Monday, May 10, 2010

முதல் கதை(கலை)ப்பயணம்

ன்னுடைய 21 வது வயதில், என்னுடைய முதல் சிறுகதையை எழுதினேன்.
(டேய் நீ இது வரைக்கும் அவ்வளவுதான்டா எழுதி இருக்கே!)

அந்த கதைய ஆனந்த விகடன் கட்டுரைப்போட்டி-க்கு அனுப்பினேன்.
(review பண்ணினவங்க பாவம்)

என்ன காரணத்தாலையோ அவங்களால அதை அங்கீகரிக்க முடில.
(டேய் வேணாம்., வயிதேரிச்ச்ள கிளப்பாதே!)

ஆனா அதனால நான் மனசு உடைஞ்சு போகல, மறுபடியும் வேற ஒரு போட்டி-க்கு அனுப்பினேன்.
(நல்ல மாட்டுக்கு ஒரு சூடு)

          மறுபடியும் எனக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கலாம்-ன்னு அவங்க நினைச்சு இருப்பாங்க போல, ஆனா நான் இந்த சில்லி மேட்டருக்கெல்லாம் கலங்குற ஆளா?
(மனுசனா பொறந்தா மானம், சூடு சொரணை எல்லாம் இருக்கணும், பட் நீ 2 unlimited  மீல்ஸ்- சாப்புடுற ஆளாச்சே!)

அடுத்த கட்ட நடவடிக்கையா, நானே என்னோட கதைய பிரசுகரிக்கலாம்-னு முடிவு பண்ணி, எங்க அப்பா கிட்டே பணம் கேட்டேன். 
(விழுந்து விழுந்து சிரிச்சு இருப்பாரே?)

ஒரு கதை மட்டும் பிரசுகரிக்க முடியாது, நீ இன்னும் நிறைய கதைகள் எழுது, எல்லாத்தையும் சேத்து  (பத்த வச்சரலாம்-ண்ணார?) பிரசுகரிக்கலாம் -ன்னு சொன்னாரு.
அந்த ஒரு கதைய எழுதவே நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். (படிக்கறவங்களோட பாடு யாருக்கு தெரியும்?) அதனால, மறுபடியும் ஒரு பெரிய நாவலா எழுதலாம்-ன்னு புது கருத்து தேட ஆரம்பித்தேன்.
(என்ன கொடுமை சார் இது?)

      அதுல எனக்கு ஒரு சின்ன confusion , crime novel  ஆ? இல்ல குடும்ப நாவலா? எழுதலாமன்னே எனக்கு தெரியல.
(டேய் உனக்கு முதல்ல எழுத தெரியுமா?)  

வீட்டுல உட்காந்து யோசிச்சா, ஐடியா கிடைக்காது-ன்னுட்டு ஏற்காடு போய், மான்போர்ட் ஸ்கூல் வாசல் முன்னாடி உட்காந்து, படுத்து, விழுந்து, பொரண்டு எல்லாம் யோசிச்சேன்!
(ஐயோ..யாரு பெத்த புள்ளையோ.. காப்பாத்துங்க சார்)

     நாலு டு ஐஞ்சு மணி நேரம் யோசிச்சவாட்டி, எனக்கு ஒரு புது ஐடியா தோனுச்சி. (ஆரம்பிச்சுடாண்டா)


முதல்ல குட்டி கதை எழுதி, அப்புறம் பெரிய கதை எழுதி, அப்புறம் நாவலா எழுதி, அப்புறம், .. அப்புறமா எப்படியும் பெரிய ஆள்ஆகத்தான் போகிறோம், அப்புறம் இந்த மணிரத்தினம், கெளதம் மாதிரி சின்ன சின்ன directors எல்லாம் என்னோட கதைகளை படமா எடுக்கறேன்--னு ஆடப் போறாங்க 
(இதை கேட்கறதுக்கு இங்கே யாருமே இல்லையா?)

        அதுக்கு பதிலா, நாமலே ஒரு படம் எடுத்தா என்ன? (சுத்தம்..)
ஹீரோவா யாரை போடலாம்? இப்போ சினி பில்டுல எந்த ஹீரோவும் அவ்வளவு வசீகரமா இல்லை. சோ, பெட்டர் நாமலே நடிசுக்கலாம்!
(நீ நடிப்பே, நடிக்கறேன்-ன்னு சொல்லிட்டு வேற எதாவது பண்ணுவே, ஆனா, எவன் பார்க்கறது..)

ஹீரோயினா யாரை போடலாம்? 
(வேண்டாம் இதோட நிறுத்திக்கோ, அப்புறம் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிச்சு போய்டுவாங்க)

நம்ம அழகுக்கும், அறிவுக்கும், குஷ்பு மாதிரி கொஞ்சம் லீனான பொண்ணுங்கள போட்டாதான் நல்லா இருக்கும்.

(என்னாது? குஷ்பு உனக்கு பொண்ணா? ஹையோ., இந்த கொடுமைய நான் எங்கே போய் சொல்லுவேன்?)

பட் ஓகே., I can manage with Nayan thaara.(வெளிய சொல்லிடதே., டிக்கி பஞ்சராயிடும்.)
          ஒரு குத்து பாட்டு வேணுமே? (குத்து வேணும்னா கிடைக்கும்) ஓபனிங் ல நான் அப்படியே ஓடி வர்றேன்., (தியேட்டர்ல யாருமே இருக்க மாட்டாங்கடா.,) 
அங்கே தான் ஒரு சஸ்பென்ஸ். இந்த பக்கம், நயன்தார ஓடி வரா, இன்னொரு பக்கம் சிந்து துலானி ஓடி வரா, 
(அவங்க 2 பேரோட பர்ஸ அடிச்சுட்டு நீ முன்னாடி ஓடுறியா?).

திடீர்-ன்னு ஒரு குத்து பாட்டு., அப்புறம் ஒரு குட்டி பைட்டு., அப்புறம், கொஞ்சம் பன்ச் டயலாக்ஸ்., அப்புறம் (கிளைமாக்ஸ் ஆ?)
கொஞ்சம் செண்டிமெண்ட், அப்புறம், டூயட் பாட்டு, அப்புறம் கொஞ்சம் லவ், அப்புறம் கொஞ்சம் பன்ச் டயலாக்ஸ்., அப்புறம் கொஞ்சம் கலவரம்.
அப்புறம் திடீர்ன்னு ஒரே இருட்டு. அப்புறம், கொஞ்சம் வெளிச்சம், அப்புறம் கொஞ்சம் "எதாவது"., அப்புறம் தான் கிளைமாக்ஸ். 

(ஹ்ம்ம்.,ஹ்ம்ம்.,அயைஎண் அயீஆஈஈஅ... மம்மி.... மம்மி.....என்னை இந்த நாய் கிட்டே இருந்து காப்பாத்து)

         இதுல பாருங்க,. படத்தோட மொத்த கதையுமே இந்த கடைசி சீன் பார்த்தா தான் புரியும். (Butterfly Effect -பட டைரக்டர் பாவம்-டா!)
திடீர் திடீர்-ன்னு சம்பந்தமே இல்லாம புதுப்புது திருப்பங்கள்., இது எல்லாத்துக்குமே நடுவுல, வடிவேலு இல்லாட்டி விவேக் காமெடிகள். 

(படத்துக்கு ஒரு காமெடியன் போதாதா?)

இந்த மாதிரி ஒரு படம் இதுவரைக்கும் யாரும் எடுத்ததில்லை-ன்னு எல்லோரும் மூக்கு மேல விரல் வைக்க போறாங்க. 

(ஆமா, அப்படியே உனக்கும் நெத்தில ஒரு காசு வச்சுர போறாங்க!)

          அப்புறமா பாருங்க, இவனுக்கு ஒப்பரும் இல்லை, மிக்காரும் இல்லை-ன்னு தமிழ் திரையுலக சரித்திரத்திலே எனக்கு ஒரு பெரிய இடமே கிடைக்க போகுது. 
(டேய், உன்னோட காமெடி-க்கு ஒரு அளவே இல்லையா?)

           இப்படிதாங்க என்னோட கலைப் பயணம் ஆரம்பிச்சுது.... இன்னும் என்னோட படத்துக்காக, ஒரு நல்ல கதையை தேடிட்டு இருக்கேன்.
உங்க கிட்டே இருந்தா எனக்கு ஈமெயில் பண்ணுங்க.

டபிள்யு டபிள்யு  டபிள்யு  பிச்சு டாட் காம் ;-)

1 comment:

Unknown said...

http://singamulla.blogspot.com/p/it-part-x.html

http://singamulla.blogspot.com/p/miss-it.html