Monday, July 13, 2015

மொன்னையன்ஸ்.. To whom ever it may concerns

அதாகப் பட்டது என்னவென்றால்,

நம்ம ஊருல ஒரு அற்புதமான மூலிகை விளையுது, அதோட ரெண்டு படி மாட்டுக் கோமியத்த ஊத்தி காய்ச்சுனா கிடைக்குற திரவத்த, மண் குடுவைல போட்டு, மூணு நாலு மூடி வச்சி, தேங்கி நிக்குற கசட காய வச்சி பொடியாக்கி, அத பசும் பால்ல கலந்து ஒரு மண்டலம் குடிச்சி வந்தா அது கேன்சர பரிபூரணமா குணப் படுத்துது-ன்னு வச்சிக்கோங்க,   

நாம எவ்ளோ பெருமையா சொல்லிக்குவோம்?

நாம எவ்ளோ விலை வச்சி விப்போம்?

நாம தலை நிமிர்ந்து வாழ்வோம்...

உலகத்தையே நம்ம கைல போட்டு வச்சிக்குவோம்.

படிச்ச சில விஞ்ஞானிகள் இத ஒத்துக்க மாட்டங்க, இல்லாத நொட்ட  சொல்லி கழிச்சு விட பாப்பாங்க. அதப் பத்தி நமக்கு கவலை இல்ல.

மக்களே ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க, வருசா வருஷம் புற்று நோய் மக்கள் மத்தில பெருக்கிட்டுதான் வருது,
உலக சுகாதார மையம் தடை விதிச்ச எல்லா பொருளும் இந்தியாவுக்கு இறக்குமதி ஆகிட்டேதான் இருக்குது.

நாமளும் தரம் கெட்ட  உணவா பார்த்து பார்த்து ரசிச்சு ருசிக்குறோம்.

புற்று நோய முற்றிலுமா அழிக்கும்  சக்தி வாய்ந்த மூலிகை நம்ம எல்லோர் தோட்டத்திலும் இருக்கு., அதுதான் இயற்கை உரம்.

எந்தக் கருமமும் சேர்க்காத உணவை நாம எடுத்துக்கிட்டாலே போதும், புற்று நோய் உட்பட பல நோய்கள் வராம நம்மள நாமே பாதுகாக்கலாம்.


பன்னாட்டு நிறுவனங்களோட கழிவ சாப்புடுறத நிறுத்திட்டு, இயற்கையா பார்த்து நம்ம ஊருல என்ன விளையுதோ, அத போட்டி பொறாம  இல்லாம, நாம பகிர்ந்து சாப்பிட்டாலே போதும்.

இத சொன்னா நம்மள...


1 comment:

மகிழ்நிறை said...

நெஜமாவே தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிக்க வேண்டிய விஷயம் தான்:) அருமை!! எந்த follower buttonனும் இல்லே!!!