நானு, ஓசூருக்கு போயி திரும்பி வந்தேனா,
அப்போ வழியில,
நான் மெதுவாத்தான் போயிட்டு இருந்தேன்..
எனக்கு எதிர்ல ஒரு லாரி வந்தது..
அந்த லாரியை மீத்துறேன்-ன்னு ஒரு சின்னப் பையன் என் காரை வந்து உரசிட்டான்...
அவனோட வண்டிக்கு ஒன்னும் ஆகல, அவனுக்கும் ஒன்னும் ஆகல. என்னோட வண்டிக்கு ஹெட் லைட் போயிடுச்சி.. பானட் ஒடுங்கிடுச்சு, டோர் தொறக்க முடீல... ஏகப்பட்ட சேதாரம்...
இப்போ, நம்ம பொதுமக்கள், மது மக்கள் அனைவரும் எங்கிருந்துதான் வந்தானுங்களோ தெரியல. ஒரு கூட்டம் கூடி எங்களை மிரள வச்சுட்டானுங்க....
நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேனுங்கறாங்க....
108-க்கு போன் பண்ணி, அது வரதுக்கு முன்னாடியே வேற ஒரு அம்புலன்ஸ் வச்சு, அந்த பையன கொண்டி போயி GH-ல சேத்தி-ட்டாணுங்க.
அடுத்த கட்ட நடவடிக்கையா காவல் துறை,
அவங்க வந்து என்னோட காரையும் அந்த எச்செல் சூப்பர் வண்டியையும் தூக்கிட்டு போயிட்டாங்க ...
இந்த கலவரத்துல என்னோட மொபைல் போனையும் காணோம் [இப்போதான் வாங்கினேன் Rs.16000]
அடுத்த நாள் காலையில அந்த பையன் யார்கிட்டேயும் சொல்லாம ஓடி போயிட்டான், விசாரிச்சதுல, அடி ஒன்னும் இல்ல சின்ன சிராய்ப்புதான். ஊர் பேர் முகவரி எதுவும் சரியா கொடுக்கல அந்த பையன் காலைலேயே கிளம்பிட்டான்ன்னு சொன்னாங்க...
காவல் துறை உதவி ஆய்வாளர் அவர்கள், இதை ஒப்புக்கொள்ள மறுத்தார்...
நாளைக்கு அந்த பையன் வக்கீலோட வருவான்.. யாரு பதில் சொல்றது?-ன்னு கேட்டார்...
இதுக்கு மாட்டரு என்ன-ன்னா லஞ்சம் 5000
ஒரு 24 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நானும் என் குடும்பமும் வீடு வந்து சேர்ந்தோம்.
இழப்பு மதிப்பீடு சுமார் 50000
மொபைல் 16000
போலீஸ் 5000
கார் ரிபய்ர் 25000 - இன்னும் பட்டறை-ல தான் இருக்கு...
இதுல ஒரு காமெடி என்ன-ன்னா, அது என்னோட மாமா காரு. ஹெட் லைட் டூம் மாத்துறேன், பெங்களூருல கம்மியா இருக்கும்-ன்னு நான் அவரோட காரை எடுத்திட்டு வந்தேன்.
டேய் நரி எங்கே ஒரு ஊளை விடு....
புதுசா மாதத்தின ஹெட் லைட் டூம்-தான் மொதல்ல உடைஞ்சது....
No comments:
Post a Comment