Friday, March 21, 2014

MONEY....life expectancy

I have been worrying a lot about India nowadays....
we have had enough wealth but still begging for economic crisis.. poverty, food, shelter... etc.

Just let me ask one simple question.

why are we working for?
-Food...isn't it? 
at end of the day, all we need is just Food to fill our stomach. 
once hunger is over, we need a shelter to sleep, then to think of running a family, kids, education, work life balance, status symbol, savings, spending.. blah..blah.. blah...

what the hell is going on?
everyday, I confront lot of beggars...
everyday, I see small kids starving for food...
everyday, I read violent deaths in one or another corner of country...


scams... enormous crimes... Corruption in people mindset, corruption in lifestyle, corruption in government, corruption in law and order.. Corruption everywhere..

its all because of MONEY... MONEY... MONEY..

Here is my thought/ might be some adjustments required based on real life possibilities...

what if we give up the concept of paper currency / money and work for trading with grains and other commodities? 

what would I get as my paycheck?
2 sacks of Rice, 2 sacks of Wheat & other organic grains + special allowances 200 gm of dry fruits + incentive 500 gm of walnuts 

Let me go and buy vegetables in trade with grains

Let me pay his rent by 20kg of wheat

Let me save his grains in any bank and pay for his kids education

I am eligible to build only one house / flat. 

I am eligible for LPG, Gas and water with my ration card.

none could save more than certain limits of life expectancy.

we still work in an office, 
but our company would pay us in terms of grains/ fruits & vegetables / or some metals like gold, silver, copper. 

BUT NO PAPER Currency OR ELECTRONIC MONEY CONCEPT HERE

Here the first problem rings bell in our brain... 

-What does the Government would do? 

its a million dollar question, but my answer is simple and many fold. 
Government owns governance of activities, since we had taken out the concept of money, there wont be any crimes which are related to money.

of course, there would be crimes with respect to sexual harassment!... since police do not have any work with related to money and assets related crimes, they could handle these cases. 

-Still there are lot of clever people in our crowd, they never work, always escape from work and come only to get wages.
let them live in their way... managers would take care of them since there is no Money to buy such waste resources ;-)

-What if I fall in sick, What if I need to undergo a surgery?
same way., Since Government is taking care of all our activities, they could arrange a better treatment for us.

- No I don't trust Government hospitals, I want to do it in a reliable hospital...
Yeah, go ahead and do it, by trading few gold coins or diamonds...

-Where will I get gold and diamond?
That's the common men's mentality... What does bank do man?.. Go and apply a medical loan with doctor's certificate & bank could lend you... later to your operation come back and pay your loan.. Cool isn't it?

-No, I'm sorry I'm not comfortable with your statements... I would want to live in my luxurious way which i deserve now... Only money could make me feel safe, that's why I'm earning for
Neither Do I... but considering top most rich people and bottom most poor people, we have to do something to fix it.

let us trust government once, and see!.. they would own hospitals & staffs.. etc  there are no money.. so they are free from corruption.

those who really like to be doctor, and want to serve the people would only become doctor, they would save you... don't worry.

-OK, what about sex workers? alcoholics, drug addicts, tobacco consumers..?
since Government Owns governance of activities, it will Ban country wide tobacco, drugs, alcohols.. etc and of course will make a way to live for those sex workers... 

-No.......! I live in a cold place with less temperature, I need alcohol to survive
well in that case, you could get approval from your local collector and alcohol would be distributed in ration (which is the shop owned by government)

-What does other people will do? I have a work, I'm doing it. there are plenty of people who doesn't have any work... they simply stay in the street watching us
well, as I said early, Government owns governance of activities, it will initiate lot of projects & it will create employment for all its citizen. & moreover there is no free meals. if you want grains, you need to work.. so you would work and get your wages in terms of gold or grains...
  
-OK, what the hell we do with our current corrupted big fat politicians?
rule is a rule. its applicable for every living species in the planet. they would have to surrender every asset they hold to the government and start working with us. there wont be any election or change in government, since Army is executing the operations. one board of well versed team would control army with defined process (we can include six sigma or cmmi here no offense).

friends.. I want to address these such questions and analyze practical difficulties to get rid of money related issues. 
Kindly post your questions and lets discuss and try to address. one or other day, may be after a big natural disaster, human beings would realize, Money has no value to stop any disaster, it can only create more.

Thursday, March 20, 2014

புரியாத கேள்வி -1

இந்தியாவில் உற்பத்தியாகும் நெல்லும் கோதுமையும், ஆரியமும், கம்பும்.. இன்னும் இதர பல தானியங்களும், காய்கறிகளும், பழங்களும், நமது நாட்டில் உள்ள நூற்று முப்பது கோடி மக்களின் பசியைப் போக்க வல்லது...

இருந்தாலும் ஏன் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவில்லாமல் பிச்சை எடுக்கின்றனர்?

எனக்கு சத்தியமாக புரியவில்லை...
தயை கூர்ந்து விளக்குங்கள்

  

வசி...வசதி...அவதி

பெங்களூர்.
இன்றைய தேதி 20-மார்ச்-2014, நான் அறிந்த வரையில், ஒரு அடுக்கு மாடி குடி இருப்பிற்கு கொடுக்கப் படும் அதிக பட்ச வாடகை 40000/- ஒரு சில பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கலாம்.
குறைந்த பட்ச வாடகை 9000/- ஒரு சில பகுதிகளில் இன்னும் சற்றே குறைவாக இருக்கலாம். இது மட்டுமல்லாது பராமரிப்புக் கட்டணம் தனி.

அவரவர் வசதிக்கேற்ப சொகுசு வாழ்க்கை விற்பனைக்கு உள்ளது.
இந்திய பொருளாதாரமே உலகத்தின் சிறந்த பொருளாதாரம் என்று வர்த்தக மேதைகள் போற்றி உள்ளனர்.
-இதற்கான  தாரக மந்திரம் "சேமித்தது போக செலவு செய்" - இந்தியாவின் முதுகெலும்பு, நமது மக்களின் சேமிப்புக் கணக்கில் உள்ளது.

அதனால்தான் அனைவரும் பணத்தை தங்கத்தை வெள்ளியை, வைரத்தை, சொத்தை பதுக்குகின்றனர்.

அறியாமையும் சோம்பலும் புகுந்த கூட்டில் தெரியாமல் தோன்றுமே நோய் என்ற வள்ளுவரின் வாக்கு பிரதிபலிப்பதை எங்கும் காணலாம்.

ஒரு மென் தொழில்நுட்ப ஊழியரின் வங்கிக் கணக்கை நோக்கினால், வரிப்பணம், செலவு, ஆடம்பரம் மற்றும் இதர செலவுகள் போக மீதம் உள்ள தொகை சொற்பமே...

அனுபவித்து ஆண்ட வாழ்கையில் திருமணம் ஒரு திருப்பு  திருப்புகிறது....அவருடைய ஆசை கோபம் தாபங்கள் அனைத்தும் மாறி சேர்த்து வைக்க முனைகிறார்... (நான் இருபாலரையும் சாடுவதால் பன்மையில் அழைக்கிறேன்).

வாழ்க்கைத் துணையும் பெரும்பாலும்  ஒரே துறையில் இருப்பதால், பணப் புலக்கதிற்கும் சேமிப்பிற்கும் பங்கம் இல்லை.
வீடு வாசல் உரிமை கொண்டாடும் வெறித்தாண்டவம் ஆரம்பமாகிறது...
விளைவு நாற்பது லட்சம் கடன் வாங்கி அதனை முப்பத்தி ஆறு வருடம் என்பது லட்சமாக திருப்பி செலுத்துகின்றனர்.

நகரங்களில் வாழும் பெரும்பான்மை தம்பதியினர் மேற்கண்ட பிரிவில் உள்ளனர்.

ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு இன்னும் இதர பல உயர்வுகள் வீட்டுக் கடனை குறைந்த காலத்தில் முடிக்க உதவுகின்றது...
இங்கே மனிதனின் பேராசை ஆரம்பமாகிறது... அடுத்த முதலீட்டை ஆரம்பிக்கிறார்... தங்கம் வெள்ளி, வைரம், வீட்டு மனை அல்லது இரண்டாவது சொந்த வீடு.. என்று வாய்ப்புகளுக்கு குறைவே இல்லை.

என் படிப்பு,
என் வாய்ப்பு,
என் சம்பளம்,
நான் செலவு செய்கிறேன்...
இதை விமர்சனம் செய்ய நீ யார் என்று கேட்டால்,  என் பதில் பின்வருமாறு

சமீப காலத்தில் தாறுமாறாக உருளும் பணச்சரிவிற்கு காரணம் ஆயிரம் இருக்கலாம். அதில் மிகப் பெரிய ஒன்று நகர மக்களின் அசையாத சொத்துக் குவிப்பு.

நகர்புற வாசிகள், தற்சமயம் நகரின் ஓரப் பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளிலோ, அல்லது நகரின் வெளியே எழும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலோ, மிகக் குறைந்த விலையில் முதலீடு செய்கின்றனர். கண்டிப்பாக ஒரு சில வருடங்களில், முதலீட்டின் லாபம் முதலீட்டை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், பெருகி வரும் நகரமயமாகலும், மக்களின் பாதுகாப்பான முதலீட்டு பயமும்தான்.

ரத்தினச் சுருக்கமாக சொன்னால், எழுந்து நிற்கும் ஒவ்வொரு அடுக்கு மாடி கட்டிடமும், இந்திய பணவீக்கத்தின் அடையாளமே.

முடியும் என்பதற்காக சொத்துக்களை குவிப்பது,  நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களை கொள்ளை அடிப்பதற்கு சமம்.

ஒரு  பகுதியில் குடியிருப்புகளின் விலை மதிப்பைப் பொறுத்தே, வீட்டு வாடகை நிர்ணயிக்கப் படுகிறது.

மேற்கண்ட சொத்துக் குவிப்புகளினால், குடியிருப்புகளின் தேவை அதிகமாகிறது, அதனால் விலை ஏறுகிறது, வாடகையும் விண்ணைத் தொடுகிறது.

வசிப்பதற்காக குடியிருப்பு ஒன்றை கட்டுங்கள், வாங்குங்கள்... ஆனால், முதலீடு செய்யாதீர்கள்...

உங்கள் முதலீடு இன்னொரு நடுத்தர குடும்பத்தினை பாதிக்க வேண்டாமே?...
 

-நான் நாட்டின் மேல் அக்கறை உள்ள குடிமகன்.  

Wednesday, March 19, 2014

அப்பாவின் அறிவுரைகள்

அடுத்தவர் மனம் புண்படும் வார்த்தைகளைப் பேசாதே..

அடுத்தவர் பொருளுக்கு ஆசை கொள்ளாதே...

உடற்பயிற்சி செய்... உணவைத் தவிர்க்காதே...

இழப்பிற்காக வருந்தாதே, பணம் ஒரு பொருட்டல்ல... பாடத்தைக் கற்றுக்கொள்!

எல்லோரையும் நம்பாதே... உலகில் நல்லவர்கள் மிக குறைவு!...

பேரழிவின் பிரதிபலிப்பு கடன்-வட்டி, கொடுக்காதே.. வாங்காதே... 

புண்ணியம் தேடு... ஊரோடு ஒத்து வாழ் விதண்டாவாதம் தவிர்.

தர்மத்திற்கு கட்டுப்படு, கண்ணியம் தவறாதே...

வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்... குடும்பம் தழைக்கும்!

பொது வாழ்வில் உதவி செய், உபத்திரம் உருவாகாமல் பார்த்துக்கொள்.

அவுரு இன்னும் என்னென்னமோ சொல்லி இருக்காரு... 

எங்க அப்பா சொன்னபடி கேட்டு நடக்கணும்-ன்னு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. பட் என்ன பண்றது..? ஊழ்வினை அதோட போக்குலதான் இழுத்துட்டு போவுது. 

Tuesday, March 11, 2014

மதம்- மனிதன்- மக்கள்தொகை

இன்ன தேதியில் இது நடந்தது என்ற பதிவே வரலாறு.. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நேற்றைய நிகழ்ச்சி இன்றைய வரலாறு... ஆனால், ஒருவனின் வாழ்க்கை சாதனைகளே சரித்திரம்...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ?
பதில் சொல்லுங்க மக்களே...


சமீப காலமாக, நமது நாட்டின் மீதான வருத்தம் எனக்கு அதிக அளவில் எழுகிறது..
தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று எல்லோரைப் போலவும் என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை..

நாட்டில் நடக்கும் அத்துணை பிரச்சனைகளுக்கும் அரசியல் நிலவரம் தான் காரணம்..
சாதி மதம் இனம் மொழி என்ற எதை வைத்து வேண்டுமானாலும் அரசியல் நடக்கிறது...

மதம் என்பது மனிதனை ஒழுக்க நெறியில் செலுத்த உதவும் கொள்கைகளை உள்ளடக்கியது... ஆனால், இதில் வருத்தம் என்னவென்றால், கொள்கைகள் யாவும் மனிதர்களால் எழுதப் பட்டது.

உலகத்தில் எங்கும் இல்லாத வளம் இந்தியாவில் இருந்திருக்கிறது...
நம் முன்னோர்கள் கொண்ட ஆசையினால் உலகெங்கும் உள்ள செல்வங்களை இங்கே கொண்டு குவித்தார்கள்.

ஆனால், நாம் கடுமையான சாபத்திற்கு ஆளாகி இருக்க வேண்டும். இல்லையேல் தற்சமயம் இவ்வளவு துயரத்திற்கு அவதிப்பட வேண்டியது இல்லை. இந்திய தீபகற்பம் மிகவும் மோசமான சூழலில் உள்ளது.

மதம் என்ற பெயரில் தீவிரவாத சக்தியை சொந்த நாட்டிலே வளர்க்கும் கும்பல் ஒரு பக்கம்.

உலகெங்கும் எங்கள் மதம் மட்டுமே இருக்க வேண்டும்.. என்று கண்டோர், கேட்போரையெல்லாம் மத மாற்றம் செய்யும் கும்பல் ஒரு பக்கம்.

மதமே இல்லை என்று, இருக்கும் மத நம்பிக்கைகளை எல்லாம் வாயில் வந்த மொழியில் தூற்றும் கூட்டம் ஒரு பக்கம்.

நாடு இழந்து, வீடு இழந்து, சாலையோரங்களில் வாழும் ஏராளமான கூட்டங்கள் ஒரு பக்கம்...

அறிவே இல்லாமல் வெறும் கூலிப்படைகளையும் பண பலத்தையும் விதண்டா வாதம் செய்யும் திறமையும் மட்டுமே உள்ள அரசியல்வாதிகள் கொண்ட கூட்டம் ஒரு பக்கம்...

நடப்பதை எல்லாம் பார்த்தும், நாளை வெட்டப்படுவோம் என்று தெரிந்திருந்தும், ஆட்டு மந்தைகளாய் வாழும் சாதாரன அப்பாவி [ஓட்டு போடுவதற்கே பிறந்த] மக்கள் ஒருபக்கம்.. 

வயிறை மட்டும் நிரப்பி, தனக்கென ஒரு கூட்டை கடன் வாங்கி வாழ்நாள் முழுதும் வரி செலுத்தும் கணினித் துறை சார்ந்த இயந்திரங்கள் ஒரு பக்கம்..

மேற்கண்ட தொந்தரவுகளினால், என்ன செய்வது என்றே தெரியாமல், எனக்கும் இதற்கும் சமந்தம் இல்லை, நான் பிறப்பால் மட்டுமே இந்தியன்.. ஆனால் உண்பது, உடுப்பது, உறவு கொள்வது என்று அனைத்திற்கும்  மேலை நாட்டை பின்பற்றும் பெரும்பான்மையினர் கூட்டம் ஒரு பக்கம்...



செல்லும் திசையறியாது திக்குமுக்காடும் இளங் கன்றிற்கும் மேற்கண்ட பிரிவைச் சார்ந்த கூடங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

வளர வேண்டிய குழந்தைகள் வாடிக் கிடக்கின்றன...
உணவுப் பற்றாக் குறை..
கல்லாமை..
கடன் வறுமை...
அரசியல் வன்முறைகள்... அத்துமீறல்கள் 
இது எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம்....

ஆனா வீட்ல குழந்தைக்கு சோறு இருக்காது... பொண்டாட்டி ஏதோ வேலை செஞ்சு சம்பாதிக்கற காசையும்  புடுங்கி, கொண்டுபோய்  குடிக்கிறான் பாருங்க.. என்னால தாங்க முடியல...

தட்டி கேக்க வேண்டிய அரசாங்கமே ஊத்திக் கொடுக்குது...

என்னுடைய இயலாமைய நினைச்சு வருத்தப் படுறேன்...
இந்த மாதிரி ஒரு மோசமான நாட்ல பிறந்ததிற்காக வருத்தப் படுறேன்.

நான் கால வெள்ளத்தில் பின்னோக்கிச் சென்று, ப்ருத்விராஜனுக்கும் சம்யுக்தாவிற்கும் நல்ல முறையில் திருமணம் ஏற்பாடு செய்ய ஆசைப் படுகிறேன்... அவர்களின் கந்தர்வத் திருமணம், பின்னாட்களில் நடந்த சரித்திரச் சரிவிற்கு மிகப் பெரிய காரணிகளாக இருக்கின்றன.

சும்மா இருக்குற சங்கை ஊதி  கெடுத்த மாதிரி, உள்ளூர் வைஸ்ராய்களே சேர்ந்து, இந்திய கலாச்சாரம் என்ன என்று அறியாத ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர், வீரம் பொருந்திய மன்னனாகவே இருக்கட்டும், சொந்தமா நாடே இல்லாமல் நாடோடியாய் வாழும் வெளிநாட்டு மன்னனுக்கு ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க வைத்திருக்காங்க.

ஒரு சின்ன உதாரணம்... தற்சமயம் 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் சட்ட திட்டங்களோ, அரசியல் நிலைமையோ, பொருளாதாரமோ சரிஇல்லை என்பதற்காக, அமெரிக்காவை இங்கே வந்து ஆட்சி அமைக்க கூப்புடுவீங்களா?

உள்ளூர் நிலவரம் சரியில்லை... அதற்காக இந்திய கலாச்சாரம் என்ன என்று அறியாத ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தல் ஒரு சரியான தீர்வு அல்ல.. அதற்கான பின்விளைவுகளைத்தான் நாம் இப்போது நேரிட்டுக் கொண்டிருக்கிறோம்...

மதம் சார்ந்த மக்கள்தொகை பெருகி வருகிறது... இதற்கு, மதவாத, மதப் பெருக்கக் கொள்கைகளை இயற்றிய மதவாதிகளே காரணம்...

மதம் என்பது மனிதனின் மனதில் பரவ வேண்டியது...
விதவிதமான உணவுப் பண்டங்களாலும், கல்வி, கல்லூரி, மருத்துவ சலுகைகளாலும் ஈர்க்கப் பட வேண்டியது அல்ல.

மேலை நாட்டு மதத்தலைவர்களின் பேச்சுத் திறமை அபார சக்தி வாய்ந்தது... சாதாரன குடிகளின் பலகீனத்தை நல்லா தெரிஞ்சவங்க...
ரொம்ப சாமர்த்தியமா அப்பாவி ஏழை எளிய மக்களை ரொம்ப சுலபமா மதம் மாற வச்சாங்க... இன்னும் மாத்திட்டுதான் இருக்காங்க..

இந்து மதம் ஆயிரம் காலத் தொன்மை வாய்ந்தது...
அதில் இருக்கும் சாதிகளுக்கும், கிளை சாதிகளுக்கும் அளவே இல்லை எண்ணிக்கையில் அடங்காது...
நீங்கள் செய்வது எல்லாம் மூட நம்பிக்கை...
எங்கள் மதத்தை தழுவுங்கள்...
உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்...
நீங்கள் அனைவரும் சமமாகக் கருதப் படுவீர்கள்.. என்று கூறி பெரும்பான்மையான இந்துக்களை வேறு மதத்திற்கு மாற்றினார்கள்..,
கடைசியில், அந்த மேலை நாட்டு மதத்திலும் மேற்கூறிய சாதிகளும், கிளை சாதிகளும், சாதி உட்பிரிவுகளும்... எண்ணிக்கையில் அளவிட முடியாத அளவில் உருவாகி இருப்பதை சாதிச் சான்றிதல்கள் பறை சாற்றுகின்றன..

ஊரில் வசிக்கும் ஆயிரம் மக்களில் வருடத்தில் நூறு குழந்தை பிறக்கும் நாற்பது பெரியவர்கள் இறப்பார்கள்.
2001-ம் ஆண்டில் இருந்த 80% இந்துக்கள் தற்பொழுது இந்தியாவில் பாதிக்கும் மேல் வேறு மதங்களுக்கு மாறி விட்டார்கள் என்று சொன்னால், நம்பாமல் இருக்க முடியவில்லை.
இல்லை என்று வாதாடினால், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின், மத வாரியான அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் இன்னும் வெளியிட மறுக்கிறது என்று பதில் கூறுங்கள்...

போனத பேசி ஒரு புண்ணியமும் இல்ல. இனி என்ன செய்ய-ன்னு பருப்பு மாதிரி கேள்வி மட்டும் கேக்குறாங்கயா.. பதில் தெரிஞ்சா பண்ணி இருப்போமல்ல...

இந்தியாவின் மாபெரும் சக்தியான மக்கள்தொகையே இந்தியாவை முன்னேற விடாமல் தடுக்கும் தொல்லையாக இருக்கின்றது..

மக்கள் தொகையைக் குறைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்....

ஒரு மனிதனுக்கு எத்தனை மனைவி-ன்னு கணக்கு எடுக்கறத விட்டுட்டு, ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் இருக்கலாம்-ன்னு சட்டம் போடுங்க...

ஒரே குழந்தை போதும்-ன்னு குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கரவங்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுங்க... சிறப்பு சலுகைகளுக்கு உங்களுக்கு சொல்லியா தரணும் ?

அங்க சுத்தி, இங்க சுத்தி, எங்க வந்தாலும்., கடைசில அது இ.பி.கோ -வை மாத்தி எழுதுரதுலதான் வந்து முடியுது...

ஆமா... மாத்திதான் ஆகணும்.... வருஷம் ஒரு முறை காதலிய மாத்துறதுக்கு யாரும் இங்கே வருத்தம் தெரிவிக்கல... கடந்த நூற்றாண்டில் இயற்றிய சட்ட திட்தத்த மாத்த சொன்னா மட்டும் கோவம் வருதோ?

என்னால முடீலப்பா.....
எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும், வேதாத்திரி மகரிஷி இதுக்கு ஒரு மருந்து கொடுத்துட்டு போயிருக்காரு... தினமும் வாழ்த்துங்க..-ன்னு கீழ்க்கண்ட ஸ்லோகத்தை அருளிட்டு அவுரு போயிட்டாரு... அவர் போட்டுக்கொடுத்த ரூட்ல தான் என்னால நடக்க முடீல.

உலகப் பொது நல வாழ்த்து 
உலகமெல்லாம் பருவமழை ஒத்த படி பெய்யட்டும்...
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்...
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்..
பகுத்தறிவில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கழகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்..
கல்லாமை, கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்..
நல வாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி  வீசட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...

மறந்த சரித்திரம்... மறைத்த தந்திரம்

சுமார் ஐயாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு...
இந்திய மன்னர்கள் தங்களின் பராக்ரமங்களை உலகம்தோறும் விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்த்திக் கொண்டிருந்த காலம்..

 மழை என்றால் என்ன? செழுமை எப்படி இருக்கும் என்று தன வாழ்நாளிலே காணாமல் தவித்த மக்கள் கூட்டம் ....இந்தியா தவிர மற்ற நிறைய நாடுகள்ல இருந்துச்சு..  இவிங்க எல்லாத்துக்கும் இந்தியா மேல ஒரு கண்ணு..
நம்முளுக்குன்னு ஒரு சமயம் கிடைக்கும்.. அப்போ இந்தியாவ நாம கைப்பற்றி ஆளலாம்..ன்னு தினம் தினம் கனவு கண்டுட்டே இருந்தாங்க..

அதுல ஒருத்தன்தான் இந்த சரித்திர சாகச நாயகன்-ன்னு விஜய் மாதிரி காசு கொடுத்து பட்டப் பெயர் வாங்கின ஹீரோ. அலெக்ஸாண்டர்


எத்தனையோ வம்சங்களாக கிரேக்கர்கள் அடிபட்டு அவர்க்கள் இந்தியாவை பழி வாங்குவதற்காக பல வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்...
அவர்களின் வம்சாவளி வந்த அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலடம் சூளுரைத்தான்... [in the year 336 B.C.E]
நான் ஒரு நாள் இந்தியாவை என் காலடியில் கொண்டு வருவேன்...

பாவம், பயபுள்ள, கஷ்டப்பட்டு வந்து போரஸ் என்ற பஞ்சாப் மன்னர்ட்டே தர்ம அடி வாங்கி ,  இந்திய மண்ணில் விளைந்த ஒரு புண்ணிய அம்பினால் அடிவயிற்றில் தைக்கப்பட்டு, உசரு உனக்காச்சு கொசுரு எனக்காச்சு-ன்னு ஓடினான்..
ஓடுனவன் செத்தான்-ன்னும் தெரியல, பொலைசான்-ன்னும் தெரியல..

ஆனா, அதப்போயி நம்ம வரலாற்று ஆசிரியர்கள் அவனை ஒரு மாவீரனா சித்தரிச்சு பிரபலப் படுத்திட்டாங்க...

இந்தியா எவ்ளோ பெருசு-ன்னு யாருக்குமே தெரியாது..

சமீப காலத்துல (ஒரு அம்பது அறுவது வருசத்துக்கு) பாகிஸ்தான் பிரிஞ்ச மாதிரி நிறைய அண்டை நாடுகளின் தொகுப்பே இந்தியா..

வெறும் வாயில சொன்னா நம்ப மாட்டோம்.. எனக்கு ஆதாரம் வேணும்-ன்னு நீ கேட்டீன்னா,  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

Prof. Dinesh Agrawal 
Address: 156 Aberdeen lane, State College, PA 16801 USA 
Tel: (814)-234-3558 (Home), (814)-863-8034 (Office) 

Who had written the post "Alexander, The Ordinary"


போனத பேசி புண்ணியமில்ல,
பொறாம புடிச்சா கண்ணியம் இல்ல..
ஆனால் மக்களே,

நம் பண்டைய மன்னர்களின் வரலாறு மறுக்கப் படுகிறது.. மறைக்கப் பட்டிருக்கிறது.

எங்கே இவனுங்களோட முன்னோர்களைப் பாத்து இவனுங்களுக்கும் வீரம் வந்துட்டா, நாம அவ்ளோதான்-ன்னு பயந்து,
வரலாற்றை மாத்தி எழுத முடியாது, அதனால, புறக்கணிச்சுட்டாங்க..

பள்ளிப் புத்தகங்கள், ஒரு பாடத் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு இருக்கும். அந்தப் பாடத்திட்டத்தில், ஒரு தமிழ் மன்னரைக் கூட நான் படித்ததாக ஞாபகம் இல்லை. ஏன் என்று ஆராய்ந்தால், பாடத் திட்டம் ஆங்கிலேயர்களால் வகுக்கப் பட்டது, அதை யாரும் இன்னும் மாற்ற முன்வரவில்லை..
விடிய விடிய தமிழ், தமிழ்-ன்னு கூவி என்ன புண்ணியம்... தமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் இல்லையே?

ஒரு சின்ன உதாரணம்..
சோழர் கொடி பறக்காத போர்க் கப்பல் இல்லை,
அவை போகாத தீவும் இல்லை...

இராசேந்திர சோழர் உலகத்தையே ஆட்டிப் படிச்சவர்.. அவருக்கு இல்லாத வீரமும் கௌரவமும் அலெக்ஸாண்டருக்கு வழங்கப் பட்டு இருக்கு.
இதுக்கு காரணம் யாரு-ன்னா, நமது பெயரும் புகழும் வாய்ந்த, பொறுப்பில்லாத, கல்வி கேள்வி இல்லாத, ஒரு தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசியல்வியாதிகளே..

தஞ்சை-ல இராஜராஜ சோழர் ஒரு கோயில் கட்டாம விட்டிருந்தா, சோழர்-ன்னு ஒரு வம்சம் இருந்ததையே மறைச்சு இருப்பாங்க..

வடக்கில் ஹர்ஷவர்த்தனர் என்ற பெயரைக் கேட்டாலே கதி கலங்க வைத்த வீரர் பிறந்த புண்ணிய பூமி இது..

சத்ரபதி சிவாஜி வர்றார்-ன்னு சொன்னாலே ஒன்னுக்கு போற மன்னர்கள் ஏராளம்..

அடுத்தவன் நாட்டை கெடுக்கரதுல கை தேர்ந்த ஆங்கிலேயர்கள்.. இந்தியாவை விட்டு வெளியேறும் பொழுது, சும்மா போகல,
இவனுங்க காலத்துக்கும் அடிசுகிட்டே இருக்கட்டும்-ன்னு ரெண்டு நாடா பிரிவினைய  உண்டு பணிட்டு போயிட்டானுங்க..

அப்போ அவனுங்க பத்த வச்ச கொல்லி இன்னும் கொழுந்து விட்டு எரிஞ்சுட்டுதான் இருக்கு..
அவனுங்க அன்னைக்கு போட்ட விதைதான் இன்னைக்கு வெறுப்பு-ன்னு ஒரு பெரிய மரமா வளந்து காய் காத்து, கணியல, ஆனா ஊருபட்ட குட்டி போட்டு அங்கங்கே வெடிச்சு கிட்டே இருக்கு..


நீங்களும் ஆடுங்கடா, அதை வைத்து நாங்க அரசியல் பண்ணிக்கறோம்-ன்னு சாமர்த்தியமா, ஆட்சிக்கு வர்ற எல்லா கட்சிகளுமே.. டாஸ்மாக் மாதிரி உறுதியா இருக்காங்க..

இல்ல-ன்னு சொன்னா, மத நல்லிணக்கத்துக்காக, எந்த அரசாவது,  ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்து இருக்குதா? எங்கே, எந்த ஒரு பிரச்னை நடந்தாலும், அதுல கட்சிக்கு என்ன லாபம், எனக்கு என்ன லாபம், என் சின்ன வீட்டுக்கு என்ன லாபம்-ன்னு நினைக்கும் ஆட்கள் இருக்கும்வரை, இந்தியாவ, இன்னும் 2000 சுபாஸ் சந்திர போஸ் வந்தாலும் காப்பாத்த முடியாது..


Conclusion:

  1. தமிழ் மற்றும் இந்திய சரித்திர நாயகர்களின் பராக்ரமங்கள், பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட வேண்டும்.
  2. பொய்யான, வரலாறு பதிவுகள் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும்.
  3. பள்ளிகளில் மாணவர்களுக்கு மதம் சார்ந்த பிரார்த்தனை திணிக்கப் படக் கூடாது.

Thursday, March 6, 2014

தேன்மொழி

எனக்கு தமிழில் எவ்வளவோ எழுத வெண்டுமென்று ஆசை...
ஆனால் எழுதக் கொடுத்து வைக்கவில்லை..
[எனக்கு கூடதான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிக்கணும்-ன்னு ஆச... ]

அதாகப் பட்டது என்னவென்றால், ஒரு தமிழ்க் குடிமகனாகப் பிறந்தவன், தன்னுடைய வாழ்நாளில் சாதிக்க வேண்டிய சில ...
[டேய்.. நிறுத்து..இப்போ என்னா சொல்ல வர்ற?]

தேன்மொழி என் தேன்மொழி அவள் மொழி, தேன்மொழி...
[உன்னோட படைப்புத் தொல்லைக்கு ஒரு அளவே இல்லையாடா?]

என் தேன்மொழி, அவள் விழி மலர்விழி
காதலி அவள் என் காதலி..

மைவிழி, அவள் என்னைப் பார்க்கும் மார்கழி
பைங்கிளி பஞ்சை ஒத்த, பருவத்து சங்கிலி
[நீ ஒரு பெருச்சாளி.. அவ ஒரு செத்த எலி..]

என்னவள்..
தீராத வானத்தில் தினம் ஒரு நட்சத்திரம்...
காணாத வண்ணத்தில் தீட்டாத பெண் சித்திரம்...

தேன் தெவிட்டி, வாய் கசந்த உயிருக்கு
வாடாத வெண்ணிலா வெள்ளம்.
[ஸ்ட்ராபெர்ரி , பட்டர் ஸ்காட்ச் எல்லாம் இல்லையா?]

....இந்தக் கவிதை தொடரும்...

[இந்த உலகத்துலேயே, கவிதைக்கு டெலி சீரியல் மாதிரி தொடரும்...போட்ட ஒரே ஆளு நீதாண்டா.. எழுத முடீல-ன்னு ஒத்துக்கோ...  ]

Tuesday, March 4, 2014

நாட்டு நடப்பு...

ஒரு சாதாரணனின் அன்றாட மனநிலை-பிரதிபலிப்பு..

அதாவது மஹா ஜனங்களே... 
[யாருடா இவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த மிருகத்த எழுப்பி விட்டது..?]

நான் என்ன சொல்ல வர்றேன்னா...
[நீ ஒண்ணுமே சொல்ல வேணாம்..]

சமுதாயத்துல ஏகப்பட்ட அட்டூழியம் நடக்குது..
[ஆமா நீ எழுதுறது உட்பட]

நிம்மதியா தூங்க முடியல..
நல்லா சாப்புட முடியல 
[ஆங்... எங்கேடா இன்னும் மேட்டருக்கு வரலியே-ன்னு நினைச்சேன்..]

யார் யாரெல்லாமோ அரசியல்ல நிக்குறாங்க.. புதுசு புதுசா கட்சி ஆரம்பிக்குறாங்க..

பேஸ்புக்கு-ங்குறாங்க, டேட்டிங்-ங்கறாங்க..
[டேய், உனக்கே ஓவரா தெரியல.. நீயே  200 fake அக்கவுண்ட் வச்சிட்டு திரியுற..]

கலாசாரம் சீரழியுது..
மனைவிகளை கட்டுப் படுத்தவே முடீல... அடங்க மாட்டேன்குறாங்க..
[நீ எதுக்குடா அடுத்தவன் மனைவிய கட்டுப்படுதுற?]

விஜய் டிவி பாத்து நிறைய கெட்டு போறாங்க.. (மாமி)யாருக்கும் மரியாதை கொடுக்கறது இல்ல. 
எதிர்த்து பேசுறாங்க.. 
வீட்டு வேலைகளை எதுமே செய்ய மாட்டேங்குறாங்க... 
சினிமா, பார்க், பீச், ஷாப்பிங் கூட்டிட்டு போக சொல்லி தொந்தரவு கொடுக்குறாங்க..
கார், வீடு வச்சிருந்தா மட்டுமே கல்யாணம் பண்ணிக்குறாங்க..
இல்லைன்னா வாங்க சொல்லி உயிரை எடுக்குறாங்க..
[நீ எப்பவுமே ஞாயித்து கிழமை மட்டும்தான இப்புடி பொலம்புவ, இன்னைக்கு உனக்கு ன்னா வந்துச்சு?]

எல்லா விலையும் ஏறுது, விலைவாசிய கட்டுப்படுத்த முடியல..
[டாபிக்க மாத்தாத, மேட்டர் என்னன்னு மட்டும் சொல்லு  ]

.......என் பொண்டாட்டி, நான் சொல்ற பேச்சை கேக்க மாட்டேன்றா.. அவ அம்மா பேச்சை தான் கேக்குறா..
....
[இவ்ளோதானா... இது உனக்கு மட்டும் இல்ல சாணி மண்ட, தாலி கட்டுனவன் எல்லாருக்குமே இதே சிச்சுவேசன்தான்.. 
பொலம்பறத விட்டுட்டு, போய் மூஞ்சி கழுவீட்டு வந்து வேற வேலை ஏதாவது இருந்தா பாரு...]

....சிறிது நேரம் கழித்து ...

படிக்குற பசங்க எல்லாம் இப்போ அதிகமா காதலிக்குறாங்க...
[டேய், எங்கே அந்த மூஞ்சிய காட்டு...9-ம் கிளாஸ் லேயே 12 பொண்ணுங்க பின்னாடி சுத்தின நாயி இது, இப்போ வருத்தப் படுறியா...] 

இளைய சமுதாயம் சீர் குழையுது... அவங்கள வழி நடத்த யாரும் இல்ல..
[அதான், நீ இருக்கியே..]

சமுதாயம் உருப்படனும்-ன்னா அதுக்கு உடனடியா சில சட்டதிட்டங்கள மாத்தியே  ஆகணும்..
[எங்கே, என் கன்னுகுட்டி, நீ போயி மாத்து பாக்காலாம்.. ஜட்டி பணியன கூட மாத்த முடியாது, இவன்லாம் வாய் பேசுறான்..]

எந்த ஒரு மாற்றமும் மீடியா கிட்டே இருந்துதான் ஆரம்பிக்குது.. அதனால, சின்னத்திரை, வெள்ளித்திரை, விளம்பரம், தினசரி மற்றும் நாள், வார, மாதஇதழ்கள் உட்பட அணைத்து ஊடகத்திற்கும் டிரஸ் கோடு உடை கட்டுப்பாடு கொடுக்கணும்.. 
பெண்களை கவர்ச்சிகரமா, தரக்குறைவா எந்த ஒரு ஊடகமும் காட்டக் கூடாது... 
[அப்படீனா, சினி-மினி இண்டஸ்ட்ரில யாருமே பொழைக்க முடியாது...]

இந்த சட்டம் இந்தியநாடு முழுவதும் நடைமுறைப் படுத்தனும்.. நம்ம கலாசாரத்தை மீடியா சீர்குலைக்காம இருந்தாலே போதும்... மத்தது எல்லாம், தன்னால விடியும்..