Thursday, January 28, 2016

ஊழ்

யாதும் ஊரே - எல்லாமே ஊர்தான்
யாவரும் கேளிர் -எல்லோருமே உறவினர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா,
-ஒருவருக்கு நல்லதும் கெட்டதும் பிறர் தருவதில்லை. 
நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். 
தினை விதைத்தவன் தினை அறுப்பான் ,வினை விதைத்தவன் வினை அறுப்பான். 
 -நமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணமும் பொறுப்புமாவோம்.  புறக்காரணிகளை குறைகூறுவதில் பயனில்லை.
நாம் என்ன செய்தோமோ, அதைப்போறுத்தே இன்பமோ, துன்பமோ நம்மை சேரும், அல்லது அற்றுப்போகும்.


நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;  
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை.
சாதலும் புதுவது அன்றே ; 
-இறந்து போவது ஒன்றும் புதிது அல்லவே.

வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; 
-ஆகையால் வாழ்வதிலும் பெரிய இன்பம் கிடையாது.

முனிவின், இன்னா தென்றலும் இலமே; 
அதற்காக அதை வெறுத்து ஒதுக்குவதும் எங்களிடம் இல்லை
-எனவே துன்பம் வரும்போது வருந்துவதோ, இன்பம் வரும்போது மகிழ்வதோ இங்கில்லை.

‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, 
ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று 
நீர்வழிப் படூஉம் புனை போல, 

மின்னல் கொண்டுள்ள வானம் பெய்யும் மழையை தலைமேல்
கொள்ளாதெனில், கணத்த கல்-மலை மேலிருந்து, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி, அதன் தடத்திலே போகும் புனை
[மரம்]யைப்  போல,
 
ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது 
திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், 

உயிரா னதுமுன்னர் இட்ட முறைவழியே அகப்பட்டு தன்வழி செய்யும் (பிறவி வழிப் படும்) என்று 
 -எவ்வாறு வான்மழை வெள்ளத்தால் நிரம்பிய ஆற்றில் தோணியானது தன்பாட்டில் கொண்டுசெல்லப்படுகிறதோ, அதுபோலவே வாழ்க்கையால் நாம் கொண்டுசெல்லப்படுகிறோம் என்பதையும் நாம் மிக நன்றாக அறிவோம்.

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

-

எனவே பெருமைமிக்கவர்களாகவுள்ள பெரியோரை பார்த்து நாம் வியப்பதுவுமில்லை, அதைவிட, சிறியோரைப்பார்த்து நாம் இகழ்வதுமில்லை.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
புறநானூறு. 192 - பாடியவர்: கணியன் பூங்குன்றன் 

 

பொருண்மொழிக் காஞ்சியில்

  • உலகைக் கணித்துப் பார்த்து யாதும் ஊரே என்றார்.
  • மக்களைக் கணித்துப் பார்த்து யாவரும் கேளிர் என்றார்.
  • நன்மை தீமைகளைகு கணித்துப் பார்த்து அவை பிறர் தர வாரா என்றார்.
  • சாதலைக் கணித்துப் பார்த்து அது புதிதன்று என்றார்.
  • வாழ்தலைக் கணித்துப் பார்த்து அது பிறவியால் வந்தது என்றார்.
  • பிறந்ததால் வரும் வாழ்க்கையில் வரும் இன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை இனிது என மகிழக் கூடாது என்றார்.
  • வாழ்க்கையில் வரும் துன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை முனிந்து வாழ்க்கையே இன்னாது(துன்ப மயமானது) என வெறுக்கக் கூடாது என்றார்.
  • பிறவியைக் கணித்துப் பார்த்து அது மின்னல் போன்றது என்றார். மின்னல் எப்போதாவது எங்கோ மழை பொழிவது போன்றது என்றார்.
  • வாழ்க்கையைக் கணித்துப் பார்த்து அது மல்லல் பேர் யாறு போன்றது என்றார். (வளமான பெரிய ஆற்று நீரோட்டம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலச் சாவை நோக்கி ஓடும் - என்பதைப் பிறிது மொழிதல் அணியின் பாற்படுத்து உய்த்துணர வைத்தார்)
  • வாழ்க்கையில் எதிர்ப்புகள் இருப்பதைக் கணித்துப் பார்த்து ஆறு பாறைகளில் மோதிக்கொண்டு ஓடுவதை எண்ணிப் பாரக்கும்படி நம்மைத் தூண்டினார்.
  • நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார். (ஊழ் = 'முறை' என்பது ஆற்று நீரின் ஓட்டம். முயற்சி என்பது உயிர்படகைச் செலுத்தும் துடுப்பு)
இந்த உலகியல் உண்மைகளைத் (பொருண்மொழிக் காஞ்சியைத்) திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
இந்தத் தெளிவின் பயன் யாது?
மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது.



உலகின் படைப்பை உணர்ந்து, ஒன்றிலிந்து வந்ததை அறிந்து யாதும் ஊரே என்றார்.

    உலகின் எல்ல உயிரைகளையும் ,(எல்ல உயிர்களும் ஒரே ஆற்றல் என்பதை)
          உணர்ந்து,யாவரும்கேளிர் என்றார்.

    நன்மை தீமைகளை உணர்ந்து அவை பிறர் தர வாரா என்றார்.

         துன்பத்தை உணர்தலும் பிறகு தணிதலும் அவரவர் உடலுக்குதான் (மனதினால்)
         என்பதனையும் அறிவிக்கிறார்.

         சாதலை உணர்ந்து அது வேறு பரிமாணத்தில் புகுவது என்றார்.
       
     வாழும் இன்பத்தை இனிது என மகிழாமல் இருப்பதும் இலமே.

     முனிவில் இல்லை வாழ்வின்பம் என்பதும் இலமே.

     மின்னல்(அருள்ஒளி) கொண்டுள்ள வானம்(மறை ) பெய்யும் மழையை தலைமேல்
          (முதன்மையானதாக)கொள்ளாதெனில்,
.
         கணத்தகல் (தூலஉடல்) மலைமேலிருந்து,

         பெருகி வரும் ஆற்று நீரில் (உயிராகிய நீர்) சிக்கி,

         அதன் தடத்திலே போகும் புனையைப் [மரம்] போல,

          உயிரா னதுமுன்னர் இட்ட முறைவழியே அகப்பட்டு தன்வழி

          செய்யும் (பிறவி வழிப் படும்) என்று

          மறைபொருளறி திறன் பெற்றேர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் .

          மறையறிந்த பெரியோரை கண்டு வியத்தலும் இலமே.

          மறையறியா சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே,

  

இந்த உலகியல் & வாழ்வியல் உண்மைகளைத் திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய
வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
                                                                                                                                  (பொருண்மொழிக் காஞ்சி)

        இந்தத் தெளிவின் பயன் இதுவேயாம்.

        மறையறிந்த பெரியோரை கண்டு நாம் வியப்படைவது சமநிலையற்ற மனதின் நிலை..
        அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் அவரை அடையாது.
        மறையறியா சிறியோரை தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல்
        சமநிலையற்ற மனதின் நிலையினும் கீழாம்.

இதனையுரைத்த பேறறிஞர் தன்னுடைய பெயரை குறிப்பிடா காரணம் ,
இந்த உருவும் அதற்க்கான பெயரும் பொய்யென உணர்ந்த்தேயாம்.
எந்த ஒரு உருவாக்கமும், உருவாக்கியவரை விட சற்று குறைவானதாகவே இருக்கும்.
இது ஒரு விதியேயாம்.இதில் மாற்றுகருத்தே இல்லை.
இங்குரைக்கப்பட்டதெல்லாம் படைத்தல் பற்றியதாம்.
ஆதலால் படைக்கப்பட்டதானது,படைப்பைவிட
தாழ்ந்ததாக உணர்ந்த்தால், தன் பெயரை முன்னிலை படுத்தவில்லை.
இங்கு சொல்லப்பட்டதனைத்தும் மெய்மையை பற்றியதாம். விஞ்ஞானமே
அதனாலேயே மற்றவைபற்றி சொல்லப்படவில்லை.
இதனை பொதுவாகவே தொண்மையான நூல்களில் மேலும்
திருக்குறள் எழுதியமுறையிலும் காண்க.


 -மேற்கண்ட பாடலும், பாடல் வரிகளைப் பற்றி எழுத ஒரு தகுதி வேண்டும், அது இல்லாத காரணத்தினால், இணையத் தளத்தில் இருந்து நகலெடுத்து இந்தப் பதிவை ஏற்றுகிறேன்.

தெளிவதும், கலங்குவதும் அவரவர் (த்தூ)கர்மம்.

No comments: