Tuesday, March 4, 2014

நாட்டு நடப்பு...

ஒரு சாதாரணனின் அன்றாட மனநிலை-பிரதிபலிப்பு..

அதாவது மஹா ஜனங்களே... 
[யாருடா இவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த மிருகத்த எழுப்பி விட்டது..?]

நான் என்ன சொல்ல வர்றேன்னா...
[நீ ஒண்ணுமே சொல்ல வேணாம்..]

சமுதாயத்துல ஏகப்பட்ட அட்டூழியம் நடக்குது..
[ஆமா நீ எழுதுறது உட்பட]

நிம்மதியா தூங்க முடியல..
நல்லா சாப்புட முடியல 
[ஆங்... எங்கேடா இன்னும் மேட்டருக்கு வரலியே-ன்னு நினைச்சேன்..]

யார் யாரெல்லாமோ அரசியல்ல நிக்குறாங்க.. புதுசு புதுசா கட்சி ஆரம்பிக்குறாங்க..

பேஸ்புக்கு-ங்குறாங்க, டேட்டிங்-ங்கறாங்க..
[டேய், உனக்கே ஓவரா தெரியல.. நீயே  200 fake அக்கவுண்ட் வச்சிட்டு திரியுற..]

கலாசாரம் சீரழியுது..
மனைவிகளை கட்டுப் படுத்தவே முடீல... அடங்க மாட்டேன்குறாங்க..
[நீ எதுக்குடா அடுத்தவன் மனைவிய கட்டுப்படுதுற?]

விஜய் டிவி பாத்து நிறைய கெட்டு போறாங்க.. (மாமி)யாருக்கும் மரியாதை கொடுக்கறது இல்ல. 
எதிர்த்து பேசுறாங்க.. 
வீட்டு வேலைகளை எதுமே செய்ய மாட்டேங்குறாங்க... 
சினிமா, பார்க், பீச், ஷாப்பிங் கூட்டிட்டு போக சொல்லி தொந்தரவு கொடுக்குறாங்க..
கார், வீடு வச்சிருந்தா மட்டுமே கல்யாணம் பண்ணிக்குறாங்க..
இல்லைன்னா வாங்க சொல்லி உயிரை எடுக்குறாங்க..
[நீ எப்பவுமே ஞாயித்து கிழமை மட்டும்தான இப்புடி பொலம்புவ, இன்னைக்கு உனக்கு ன்னா வந்துச்சு?]

எல்லா விலையும் ஏறுது, விலைவாசிய கட்டுப்படுத்த முடியல..
[டாபிக்க மாத்தாத, மேட்டர் என்னன்னு மட்டும் சொல்லு  ]

.......என் பொண்டாட்டி, நான் சொல்ற பேச்சை கேக்க மாட்டேன்றா.. அவ அம்மா பேச்சை தான் கேக்குறா..
....
[இவ்ளோதானா... இது உனக்கு மட்டும் இல்ல சாணி மண்ட, தாலி கட்டுனவன் எல்லாருக்குமே இதே சிச்சுவேசன்தான்.. 
பொலம்பறத விட்டுட்டு, போய் மூஞ்சி கழுவீட்டு வந்து வேற வேலை ஏதாவது இருந்தா பாரு...]

....சிறிது நேரம் கழித்து ...

படிக்குற பசங்க எல்லாம் இப்போ அதிகமா காதலிக்குறாங்க...
[டேய், எங்கே அந்த மூஞ்சிய காட்டு...9-ம் கிளாஸ் லேயே 12 பொண்ணுங்க பின்னாடி சுத்தின நாயி இது, இப்போ வருத்தப் படுறியா...] 

இளைய சமுதாயம் சீர் குழையுது... அவங்கள வழி நடத்த யாரும் இல்ல..
[அதான், நீ இருக்கியே..]

சமுதாயம் உருப்படனும்-ன்னா அதுக்கு உடனடியா சில சட்டதிட்டங்கள மாத்தியே  ஆகணும்..
[எங்கே, என் கன்னுகுட்டி, நீ போயி மாத்து பாக்காலாம்.. ஜட்டி பணியன கூட மாத்த முடியாது, இவன்லாம் வாய் பேசுறான்..]

எந்த ஒரு மாற்றமும் மீடியா கிட்டே இருந்துதான் ஆரம்பிக்குது.. அதனால, சின்னத்திரை, வெள்ளித்திரை, விளம்பரம், தினசரி மற்றும் நாள், வார, மாதஇதழ்கள் உட்பட அணைத்து ஊடகத்திற்கும் டிரஸ் கோடு உடை கட்டுப்பாடு கொடுக்கணும்.. 
பெண்களை கவர்ச்சிகரமா, தரக்குறைவா எந்த ஒரு ஊடகமும் காட்டக் கூடாது... 
[அப்படீனா, சினி-மினி இண்டஸ்ட்ரில யாருமே பொழைக்க முடியாது...]

இந்த சட்டம் இந்தியநாடு முழுவதும் நடைமுறைப் படுத்தனும்.. நம்ம கலாசாரத்தை மீடியா சீர்குலைக்காம இருந்தாலே போதும்... மத்தது எல்லாம், தன்னால விடியும்..



No comments: