Thursday, February 27, 2014

தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வரை.

நான் வீட்டிலிருந்து பெங்களுருக்கு கிளம்பினேன்.
ஒரே பஸ்-ல் ஏறாமல், தர்மபுரி வந்து, கிருஷ்ணகிரி வந்து, ஓசூர் வந்து பெங்களூர் வந்தேன்.
தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வண்டியில் ஏறினேன். இடம் இல்லாத காரணம் ஒன்று, தனியார் வாகன மோகம் இரண்டு, வேகமாக செல்லக்கூடிய வாகனங்களில் பயணம் செய்ய எனக்கு ஆசை.....
பாதி தூரம் சென்றவுடன் ஒரு பெண் வாந்தி எடுத்து விட்டாள். நான் சற்றே தூரமாக நின்று கொண்டிருந்ததால் என் மீது படவில்லை.
ஆனால்., அப்பெண்ணைச் சுற்றியுள்ளவர்களின் மீது நல்லாவே பட்டுடுச்சு. அதுல ரொம்ப அதிகமா பாதிக்கப் பட்டவர், ஒருவர்.,
அவர் தன் மனைவி குழந்தைகளுடன் உட்கார்ந்து இருந்தார். அந்த வாந்திப் பெண்மணி அடுத்த ஸ்டாப் லையே இறங்கி விட்டார். நம்ம ஆளு கொஞ்ச நேரம் பொருத்து பார்த்தாரு, அப்புறம் காலை கொஞ்சம் சுத்தம் பண்ணலாம்-ன்னு அடுத்த ஸ்டாப் ல இறங்குனாரு., பட், அவரு சுத்தம் பண்ணிட்டு ஏற்றதுக்குள்ள டிரைவர் வண்டிய எடுத்துட்டாரு.... அவரோட மனைவி கொஞ்ச நேரம் கழிச்சு தான் ரியலஸ் பண்ணி சவுண்ட் கொடுத்தாங்க. பட் வி ஹவே க்ராசுடு சம் கிலோ மீட்டர்'ஸ். குழந்த வேற அழுதுகிட்டே இருனுன்தது.. நாங்க எல்லாம் சேர்ந்து கொஞ்சம் சமாதானப் படுத்தி கிருஷ்ணகிரி வரைக்கும் கூட்டிட்டு போயிட்டோம். பஸ் ஸ்டான்ட் வந்த வுடனே., எல்லோரும் சட்டு புட்டுன்னு இறங்கி ஓடிட்டாங்க., நான் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணி., பிளாட் போரம் ல இறக்கி விட்டேன். அவங்க கணவர் வரும் வரை கூட இருந்து வழியனுப்பலாம்-ன்னு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினேன். 30 மினுட்ஸ் ஆகியும் அந்த ஆளைக் காணோம். அப்புறம் மைக் ல அவர் பேரு சொல்லி கூப்பிடு பார்த்தேன். அந்த அம்மா-கிட்டே அவரோட போன் நம்பர் இல்லே. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு, அவங்க, அவங்களை சைக்கிள் ஸ்டான்ட் ல கொண்டு பொய் விட சொன்னாங்க. நானும் சரி-ன்னு அவங்களை கூட்டிட்டு நடந்தேன்.
கொஞ்ச தூரம் நடந்தவுடன், யாரோ யாரையோ அடிக்கற மாதிரி சத்தம் கேட்டது. நான் என்னடா-ன்னு திரும்பி பார்த்த., அந்த அம்மாவோட வீட்டுக்காரன் அவங்களை அடிச்சுட்டு கண்டபடி திட்டிட்டு இருந்தான். அந்த வார்த்தைகளை என்னால் இங்கே சொல்ல முடியாது. அப்புறம், என்கிட்டேய நடந்ததை சொன்னான். நான் அவன்கிட்டே, "நானும் அதே பஸ் ல தான் இருந்தேன்"-ன்னு சொல்லி அவங்க கிட்டே குழந்தைய ஒப்படைச்சுட்டு பஸ் ஏறினேன்.

என்ன உலகம்டா இது?
யாருமே கண்டுக்காம இருந்தவங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணினேன். எனக்கு நன்றி சொல்லலன்னாலும் பரவாஇல்லை ஆனா, அந்த ஆள்-ன்னால கண்டு புடிக்க முடியலன்னு அந்த அம்மாவை கண்டபடி திட்டுனது, எனக்கு புடிக்கல.
காரணம் என்னன்னா?, நாங்க பஸ் இறங்குன இடத்துலேயே, உட்காந்துட்டு இருந்தோம், ஆனா அந்த ஆளு சைக்கிள் ஸ்டான்ட் + பஸ் ஸ்டான்ட்-க்கு வெளியல எல்லாம் தேடிட்டு இருந்து இருக்கான்....
சரி வாழ்க வளமுடன்னு அவங்களை என் மனசுக்குள்ளே வாழ்த்திட்டு நான் என்னோட பயணத்தை தொடர்ந்தேன்.
இதுல ஒரு மணி நேரம் எனக்கு செலவானது தான் மிச்சம்.

No comments: