Thursday, February 27, 2014

கடைசி வரை காலி டப்பா

வெறும் ஓசை ஒலியாகி, சத்தம் கானமானது.... ஒரு மாற்றம்.

அரும்பு மீசை காதலாகி, தாடி திருமணமானது ..... ஒரு மாற்றம்.

வந்தவளும் சரியில்லை வாயய்தவளும் சரியில்லை... வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை.. ஒரு மாற்றம்.

மேற்கு வடக்காகி, தெற்கு கிழக்காகி, பருவம் பாழானது.. ஒரு மாற்றம்.

வருஷம் போனா, வயசு போகுது, வாலிபம் போயும் வருத்தம் போகலியே... ஒரு மாற்றம்.

இதுவே நான் செய்த கடைசி தவறு,.. அது போனமாசம்-ன்னு பொழுது போகுதே.. ஒரு மாற்றம்.  

எத்தனை முறை முடிவு எடுத்தாலும், கடைசி நொடி வரை நிம்மதி இல்லையே.. ஒரு மாற்றம்.

அறிவியல் பூர்வமான ஒரு உண்மை...
உன் மனம் என்று எதுவும் இல்லை. ஏனெனில் நீ ஒரு காலி டப்பா 


No comments: