எனக்கு வடை கொடுத்த பெண்கள் ஏராளம் ஏராளம்!....
அவர்கள் அனைவரையும் என் மனதில் நிறுத்தி நடந்ததை எல்லாம் என்னால் இங்கே கொட்ட முடியாது.
அதனால ரொம்ப ரீசண்டா நடந்த ஒரு இன்சிடன்ட்-அ இங்கே அனத்துறேன்.
(டேய், எங்கேடா எல்லாம் எஸ்கேப் ஆக ட்ரை பண்றீங்க., என்னை கொஞ்சம் அனத்த விடுங்க...)
என்னோட ஆபீஸ் ல புதுசா ஒரு 4 பொண்ணுங்கல பார்த்தேன். அதுல பெஸ்ட்ஆ இருந்த ஒரு பொண்ணை கொஞ்சம் நல்லா உத்து பார்த்தேன்.
அது லஞ்ச் டைம்-ன்றதுனால எனக்கு முன்னாடி அவளோட குரூப் போயிட்டு இருந்துச்சு., நான் என்னோட குரூப்போடா அவங்களுக்கு பின்னாடி போயிட்டு இருந்தேன்.
அவள் சிரிச்சு சிரிச்சு அவளோட பிரண்ட்ஸ் கிட்டே பேசிகிட்டே போயிட்டு இருந்தா., பட் என்னை மட்டும் அவளோட ஓரக்கண்ணால எவ்ளோ தூரம் பார்க்க முடியுமோ அவ்ளோ பார்த்துகிட்டே பேசிட்டு போயிட்டு இருந்தாள்.
நாம யாரு?.... சிங்கமுல்ல?.....
கண்கள் இரண்டால்., உன் கண்கள் இரண்டால்..... பாட்டுல ஜெய் பண்ற மாதிரி , ஈ-ன்னு பல்லை இளிச்சுகிட்டே போயிட்டு இருந்தேன்.
அடுத்து நாளும் இதே மாதிரி தான் நடந்துச்சு.
சரி., கொஞ்சம் பேசி பார்க்கலாம்-ன்னு ஒரு ஸ்டெப் எடுத்து வச்சேன்; அப்போதான் அவளை நேருக்கு நேரா பார்த்தேன். லைட் ஆ ஒரு ஸ்மைல் விட்டேன்.
அவள் ரொம்ப கேவலமா முறைச்சு பார்த்துட்டு போனாள்.
இது என்ன, புதுக் கொடுமை-ன்னு நானும் பேசாம விட்டுட்டேன்.
அடுத்த நாள்-தான் எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது.....
அவள் அதே பிரண்ட்சோட, கெக்கே கெக்கே-ன்னு சிரிச்சு பேசிட்டு போயிட்டு இருந்தாள். நான் கொஞ்ச தூரத்துல இருந்து நோட் பண்ணினேன்.
அவள் பக்கத்துல இருக்கற அந்த அரை லுசைத்தான் பார்த்துட்டு பேசிட்டு வந்து இருந்தாள். ஆனா, அவளோட கண்ணு பின்னாடி வர்றவங்களை பாக்குற மாதிரி இருந்தது.
அடி கிராதகி., உனக்கு மாறுகண்ணா?
என்ன கொடுமை சார் இது?....
2 comments:
ippavavathu unakku purincjuthe...
நண்பரே நீங்க இதுல சீனியரு போல..:)
Post a Comment