Showing posts with label கவித . கவித... Show all posts
Showing posts with label கவித . கவித... Show all posts

Thursday, March 6, 2014

தேன்மொழி

எனக்கு தமிழில் எவ்வளவோ எழுத வெண்டுமென்று ஆசை...
ஆனால் எழுதக் கொடுத்து வைக்கவில்லை..
[எனக்கு கூடதான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிக்கணும்-ன்னு ஆச... ]

அதாகப் பட்டது என்னவென்றால், ஒரு தமிழ்க் குடிமகனாகப் பிறந்தவன், தன்னுடைய வாழ்நாளில் சாதிக்க வேண்டிய சில ...
[டேய்.. நிறுத்து..இப்போ என்னா சொல்ல வர்ற?]

தேன்மொழி என் தேன்மொழி அவள் மொழி, தேன்மொழி...
[உன்னோட படைப்புத் தொல்லைக்கு ஒரு அளவே இல்லையாடா?]

என் தேன்மொழி, அவள் விழி மலர்விழி
காதலி அவள் என் காதலி..

மைவிழி, அவள் என்னைப் பார்க்கும் மார்கழி
பைங்கிளி பஞ்சை ஒத்த, பருவத்து சங்கிலி
[நீ ஒரு பெருச்சாளி.. அவ ஒரு செத்த எலி..]

என்னவள்..
தீராத வானத்தில் தினம் ஒரு நட்சத்திரம்...
காணாத வண்ணத்தில் தீட்டாத பெண் சித்திரம்...

தேன் தெவிட்டி, வாய் கசந்த உயிருக்கு
வாடாத வெண்ணிலா வெள்ளம்.
[ஸ்ட்ராபெர்ரி , பட்டர் ஸ்காட்ச் எல்லாம் இல்லையா?]

....இந்தக் கவிதை தொடரும்...

[இந்த உலகத்துலேயே, கவிதைக்கு டெலி சீரியல் மாதிரி தொடரும்...போட்ட ஒரே ஆளு நீதாண்டா.. எழுத முடீல-ன்னு ஒத்துக்கோ...  ]

Sunday, December 4, 2011

ஒரு சிறு கவிதை


கடலின் அலைகள் நின்றாலும்,
தாமரை காலையில் மலர்ந்தாலும், 
சூரியன் தெற்கில் மறைந்தாலும்,
காதலர்கள் பொறுப்பை உணர்ந்தாலும்,
சிம்பு நடிப்பதை நிறுத்தினாலும், 
என் நண்பன் ஷேய்க் கடலை போடுவதை நிறுத்த மாட்டான்.

Monday, February 21, 2011

கவித . கவித..


கேளடா மானிடா! கேள்விகள்தானடா, வாழ்கையின் தூணடா!...
கோழைக்கோபம் கோட்டை ஆண்டதில்லை! வீரமௌனம் வீழ்ச்சி கொண்டதில்லை.
தீரா முயற்சி, திடமுடன் போராடு! வாகை மலரின் வாசம் உன்னோடு. 



-நம்புங்க பாஸ் நானேதான் எழுதினேன்.

one more sample

அறிவும் அறிவியலும், ஆர்வப்பட
செழுமையும், செயல்திறனும், செம்மை காக்க
உடலும் மனமும் உறுதி சேர்க்க,
பொருளும் புகழும் பெருகிப் பொங்க
எல்லோரும் பரோட்டா சாப்புடுங்க ப்ளீஸ்..


at least  இப்போவாவது நம்புறீங்களா?