நானும் ஒரு கதை எழுதப் போறேன். என்ற பீடிகையுடன் ஆரம்பிக்க கடமைப் பட்டு இருக்கிறேன் சமீப காலமாக நடந்து வரும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஒரு தொகுப்பு- என்றே இதைக் கூறலாம் ............
.........................
நேரம் காலை பத்தை தாண்டி இருந்தது... இரவு உள்ளே சென்ற சரக்குகளும், அடித்த கொட்டங்களும் சரியான தெளிவைக் கொடுக்கத் திணறின... அறைக் கதவைத் திறந்ததும்... வாந்தி நாற்றம் மூளையை ஏதோ செய்தது... வேலைகாரி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்...
.........................
நேரம் காலை பத்தை தாண்டி இருந்தது... இரவு உள்ளே சென்ற சரக்குகளும், அடித்த கொட்டங்களும் சரியான தெளிவைக் கொடுக்கத் திணறின... அறைக் கதவைத் திறந்ததும்... வாந்தி நாற்றம் மூளையை ஏதோ செய்தது... வேலைகாரி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்...
அக்கா, டீ இருக்கா?
தா, ஒரு நிமிசம்ப்பா...
டெய்லி மெயில் : சிறுமி கற்பழிப்பு... கடத்தல் கும்பல் விற்றதாக தகவல்.. இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் பெண் குழந்தைகள் காணாமல் போகின்றனர்....
படித்த மாத்திரத்தில் தூக்கி எறிந்தான் ராஜா....
ச்சே.. என்னா ஆளுங்களா இருப்பானுங்க.?
டீ வந்தது.. குடித்த மாத்திரத்தில் வயிறும் வலித்தது... அவசரமாக கழிவறைக்குச் சென்றான்...
ச்ச, என்னா கருமமோ தெரியல, இந்த பாடு படுத்துது. இனிமே இந்த சரக்கைத் தொடவே கூடாது..
கிளிக்... பேஸ்புக் அலெர்ட் கேட்டது.. ஷார்ட்ஸ் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்தான்..
"தமிழ் ஆன்டி" என்ற சமுதாயத்தின் புதிய வரவு...ரசிக்கத் தொடங்கினான்.... சில மணித் துளிகள் அரை மணி நேரமாகின...
விஷால் வந்து கதவைத் தட்டும் வரை, ராஜா தன்னை மறந்து பேஸ்புக்-கில் மூழ்கி இருந்தான்...
கேணப்**** என்னாடா பண்ணிட்டு இருக்கே ?...
...தோ வண்ட்டெண்டா...
அவசரமாங்க வெளியேறினான்...
இன்னைக்கு என்னா பிளான்?.... வாரா வாரம் இதே கண்பியுசனாவே இருக்குதே?... சனிக்கிழமை ஊர் சுத்துரதுளையும், தண்ணி அடிக்கரதுளையும் போயிருது...
தம்பி, அரிசி பருப்பு வாங்கி வச்சிடுங்க.. தீரப் போவுது.. நான் கிளம்புறேன்!.. -வேலைக்காரி
மச்சா,, வாடா சூப்பர் மார்க்கெட் -க்கு போலாம்.
சற்று நேரம் கழித்து, இருவரும் கிளம்பினர்..
மாலா, தன் உடம்புக்கும் நிறத்திற்கும் சம்பந்தம் இல்லாத ஒரு உடையை அணிந்து இருந்தாள்... வயதுக்கு வந்து வருடங்கள் ஆனாலும், இவர்கள் தங்கள் சிறு வயது சீருடையை மறப்பதில்லை... சட்டை பொத்தான் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடுவேன் என்று சொன்னது.. அந்த சட்டைக்கு இரண்டு கைகள் இருக்குதா இல்லையா என்று பட்டி மன்றமே வைக்கலாம் அவ்வளவு உயரம். அந்த ஜீன்ஸ் இவ போட்டுக்கிட்டு தைச்சாளா? இல்ல தச்சுகிட்டு போட்டாளா? ஒண்ணுமே புரியலையே?.. என்ற குழப்பத்தோடே நமது நண்பர்கள் அவளைக் கடந்து சென்றனர்..
என்னடா மச்சா இவ இன்னைக்கு செமையா இருக்கா இல்ல? ராஜா பேச்சை ஆரம்பித்தான்.
...
விஷால் இந்த உலகத்திலே இல்லை... ராஜா கையைப் பிடித்து உலுக்கினான்...
த்தூ... மூடிட்டு வாடா..
கல்லூரிக்காதல் கண்களில் வந்தது... இவளப் பாத்தா அந்தத்தே**** ஞாபகத்துக்கு வர்றா..டா..
சரி சரி விடு, நாம வந்த வேலையைப் பாப்போம்...
விஷால் பெண்களை வெறுப்பவன்... என்பதை விட பெண்களால், இல்ல ஒரு பெண்ணால் பாதிக்கப் பட்டவன்.
சூப்பர் மார்க்கெட்டில் தோன்றிய அனைத்து பெண்களும் அவன் கண்களுக்கு கடந்த காலத்தை நினைவூட்டின... மதுபான பிரிவிற்கு சென்றான், ஒன்றிரண்டு புட்டிகளை எடுத்துக் கொண்டு வந்தான்.. ராஜா ஒரு கூடை நிறைய பொறுக்கிக் கொண்டு வந்தான்.
ராஜா தன்னிலை மறக்காதவன்-தான் இருந்தாலும், அவனை மீறி அவன் கண்கள் துரித வேகத்தில் செயல்பட்டன. இதற்கு எதிர்-பால் ஈர்ப்பு விசை என்று அறிவியல் பெயர்க்காரணம் உண்டு.
ஆடை என்ற பெயரில் அரை நிர்வாணமாய் அலையும் பெண்கள் மத்தியில் ஆணாகப் பிறந்த காரணத்தினால், பெண் ஈர்ப்பு விசையில் சிக்கித் தவிக்கும் நெஞ்சத்தை யாரிடம் சொல்லி தேற்றுவான்?...
இவுளுங்கள பாக்காமையும் இருக்க முடீல, பார்த்தாலும் மனசு கேக்கல.. ராஜாவைப் போன்ற மன நிலையில் இருக்கும் மகான்கள் அனைவரும் கூடும் ஒரே இடம் பேஸ்புக் "தமிழ் ஆன்டி" சமுதாயம்
இது ஒன்று மட்டும் அல்ல. இவர்கள் விரும்பும் பக்கங்கள் நூறு ஆயிரம் என்று போகும்... வழியில் பார்க்கும் ஆபாசக் காட்சிகள் தொடர்ந்து, சினிமாவில் வரும் மசாலா காட்சிகள் மற்றும், வெளிநாட்டு இறக்குமதிகள் என்று ஏராளமான பெண்களின் புகைப் படங்களைப் பகிர்ந்து கொள்வதே இவர்களின் அன்றாட வாடிக்கை.. பொழுது போக்கிற்காக ஆரம்பித்து, அடிமையாக்கி வைக்கும் மதுவும் இதுவும் ஒன்றே.
புண் பட்ட நெஞ்சத்தை புகை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் விஷால்.
கண் கண்ட ஆண்ட்டியை, பேஸ்புக்-கில் தேடிக் கொண்டிருந்தான் ராஜா..
இவர்களின் பொழுது இப்படியே முடிந்தது...
[நான் மேற்கூறிய நண்பர்கள் நம்மில் பெரும்பான்மையானவர்கள்..]
மாலா அவளுடைய தோழி வீட்டிகுச் சென்றாள்...
...Touch me babe one more time...மெத்தை மேல் ஆடிக் கொண்டிருந்தாள் தோழி., மாலா உள்ளே சென்றவுடன் அவளும் ஆட்டத்தில் கலந்து கொண்டாள்...
சற்று நேரம் கழித்து...
ஏய் இன்னைக்கு என்னாடி பிளான் ?
oxford English-ல் அரைகுறையாய் பேசினாள்..
i gotta meet my man.. then shopping.. u know..
he would get me a pleasant surprise... he promised. u know..
i'm gonna like him.. he's such a nice person u know...
கிட்டத்தட்ட எட்டேமுக்கால் என்று சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு வாலிபன் வந்து அவளை பிக்அப் செய்து கொண்டு போனான்..
மாலா, ஒரு வித சோகத்துடன் வீடு திரும்பினாள்...
ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, மாலாவுக்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது.
Rock Tiger - என்று தன் பெயரை வைத்து, பேஸ்புக்-கில் இவளிடம் பழகி வந்த நபரை இன்று இவள் சந்திக்கப் போகிறாள்...
அதிகப் படியான எதிர்பார்ப்புகள் என்றும் ஏமாற்றத்தையே விட்டுச் செல்கின்றன...
காப்பே காபி டே -வில் இருவரும் ஒரு பத்து நிமிட சிந்தனையில் தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தார்கள்....[இருவரின் மனதிலும் ஒருமித்த சிந்தனை..]
ச்ச, இவளா பாவனா மாதிரி இருப்பா-ன்னு நினைச்சேன்....
ச்ச... இவனா விஜய் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்....
ஏதோ வந்த கடமைக்கு கொஞ்ச நேரம் மொக்கை போட்டுட்டு, பாய் பாய் சொல்லி பிரிந்தார்கள்..
இனிமே இந்த நாய் மூஞ்சிலயே முழிக்கக் கூடாது.. என்ற சங்கல்பத்தை எடுத்து, இருவரும் வீட்டிற்க்குச் சென்றனர்.
நாட்கள் கடந்தன மாலாவும் ராஜாவும் ஏதோ ஒரு விதத்தில் நண்பர்களாயினர்..
விஷால் வெளியுலகத் தொடர்புகளை அடியோடு தொலைத்துக் கொண்டிருந்தான்... மாது விட்டுச் சென்ற களங்கத்தை,மது துடைத்தது.. இருந்தாலும் பளபளப்பு வராததால் கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர் போட்டு தேய்த்துக் கொண்டிருந்தான்..
ராஜாவின் உலகத்தில் மாலா நுழைந்ததால், விஷால் வேறு வீடு பார்க்க வேண்டியதானது. ஏதோ ஒரு சண்டைல கஞ்சா அடிக்கற நாயிங்களோட சகவாசம் எனக்கு வேண்டியது இல்ல-ன்னு ஒரு டயலாக் விட்டான்...
விஷால் கோவத்தோடு வீட்டை விட்டு கிளம்பினான். வேறு ஒரு நண்பன் வந்துதான் விஷாலுடைய பொருட்களை எடுத்துச் சென்றான்.
ராஜா மாலா நட்பு நெருக்கமானது... யாருக்கும் உதவாத பெப்ரவரி 14 -ல் காதலர்களாயினர்...
மாலாவின் நெருக்கத்தில், பேஸ்புக்கையே மறந்திருந்தான்...
பழகப் பழக பாலும் புளிக்கும்...
ஓரிரு மாதங்களில் பழைய ராஜாவானான்...
மாலா, தன் காதலனின் நெருக்கத்தைக் குறைக்க சற்றும் விரும்பவில்லை... உரசலில் ஆரம்பித்து, இதழ்களில் முடிந்தது...
ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைவதில்லை... காமத்தீயில் உருகிய ஊசி எத்தனை நாட்கள்தான் வழி விடாமல் இருக்கும்...
கழுகு படத்தில் இருந்து ஒரு பாடல்...
ஆம்புளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்.. இத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்..
இவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குறான். இவ செலவு பண்ணத்தான் ஒரு லூச தேடுறா..
ராஜா மாலா டேடிங் தொடர்ந்தது..
விரும்பும்போதெல்லாம் விரும்பிய இடங்களுக்கெல்லாம் நேரம் காலம் கணக்கில்லாமல் சுற்றித் திரிந்தனர்...
"சனிக்கிழமை சாயுங்காலம் சரக்கடிக்கலாம்" என்ற ஸ்ம்ஸ் ராஜாவின் பாக்கெட்டில் சிணுங்கியது... அப்புடி அதுல என்னதாண்டா இருக்கு ? வாராவாரம் விடாம குடிக்குறீங்க? மிகுந்த ஆவலுடன் கேட்டாள்...
அது எல்லாம் சொன்னா புரியாது அனுபவிக்கனும்... நீ வேணும்ன்னா ஒரு தடவை ட்ரை பண்ணிப் பாரேன்...
நீ இப்படி சொல்லணும்-ன்னுதானே நான் இந்த பேச்சை ஆரம்பிச்சேன். என்று மனதுக்குள் நினைத்தவளாய், எனக்கு பயமா இருக்குடா என்று, ஒப்புக்கு சொன்னாள்...
அன்று இரவே குடியும் குடித்தனமுமாக இவர்கள் வாழ ஆரம்பித்தனர்..
பெற்றோர்கள் அருகில் இல்லை... வேலைக்காக வந்து குடியிருக்கும் மெட்ரோபொலிடன் நகரத்தில், இதுதான் நாகரீகம் லிவிங்-டு-கெதர்... என்ன செய்ய எல்லாம் கலி படுத்தும் பாடு.
ஒரு சில மாதங்கள் ஓடின... மாலாவின் நெருங்கிய தோழி வெளிநாடு செல்வதால், அவளை வழியனுப்ப இவளும் இவனுடைய ஆசை நாயகன் ராஜா-வும் விமான நிலையத்திற்கு வந்தனர்..
நள்ளிரவு நேரம் என்பதால் பனி பொழியும் அதனால் பைக்கில் வராமல் சொகுசு பேருந்தில் வந்திருந்தனர்.. வீடு திரும்பும் பொழுது ஒரே பேருந்து கிடைக்கவில்லை ஆதலால் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வோல்வோ-விழும் மீதி தூரத்திற்கு சாதா பேருந்திலும் செல்லலாமென திட்டமிட்டு கிளம்பினர்.
நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்.... காமத்தை நினைத்தவன் காமா எனும் கோமா ஆகிறான்... அதனுடன் கல்லும் சேர தான் மனிதன் என்பதை மறக்கிறான்...
இவர்கள் மாற்றுப் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த பொழுது... ஒரு ஓபன் ஜீப்-பில் வாலிப முறுக்கேறிய மூர்கத்தனமான கும்பல் இவர்களைக் ஊஒ என்று சத்தமிட்டே கடந்து சென்றது.. சிறிது நேரம் கழித்து, இவர்களைக் கவர்ந்து சென்றது...
மாலா சில பல முறை கற்பழிக்கப் பட்டாள், சாரி இவளிடம் கற்பு என்று எதுவும் இல்லை அழிப்பதற்கு., பலாத்காரம் செய்யப்பட்டாள்... தடுக்க வந்த ராஜா மரணப் படுக்கைக்கு அனுப்பப் பட்டான். சாகப் போகும் தருவாயில் டேய் விஷால் இது எல்லாம் நீதானா செய்யுற? என்று கேட்டுக்கொண்டே உயிரை விட்டான்...
...........................
நேரம் காலை பத்தை தாண்டி இருந்தது... இரவு உள்ளே சென்ற சரக்குகளும், அடித்த கொட்டங்களும் சரியான தெளிவைக் கொடுக்கத் திணறின... அறைக் கதவைத் திறந்ததும்... வாந்தி நாற்றம் மூளையை ஏதோ செய்தது... வேலைகாரி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்...
அக்கா, டீ இருக்கா?
தா, ஒரு நிமிசம்ப்பா...
டெய்லி மெயில் : நள்ளிரவில் பெண் பலாத்காரம். பிணமாகிய காதலன்.
படித்த மாத்திரத்தில் தூக்கி எறிந்தான் சங்கர்....
ச்சே.. என்னா ஆளுங்களா இருப்பானுங்க.?
- இன்றைய தேதிகளில் சீரழியும் இளைய சமுதாயத்தின் மீதான அக்கறை கொண்டோர் அனைவருக்கும் இச்சிறு கதையினை சமர்ப்பிக்கிறேன்
No comments:
Post a Comment