைப் பார்த்தாள், ஆனால் விவேக்கும் ராகுலும் அவளைக் கவனிக்கவில்லை.
ராகுல் என்று அழைப்பதற்கு வாயெடுத்தாள், ஆனால், அவர்களின் உரையாடல் இவளைக் கவனிக்கச் செய்தது.
மச்சான், நான் இன்னைக்கு எப்படியாவது அவ கிட்டே சொல்லப் போறேன்டா..
ஹா.. ஹா. ஹா.. ஏன்டா இப்படி காலங்காத்தால காமெடி பண்ற?....
நான் இது வரைக்கும் உன் கிட்டே சொன்னது எல்லாம் கூட சும்மாவா இருக்கலாம். பட் இன்னைக்கு நான் எக்காரணத்தைக் கொண்டும் சொல்லாம இருக்கப் போறது இல்ல.
ஐயோ அங்கே பாரு ஐஸ்...- என்று விவேக் பரபரப்பானான். உடனே ராகுலின் முகத்தில் ஏகப்பட்ட மாற்றம்.
கலகல என்ற சத்தத்துடன் ஐஸ் பட்டாளம் ஊர்வலம் சாரி காலேஜ் வலம் வந்து கொண்டிருந்தது. ராகுலைப் பார்த்தவுடன் நின்றாள்.
என்ன ராகுல் எக்ஸாம் எப்படி எழுதின? இவ்வளோ சீக்கிரம் வெளிய வந்துட்ட?
சிரிக்க முடியாமல் சிரித்தான்.
அவளும் சிரித்து விட்டு, நான் வர்றேன்-ன்னுட்டு கான்டீன்-க்குள் போயிட்டாள்.
சிரித்துக்கொண்டே விவேக் “எண்டே குருவாயூரப்பா!... இவனுக்கு நல்ல புத்திய நீதான் கொடுக்கணும்”- என்றான்.
மச்சான், “டேய்ய்..”-ன்னு ஒரு சவுண்ட் விட்டாலே ஒன்னுக்கு விடுற ஆளு நீ!.... இதுல ப்ரோபோஸ் பண்ணப் போறியா? வேணும்-ன்ன சொல்லு. உனக்காக நான் பேசுறேன்? என்ன பேசுட்டா?
கையில் இருந்த நோட் புக்கை கீழே வீசி விட்டு “போடா!...” –ன்னுட்டு ராகுல் வேக வேகமாக நகர்ந்தான்..
அத்தனையும் சந்தியா தூணின் பின் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள்... சுக்கு நூரானாள்.
ரயில் சத்தம் காதைக் கிழித்தது....
உள்ளே எதையும் பொருட்படுத்தாமல், ஒரு கும்பல் சீட்டாடிக் கொண்டிருந்தது. நமக்கு அறிமுகமான சில ஜீவன்கள் அதில் இருந்தது. விவேக், தக்காளி; ராகுல், உஷா, கண்மணி; பீர்பால், ஸ்நேகா; பரத், மற்றும் அவர்களின் கல்லூரி சகாக்கள் அடங்கிய குழு. எத்தனை வருடம் ஆனாலும் பிரிண்ட்ஷிப் டே அன்னிக்கு நாம நம்ம குடும்பத்தோட நம்ம காலேஜ்-ல மீட் பண்ணுவோம்-ன்னு ப்ராமிஸ் பண்ணின குரூப் அது. பெங்களூர்ல இருந்து புறப்பட்ட கும்பல்தான் இப்போ இந்த ட்ரெயின்-ல போயிட்டு இருக்கு.
ரெண்டு ரவுண்டு சாரி ஆட்டம் முடிந்ததும், பரத் இடத்தை காலி செய்தான். கதவின் அருகே நின்று வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ அவசரத்தில் கிளம்பியதால், மொபைலை ரூமிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டான். ட்ரெயின் ஏறியவுடன் தான் அடடா! தப்பு பண்ணிட்டோமே.. இன்னைக்கு சந்தியா கால் பண்ணினாலும் பண்ணுவா-ன்னு விவேக் சொன்னானே!-ன்னு நினைச்சான்.
அவன் நினைக்கும் போதே சந்தியா கால் செய்தாள், எந்த ரெஸ்போன்ஸ்ம் இல்லாததால், சரி என்று விட்டு விட்டாள்.
கொஞ்ச நேரத்திலேயே ஷாமா மாமாவோட பையன் போன் பண்ணினான்...
hey.. hi, its ghaathi... am i talking with santhiya?
yep.. who is this?
ah... hmm., I'm... .. ok.. did your dad talk with you regarding our proposal.
hmm., yes... are you Ganapathi?
ha ha ha.. yep.. Ganapathi.. but dont call me like that.. its Ghaathi..
oh.. ok.
so, whats up?..
nothing.. simply going..
hmm., ok Sandy... can I call you sandy?..
Nope please.. call me santhiya only..
oh my god.. what kind of traditional girl you are..
yep I'm still traditional...
hmm., ok.. but your dad told me that you are ultra modern.. its ok.. I just wanna tell you something about me and my future.. interested?...
I'm listening..
ok., first thing is., I dont wanna come back to India.. I wanna settle here only... & I want to lead my life in my own way.. someone should not interfere in my decisions... I'd give respect to my partner's thoughts but I want them to understand whats my opinion before they think about it... I'd love dating with my past friends.. you should not interfere in this. also you can continue your friendship as you are in the same way....whatever it is... No objection from my side..
....
u know I'm very much frank about this.... I don't want some last minute discrepancies....
what do you think about this proposal?... please be frank and tell me your interests and expectations...
..
hmm, Ghaathi.. can you please do me a favor?
yep.. all the time..
Please Delete my number and don't call me hereafter.
you mean to say... you are not my type.
Exactly...
--Call disconnected...
பிரண்ட்ஷிப் டே அன்னைக்கி வந்திருந்த எல்லோரும் ரொம்ப சந்தோசமா என்ஜாய் பண்ணினாங்க!...
ஒரு முப்பது பேர் பக்கமா இருக்கும். எல்லோரும் அடிச்ச கமெண்ட்ஸ்-க்கு அளவே இல்ல.
எந்த ஒரு காயத்திற்கும் காலம் ஒரு மிகச் சிறந்த மருந்து. இந்த நான்கைந்து வருடங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் இதற்கு ஒரு உதாரணம். கல்யாணமே வேண்டாம் என்று வெறுத்த சிலர் ஜோடியுடன் வந்திருந்தனர். எத்தனையோ கஷ்டங்கள் காயங்கள் ஆனாலும், மனதில் ஒரு சந்தோசம்.

படிக்கும் பொழுது த்ரிஷா மாதிரி இருந்த பெண்கள் எல்லாம், இப்போது குஷ்பூ சைஸ்-ல் மாறி கையில் குழந்தையுடன் இருந்தனர். நிறைய பேர் தங்களது கல்யாண பத்திரிக்கையுடன் வந்திருந்தனர்.
என்னடா இது இவன் மட்டும் ஒரே மாதிரி இருக்கான்? என்று நிறைய பேர் கேட்ட ஒரே ஆள்!.... வேற யாரு நம்ம விவேக்தான். இதோ பாரு மூனு கண்ணன் வந்து புடிச்சிட்டு போயிடுவான்-ன்னு அவனைப் பார்த்து அவனது ராகுல் கண்மணிக்கு சாப்பாடு ஊட்டினான்.
பரத்-க்கு இருக்கவே முடியல. எப்போடா கிளம்புவோம்-ன்னு இருந்தான்.
நாம எதிர்பார்க்காத நிகழ்சிகள், எத்தனையோ நம்ம வாழ்க்கைல நடக்குது. அதுல ஒன்னு ராகுலுக்கு நடந்தது. கெட் டு கெதர் மாதிரி இருக்கணும்-ன்றதுக்காக அவினாசி ரோடு தி ரெசிடென்சி ஹோடெலில், நம்ம நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு சின்ன பார்ட்டி மாதிரி செட்டப் பண்ணினாங்க.
கண்மனிய திடீர்-ன்னு காணோம். எங்கே எங்கே-ன்னு ராகுல் பரபரப்பா தேடினான். கிரௌண்ட் ப்ளோர்ல ஒரு லேடி கண்மனிய தூக்கி வச்சுகிட்டு பேசிட்டு இருந்தாங்க. ஒரு வழியா ராகுலுக்கு நிம்மதி வந்தது. கிட்டே போயி கண்மனிய வாங்கலாம்-ன்னு நினைச்சு, அந்த லேடி இருக்குற இடத்துக்கு நடக்க ஆரம்பிச்சான்.
பின்பக்கமா பார்க்கும் பொழுது, அந்த லேடி-ய எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
அந்த மல்லிகைப்பூவும், சுருள் முடியும், காதுல வளையமும்.... ராகுலின் மனசு பட படத்தது...
அருகில் வந்தவுடன், கண்மணி அப்பா என்று சிரித்தாள்...
என்றும் மாறாத அதே புன்னகையுடன் ஐஸ்வர்யா குழந்தையுடன் திரும்பிப் பார்த்தாள்.
ராகுலின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.
-Columbus
தொடரும்....
Chapter 8
சொல்லுக்குள் சொல்லை வைத்து சொல்லாமல் சொல்லிவிட நினைக்கும் அன்பை யாருக்கும் தெரியாமல் வெளிப்படுத்துவதே காதல்.
இங்கு நீ நலம், அங்கு நான் நலமா என்று ஒரு வரியில் முடித்தாலும், அதில் ஆயிரம் உட்பொருட்களுடன் உதிரி உதிரியாய் உணர்வது காதல்.
எப்போதும் இளமையாய் இருக்க விரும்புவது, இருப்பது காதல்.
ஆயிரம் யுகம் கடந்தாலும், அன்பு மட்டும், என்றுமே மாறாத சொத்து இந்த மனித சமுதாயத்திற்கு...
நம்மில் பலர் அன்பை வெளிப்படையாக உணர்த்தி விடுகிறோம். ஆனால், இந்தக் கதையின் நாயகனான, ராகுலால் அது முடியவில்லை.
அறிவியல் மொழியில் அவனுக்கு ஏற்பட்டது ஒரு வேதியியல் மாற்றம். அதற்குக் காரணி ஐஸ்வர்யா. நியுட்டனின் மூன்றாவது விதிக்கு காதல் மட்டும் விதிவிலக்கு.
பசங்க எவ்வளவுதான் பீல் பண்ணி காதலிச்சாலும், புள்ளைங்க மனசு மட்டும் கிணத்துல போட்ட கல்லு மாதிரியேதான் இருக்கும்,
---
மிகவும் நீண்ட காலம் ஆனதால், மொக்கை போட விருமாமல் கதையை சுருக்கி முடிக்க நினைக்கிறேன்.
இந்தக் கதையில் நான் எழுத விரும்பியது, ஓவொரு சாப்டரிலும் இரண்டு பாகம் முதல்பாகம் பிளாஷ்பேக், இரண்டாவது பாகம் இப்போ நடக்குறது... இதே நிறையா பேருக்கு புரியல... அதனால என்னோட முயற்சி தோல்வி அடைந்ததா நினைத்து கதையை நிறுத்துறேன்.
ராகுல், ஐஸ் எம்.பி.ஏ ஒன்னா படிக்குறாங்க..
ராகுல் ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகி, கடைசில உஷா கண்மணிக்காக, அவனுடைய காதலை கொல்லுறான்.
விவேக்கின் ஒரு சில முயற்சிகளுக்குப் பிறகு, பரத் சந்தியா திருமணம் நடந்தேறுகிறது..
ஏதோ ஒரு தகராருல ப்ரித்வி-யை யாரோ தாக்குறாங்க... ஐஸ்-க்காக ப்ரித்வி வேலையை ராஜினாமா செய்து கேரளாவுக்கே போயி செட்டில் ஆகுறாங்க..
முற்றும்.
10 comments:
நல்ல தொடக்கம்..... இன்னிமே தான் எல்லா பிரச்சனயும்(ராகுலுக்கு)... :D
கொஞ்சம் பொறுங்க தல..., இன்னும் நான் எல்லாரையும் அறிமுகப் படுத்தவே இல்ல.... இப்போ பார்த்தது, ஒரு சின்ன ட்ரைலர் தான்.. மெயின் பிக்சர் பின்னாடி வரும்..
nice sir...
//ஒருதலைக் காதல் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நிலவைப் போல் கொஞ்ச நாள் பெருசாகும், அப்புறம் சின்னதாகும்., கொஞ்ச நாள் கழிச்சு மறைஞ்சது போல இருக்கும்., அப்புறம் பௌர்ணமியப் போல திடீர்-ன்னு ஜொலிக்கும்., this is directionally proportional to the amount of time you think about her and the moments you spent with her.//
feel panni urugi urugi yeluthi irukkura vaarthaigal....
//அந்த பெரிய, கரிய கண்களினால் அவள் ஒரு பையனை எதேச்சையாக பார்த்துட்டா அவ்வளவுதான்... அவனுக்கு அந்த வருடம் ஒரு அரியர் கண்பிர்ம் (confirm)...//
Nalla connection between the beautiy & boys mentality.
i expect more about ஐஸ்வர்யா intro.. i little bit disappoint.. because u may intro lot of girls in upcoming part.. so strong intro na we didnt confuse the character's. ITS MY OPINION . .i waited for how u express first pulb(one side love almost get lot of pulb)of hero. but lovely u turn the instance. i like ur dreaming words for one side love(simply supper - full moon, half moon)...
YAR ANTHA SANDHYA !!!???
keep rock vivek...
With Regards,
R.Prabhu,
Bangalore.
Thanks Gangaram, Thanks Prabhu for your valuable comments.
Prabhu,
Heroine-kku ivlo weight koduththathu pothum-nnu ninaichen, thats why I've stopped with Santhanam comments "Ippo enna solla varre?.. " will consider this input in my next story... thx.
Really cool... The introduction and wordings about ஐஸ்வர்யா will create much impression to all ;)
Really superb and worderful lines...
Varnanaikku first point ;)
Hi Vivek,
in Miss IT - III sandhya intro is very nice. Athvum Iyar Aathu ponna rombavum samththa intro kuduthu erukeenga...
i think u did small mistake.
//ஆனால், ஒவ்வொரு முறையும் இவன் உதாசினப் படுதுத்தினவாட்டி, சந்தியா ரொம்ப பீல் பண்ணுவா.
அதுவும் இல்லாம, ராகுலுக்கு, ஐஸ்வர்யாவைப் பத்தி நினைக்கறதுக்கே நேரம் இல்ல. //
when we discuss about சந்தியா appadi ஐஸ்வர்யா vanthanga.. OR u trying to say something else.. i met small confuse here..
Keep rock vivek , its going fantastic.. post all other parts ASAP..
With Regards,
R.Prabhu,
Bangalore.
Thanks Prabhu for noting this to my sight..
I've changed this to
அதுவும் இல்லாம, ராகுலுக்கு, ஐஸ்வர்யாவைப் பத்தி நினைக்கறதுக்கே நேரம் பத்தல.
Hope this makes things straight.
Post a Comment