Wednesday, May 12, 2010

ஓல்ட் பிரண்ட் நெவெர் சேஞ்சிங் பெர்சொனலிட்டி

நான் பக்கமா எங்க Industrial Visit Photographs-a Orkut-la share பண்ணி  இருந்தேன்.
அப்போ எல்லாம் எங்ககிட்டே digicam எதுவும் கிடையாது. பிலிம் ரோல் போட்டோ எடுத்து, அத develop பண்ணி maxi - snaps ஆல்பமா வச்சுக்குவோம். ,

எனக்கு பொழுது போகல-ன்னு அந்த பழைய ஆல்பத்துல இருக்கற போட்டோ-வை எல்லாம் என்னோட மொபைல் காமரல capture பண்ணி அதைத்தான் ஆர்குட்ல அப்லோட் பண்ணினேன்.

அதுக்கு, கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது.

ஒரு காலேஜ் மேட், அந்த போடோஸ் எல்லாத்தையும் பார்த்துட்டு, ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி, எனக்கு அந்த ஒரிஜினல் நேகடிவேஸ் எல்லாம் வேணும்-ன்னு கேட்டாள். (கிட்டத்தட்ட, ஒரு பத்து முறை கால் பண்ணி request  பண்ணினாள்)

சரி, பாவம் இந்த பொண்ணு ரொம்ப ஆசையா கேட்குது-ன்னு, நானும், என்னோட பழைய மூட்டைகளை எல்லாம் அலசி அந்த negatives i தேடி கண்டுபுடிச்சு கொண்டு வந்தேன்,

நாங்க 2 பேரும், பெங்களுருல வொர்க் பண்றதால, ஒரு நல்ல இடத்துல மீட் பண்ணலாம்-ன்னு யோசிச்சு, மாரத்தஹள்ளி -ல ஒரு ரெஸ்டாரன்ட்ல சந்திச்சோம்.

நல்லாத்தான் பேசிட்டு இருந்தாள். ஒரு அரை மணி நேரம் சாப்புட்டோம்.
:-)
பில்லு வந்துச்சு.

நான் இந்த பக்கம் திரும்பிட்டு, அந்த பக்கம் பார்த்தேன், ஆளைக்காணோம்!
ஹோடெலோட gate-kku வெளில போயி நின்னுகிட்டு இருந்தாள்.

அடி 7 1/2 , நீ இன்னும் திருந்தவே இல்லையா?

No comments: