Friday, August 22, 2014

மரம் நடுவோம்..


இயற்கை நியதிப்படி ஒன்றை சார்ந்தே ஒன்று உயிர் வாழ்கிறது, இயற்கையின் விதிப்படி, உலகம் முழுவதும் வெறும் காடுகளாகவும் மரம் செடி கொடி புதர்களாகவும், பாலைகளாகவும், சோலைகளாகவும், கடலாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனும் மற்ற உயிரினங்களைப் போலவே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான்.
அவனுக்கு வேண்டியது எல்லாம் உணவு மட்டுமே., மரங்களில் இருந்து பழங்களையும் கீரை கிழங்குகளையும் தேவைப் பட்டால் ஒரு சில சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்ந்தான்.

மாற்றம் ஒன்று மட்டுமே நிலையான இயற்கை நியதிக்கு மனிதனும் விதி விலக்கல்ல., விங்குகளின் தோலை உன்ன முடியாது, ஆகையால் அதை வைத்து சுகாதாரத்திற்காக குறிகளை மறைக்கப் பழகினான். இது வாய் மூலமே குடிக்க உண்ண முடியும் என்று தோன்றிய அனிச்சை செயல்.

சிக்கி முக்கி கற்களின் மூலம் நெருப்பைக் கண்டு பிடித்தான், பின்னர் அதை வைத்து குளிர் காய்ந்தான்., இவை எல்லாம் இயற்கையே மனிதனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

நெருப்பின் பின் சக்கரம், வண்டி, வண்டியை இழுக்க மற்ற ஆநிரைகளை அடிமைப் படுத்தினான்.. இங்குதான் மனிதனின் முதல் தவறு ஆரம்பிக்கிறது.

அடிமைத் தனம் என்ற ஒன்றை மனித விலங்கு மற்ற விலங்குகளிடம் செலுத்த ஆரம்பித்தது... அன்று தொட்டு, இயற்கையின் போக்கு இந்த மனித விலங்குகளினால் பெரிதும் பாதிக்கப் பட்டு, மொழி, மதம் இனம் வன்மம், நாகரீகம் நகரமயம், முதலாளித்துவம், தொழிலாளித்துவம், அடிமைத் தனம், தீவிரவாதம்... என்று மனித சமுதாயம் அடைந்த பாதிப்புகளை விட இயற்கை சீரழிந்துள்ளது.

ஒட்டு மொத்த இயற்கையையும் துவம்சம் செய்து மனித விலங்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக போகங்கள் கூடிய விரைவில் முடியப் போகின்றன.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை எந்த அளவிற்கு மாசுபடுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே மாசுபடுதுகிறோம்.

இயற்கை தன்னை உருமாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்தது...
வறண்ட ஏரிகளில் மீண்டும் தண்ணீர் சுரக்க ஒரு சில தலைமுறைகள் ஆகலாம், ஆனாலும் ஏரி என்பது ஏரி தான். அதில் மண் கொட்டி மாடி வீடு கட்டுவது மனிதனின் முட்டாள்தனம்.

கடைசி சொட்டு தண்ணீரும் நச்சுண்டு, அமெரிக்காவின் ஆயுத பலமும், அரேபியாவின் எண்ணெய்  வளமும், ஆசியாவின் தங்க வளமும் ஒரு சொட்டு மழை நீருக்காக ஏங்கும் தருணம் மிகத் தொலைவில் இல்லை...

இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகாமல் இயற்கையை பேண நம்மால் முடிந்த ஒரு சில காரியங்களைச் செய்வோம்.


மரம் நடுவோம், மழை நீர் சேமிப்போம்...
வேதாத்திரி மகரிஷி பாணியில்,

எரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிய,
மக்கள் வளமாய் வாழ்க.

No comments: