Thursday, July 2, 2015

காக்கா முட்டை - தற்போதைய இந்திய நிலவரம்

அரசியல் பேசும் எத்தனையோ படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இது அதில் ஒரு தனி ரகம்.

இந்தியாவின் நிலைமையை எண்ணி கண்ணீர் சிந்தும் ஒவ்வொரு தமிழனும் காண வேண்டிய படம் காக்கா முட்டை.

இந்த படத்தில் வரும் எந்த கதா பாத்திரத்திற்கும் இயக்குனர் மணிகண்டன் பெயர் சூட்டவில்லை. ஏனெனில்,

இப்படத்தில் வரும்,
வெட்டப் பட்ட மரம் - நமது பாரம்பரியம்
இரண்டு சிறுவர்கள் - நீயும் நானும்.
அம்மா - பாரத மாதா.
சிறையில் இருக்கும் தந்தை - நமது வீரமும் ஆண்மையும்.
இறக்கும் பாட்டி - நமது கலாச்சாரம்.

காவல் துறை - நமது காவல் துறை,
மீடியா - நமது மீடியா,
அரசியல்வாதிகள் - நமது அரசியல்வாதிகளே..

மெசேஜ்:
இதுக்கும் மேல உங்கள யாராலும் காறித் துப்ப முடியாது..
திருந்துங்கடா டேய்.





No comments: